வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... தீபாவளிப் பரிசை நட்பூக்கள் இரசித்திருப்பீர்கள்..
நல்லெண்ணெய் குளியல், கங்கா ஸ்நானம் என்று நேற்றைய பொழுது இனிமையாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.. உங்கள் மகிழ்ச்சிக்கு கூடுதல் டாப் அப்பாக இந்த சித்திரக்கதையை என் சிறு பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள்..
நரகத்தின் எல்லையில்..இந்த கதையின் அடுத்த பாகமான தகிக்கும் நிஜங்கள் நம்மை வேறு ஆழமான சிந்தனைகளுக்கும் தளங்களுக்கும் எடுத்துக் கொண்டு போகிறது. வாசித்து அனுபவிக்க நிறைய வாய்ப்புள்ள இந்தக் கதையை காமிக்ஸ் பதிப்பகங்கள் நினைத்தால் புத்தகமாகக் கொண்டு வரலாம். இப்போதைக்கு நம்மால் இயன்ற வகையில் வாசித்து சிந்திப்போம்..
உலகெங்கிலும் அடக்குமுறை, வன்முறை, தீச்செயல்கள் நடைபெற்று வருகின்றன. அவரவருக்கு ஒரு நோக்கம், கொள்கை மற்றும் இலட்சியம். இந்த காரணங்களை வைத்துக் கொண்டு மனிதத்தை இழந்து போகும்போது நிகழும் ஒவ்வொரு நிகழ்வுமே கொடுமையாக மாறிப் போகிறது.. அப்படி ஒரு நிலைமைதான் தென் அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும்.. தம் இனத்தாரும் நோயாளிகள் என்று கைவிட ஆக்கிரமிப்பாளர்களும் எளிதில் கைப்பற்ற நேரும் பூர்வ குடிகளின் நிலைமை என்னாகும்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் இரண்டாம் பாகம் இரத்த வரிகளில் எழுதிக் கொண்டு போகிறது.. வாருங்கள்..தொடர்வோம்...
https://www.mediafire.com/file/npvki2ts8g64uog/Naragaththin_Ellaiyil_POngal_2021.pdf/file
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக