வியாழன், 31 அக்டோபர், 2024

பீட்டர் பைப்பர்_அறிமுகம்

 வணக்கம் தீபாவளி கொண்டாடி மகிழும் வாசகர்களே.. 

இந்த நாள் இனிமையான தினமாக உங்களுக்கு அமைந்து கொண்டிருக்கும் என்கிற மகிழ்வலைகளுடன் இந்த பதிவினை இடுகிறேன். உங்களுக்குக் குழலூதும் கண்ணன் பிடிக்கும் அல்லவா? 

விக்கிபீடியா தகவல் 

இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.[1] "என் இறப்புக்கு யாரும் அழக்கூடாது; வருத்தப்படக்கூடாது; என்னுடைய இறப்பை அனைவரும் மகிழ்வாக கொண்டாடவேண்டும்; 16 வகை பலகாரம் படைத்து கொண்டாடவேண்டும்" என்று கூறியுள்ளார் நரகாசுரன்.

ஆக இன்றைய தினம் நல்லதொரு மகிழ்வான தினமாக அமைய வேண்டும் என்பது குழலூதும் கண்ணனின் செய்தியும் கூட.. இதோ பீட்டர் பைப்பரும் கூட குழலூதும் சிறுவன்தான்.. 

பீட்டர் பைப்பர் என்கிற சிறுவனிடம் மந்திரக் குழல் ஒன்று உள்ளது. அதனை ஊதி மந்திரப் பேனாவால் வரைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கும்போது ஏற்படும் கலாட்டாக்கள் என்னவென்று இந்த கதையில் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள்.. 

கூடுதலாக இதனையும் தெரிந்து கொள்ளலாமே.. 

"கி. பி. 1284-ஜூன் 26 ஆம் தேதி-செயின்ட் ஜான் மற்றும் செயின்ட் பால் நாள்-130 குழந்தைகள் – ஹேமலினில் பிறந்தவர்கள்-பல வண்ண துணிகளை அணிந்த ஒரு பைபர் குழலூதி செல்ல நகரத்திலிருந்து வெளியேறினர் செயின்ட் கோப்பன்பெர்க் அருகே கல்வாரியைக் கடந்து சென்ற பிறகு அவர்கள் என்றென்றும் மறைந்துவிட்டனர்.

பைப்பர் ஊர் ஊராக சென்று குழலூதி பணம் பெற்று செல்பவன். அப்படி இருக்கையில் ஒரு ஊரில் காசு தராமல் அவமானப்படுத்தி விட்டனர் என்பதால் அந்த ஊரில் எலிகளை குழல் ஊதி ஏவி விட்டதாகவும், அந்த ஊரின் சிறுவர் குழாமை தன்னுடன் அழைத்து சென்று விட்டதாகவும் கதை போகிறது.. 

எனது தீபாவளி வாழ்த்துக்களுடன் உங்கள் நண்பன் ஜானி.. 


2 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...