திங்கள், 10 ஏப்ரல், 2023

2023_திருவண்ணாமலை புத்தக திருவிழாவில் காமிக்ஸ்_ஒரு விசிட்

 அன்புள்ள வாசக வாசகியருக்கு வணக்கம். 

இன்று ஒரு வாய்ப்பு அமைந்ததும் உடனே குடும்பத்துடன் புத்தக திருவிழாவுக்குக் கிளம்பி விட்டோம். புத்தக திருவிழா 09.04.2023 முதல் 19.04.2023 வரை நடைபெறுகிறது. நூறுக்கும் மேற்பட்ட பதிப்பக ஸ்டால்களில் ஏகப்பட்ட புத்தக அணிவகுப்புகள்.. நம்மை வரவேற்கின்றன.. 

வரவேற்கும் நுழைவாயிலில் யானை பொம்மைகள்  மிகவும் ஈர்த்தன. 
சிறைத்துறை சார்பில் அனைவரையும் வரவேற்பதுடன் சிறைக்கான அன்பளிப்புப் புத்தகங்களை பெற்றுக் கொள்ள ஆர்வத்துடன் சிறைத் துறையினர் காத்திருந்தனர். 
வெவ்வேறு பதிப்பகங்களும் ஆங்கில சித்திரக்கதைகளை விற்று வருவதை காண மகிழ்வாக இருந்தது. 
மாங்கா வகையில் இருந்தும் மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ் வகைகளில் இருந்தும் விதவிதமான சித்திரக்கதைகள் அரங்கில் காணக் கிடைத்தன.. 
பிரபல தமிழ் எழுத்தாளர்கள் அன்பு அண்ணன் ராஜேஷ் குமாரில் துவங்கி நாவல்களாக கண்ணுக்கு இனிமையாக காணக் கிடைத்தன.. 
புத்தக ஸ்டால்களில் அவ்வப்போது கூட்ட நெரிசலும் அவ்வப்போது சற்றே இடைவெளிகளும் இருந்தன.. காற்றோட்டத்துக்கு ஏர் கூலர் மற்றும் மின்விசிறிகள் மட்டும் அமைக்கப் பட்டிருந்தன..  
நிற்க.. நமது லயன் முத்து ஸ்டால் எண்22 ல் 
சகோதரி ஜோதி பில்லிங் பணிகளில் செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருந்தார். வாசக வாசகியர் அவ்வப்போது புத்தகங்களை இரசித்து எடுத்துப் புரட்டிப் பார்த்து ஆர்வத்துடன் பேசிக் கொள்வதையும் காண முடிந்தது. 
  
புத்தக ஸ்டால் மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  

வாசகர்கள் வாசகியர் வருகையில் அவர்களுக்கு காமிக்ஸ் குறித்தும் அந்த நூல்களின் வகைகள் குறித்தும் சகோதரி ஜோதி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். 
மினி லயனில் வந்து அமர்க்களப்படுத்திய ஷேர்லக் ஹோம்ஸ். முன்னொரு காலத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த அபூர்வமான புத்தகம் இப்போது லயன் மறுபதிப்பு செய்து மிக அழகான வண்ணத்தில் பதிப்பித்து இருக்கிறார்கள்.. 
ராஜா ராணி ஜாக்கி எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பொக்கிஷ சித்திரக்கதை என்றால் மிகையாகாது. 

நமது தமிழ் காமிக்ஸ் வாசகர் வட்டம் சார்பில் இரு நல்ல அறிவுரை கூறும் புத்தகங்களை வாங்கி சிறைத்துறைக்கு பரிசளித்து வீடு வந்து சேர்ந்தோம்.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.. 








  

















 
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...