ஞாயிறு, 23 அக்டோபர், 2022

காந்த சுடர் மாயாவி_கலா காமிக்ஸ்_தீபாவளி_2022

அன்புள்ள கொண்ட இனிய காமிக்ஸ் நட்புக்கள் அனைவருக்கும், என்றும் நட்புடன் அகம் மகிழ , அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💓💓💓💓💓



இந்த ஆண்டு தீபாவளிக்கு காந்த சுடர் மாயாவி நம்முடன் தீபாவளி கொண்டாட வந்திருக்கிறார்.. வாருங்கள்.. வாசியுங்கள்.. ஜானி சித்திரக்கதை ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷ அறையில் இருந்து இந்த முறை வெளியாகும் இந்த நூல் நம் நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களது உதவியுடன் திரு. சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களது தொழில் நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் தங்கள்தீபாவளி பரிசாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.. எல்லாம் வாசகர்களால் வாசகர்களுக்காக வாசிப்புக்கென கொடுக்கப்பத்திருக்க பாலமாக நான்.. 

கலா காமிக்ஸ் 

கலா காமிக்ஸின் லோகோ.. 
இருபத்தைந்தே காசுகளில் அட்டகாசமான அதிரடியை ஆடித்தள்ளியிருக்கிறார்கள் அந்நாட்களில்.. 
திரு. ராஜா அவர்களின் ஓவியத்தில் கடத்தல்காரர்கள் நகரான கடற்கரைப் பட்டிணம் மே நகரில் அதிரடி துவங்குகிறது.. 
வந்த உடனே வெடியைப் போட்டு தீபாவளி கொண்டாடுகின்றன  விமானங்கள்..  
படுபயங்கரமான விமானத் தாக்குதல்.. கைக்கடிகாரம் மூலம் மாயாவி காந்தனின் செய்தி.. விமானத்தைப் பற்றித் தொங்கியபடி சாகசம் 

காந்த சுடர் மாயாவியின் அதிரடியில் கடத்தல்காரர்கள் கூட்டம் தெறித்து ஓடி சிக்கித்தவிக்கிறது.. இறுதியில் நடந்தது என்ன?
விடை அறிய வாசியுங்கள் விலையில்லா சித்திரக்கதை ஆல்பம் இந்த காந்த சுடர் மாயாவியை.. உங்களுக்கு எங்கள் தீபாவளிப் பரிசு இது.. 
இதனை வெளியிட்டு அந்நாட்களில் பரபரப்பூட்டிய திரு. எம்.இ. பழனியப்பன் அவர்களது மதுரை அலுவலகம் இயங்கி வந்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன..   
எதிர்காலத்தில் யாரேனும் கலா காமிக்ஸின் மொத்த படைப்புகளையும் கூட நமக்காக கொடுக்க முன்வரலாம்.. அதை ஊக்குவிப்போம்.. ஆவணங்கள் முந்தைய வரலாற்றின் தடங்கள்.. மறவாதீர் ஒருநாளும்.. 
இந்த சித்திரக்கதையை பிடிஎப் வடிவில் வாசிக்க: 
என்ஜாய் தோழமை உள்ளங்களே.. 
ஹேப்பி தீபாவளி.. 


 

  

9 கருத்துகள்:

  1. அருமைங்க நண்பரே! தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Arumayana muyarchi waalthukkal diwali wishes - Lokeshwar

    பதிலளிநீக்கு
  4. Happy Deepavali Force...😀😀😀

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...