புதன், 30 அக்டோபர், 2024

தங்கப் புதையல்_ஆல்வார் மேயர்

 வணக்கம் வாசகர்களே.. சென்ற பதிவில் ஆல்வார் மேயர் பற்றிப் பார்த்தோம் அல்லவா.. அவரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் பிரிவினையே சாரும். தங்கப் புதையல் என்கிற இந்த கதையை 1987 ஏப்ரல் மாதம் வெளியிட்டனர்.. ஸ்பெயின் தேசத்தில் இருந்து அமெரிக்காவை நோக்கிய தேடுதலில் பேரு தேசம் ஸ்பானிஷ்காரர்கள் அடிமை தேசமாக உருவெடுத்தது. அங்கே தங்க நகரம் எல் டோரோடோ போன்ற் அஸ்டெக் மாயன் கலாச்சாரங்களையும் அவர்களின் பொக்கிஷங்களைத் தேடியும் படைகள் திரிந்த திகில் காலம் அது. அப்படி ஒரு தேடுதலுக்கு கொடூரனான ஒருவன் கிளம்ப அவனுக்கு வழிகாட்டியாக செல்கிறார் ஆல்வார் மேயர்.. அதன் பின் நடந்தது என்ன? தொடர்கிறது கதை..                                     










அநீதி என்றும் வெற்றி பெறாது என்கிற மையக்கருத்தைக் கொண்ட ஆல்வார் மேயரின் கதைகள் ஆங்கிலத்தில் வாசித்து மகிழ புத்தக ஆர்டர் கொடுக்க சென்ற பதிவில் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.. 
அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.. 




2 கருத்துகள்:

  1. காமிக்ஸில் தங்களின் தேடுதல் ஆர்வத்தை நினைத்துப் பார்க முடியாத அளவுக்கு இருக்குமென எதிர்பார்கவில்லை. தங்களின் தேடுல் தொடர்க எங்களுக்கும் சேர்த்து தேடுகிறீர்கள் நன்றி. (எனது தேடுதல் நாவலில் ஈடுபட்டுவிட்டதால் காமிக்ஸ் படிப்பதோடு முடிவடைந்து விடுகிறது. )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி. நாவல்களில் தனித் தேடல்கள் தொடரட்டும்.. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...