திங்கள், 17 ஏப்ரல், 2023

டெக்ஸ் vs ஸாகோர் பூபதி



 டெக்ஸ் vs ஸாகோர்! 


*பிதாமகரும், தலைமகன்களும் ஒரு சேர கூட்டணி அமைத்த சாகசம் இது*


V காமிக்ஸ் குழுமத்தின் இந்த மாத வெளியீடு ஒரு நான்-ஸ்டாப் ஆக்சன் விருந்து! 


கதையை படிக்கும் முன்பாகவே, டெக்ஸும், ஸாகோரும் இணைந்து  வரும் இந்த சாகசத்தில் ஹீரோயிசம் மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தேன்... 


*ஆனால், கதைக்கு துளியும் தொடர்பில்லாத இழைகள் இங்கே இல்லை என்பதே உண்மை!*


செவ்விந்தியர்களை அவர்களுடைய அன்னை பூமியில் இருந்து துரத்தியடிப்பதை சொல்லும் அழுத்தமான கதைக்களம். இதற்கு முன்பு டைனமைட் ஸ்பெஷலில் வந்த மாதிரி அழுத்தம் இது...


ஆடாம் க்ரேன், செவ்விந்திய ஏஜெண்ட் பாப் நெய்பர்ஸ், தனது இனத்துக்காக போராடி கோழைத்தனமாக வீழ்த்தப்படும் செவ்விந்திய தலைவர்கள் கிரே உல்ப் மற்றும் பெட்டா நோஹானே என அனைவருமே இந்த கதையில் சாதாரணமாக உலவிச் செல்லும் கதை மாந்தர்கள்!


ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து செய்த அருமையான சாகசம் இது. *ஸாகோரின் தீர்க்கதரிசனமும், டெக்ஸின் வீரியமும், பிதாமகர் போசெல்லியின் கதை சொல்லும் திறன் மூலமாக இங்கே எம்மை முழுதாக கட்டிப்போட்டு விட்டது!*


Rating : 10/10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...