வணக்கங்கள் அன்பு வாசகர்களே..
குறித்துக் கொள்ளுங்கள்..
திருவண்ணாமலை புத்தகத் திருவிழா...
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில், 11 நாட்களுக்கு புத்தகத் திருவிழா... வருகின்ற 14-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முடிந்தவர்கள் வாருங்கள்..
ஆபிரகாம் லிங்கனை ஸ்கெட்ச் போட்டு திட்டம் போட்டு பக்காவாக வில்கின்சன் பூத் என்ற நடிகனை வைத்து தூக்கி விடுகிறார்கள்
இந்த வரலாற்றை மையமாக வைத்து தலைநகரில் தலைமகன் என்கிற டெக்ஸ் சாகசம் லைன் காமிக்ஸ் 462வது இதழாக மலர்ந்துள்ளது 160 ரூபாயில் கரடு முரடான வன் மேற்கையும் அதன் கொடூரமான மனிதர்களையும் லட்சிய புருஷர்களையும் அநியாயமான சதி திட்டங்களையும் அழுத்தமான வில்லன்களையும் விளாவாரியாக கூறிக்கொண்டே போகிறார் நிஸ்ஸி.. அதனை மெருகூட்டுவது போல உயிரைத் தேடி ஓவியர் புகழ்பெற்ற ஜோஸ் ஆர்டிஸ்.. பரபரப்புக்கு கேட்கவா வேண்டும்..
கதை சீராக வாஷிங்டனை நோக்கி பயணிக்கிறது ரயிலுக்குள்ளேயே ஒரு கொலை பிறகு ரயிலை நிறுத்த ஒரு பாம் ஸ்கெட்ச் நமது டெக்ஸ் ஜோடிக்கு..
தவிர்த்துக் கொள்ள முடியாத அதி முக்கியமான கதை இந்த "தலைநகரில் தலைமகன்.."
ஆபிரகாம் லிங்கனை கொன்ற பிறகு பூத் என்னவானான்? ஒருவேளை பூத் ஏதாவது தடயம் துப்பு விட்டுவிட்டு போயிருந்தால் அது ஒரு காலகட்டத்தில் வெளிவர முயற்சிக்கும் என்றால் அது வெளிவராமல் தடுப்பதற்கு எத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதில் ஒன்றில் இடையூறாக டெக்ஸ் ஜோடி களம் இறங்கினால் என்னவெல்லாம் நடக்கும் என்று தங்கள் கற்பனை ரயில்களையும் குதிரைகளையும் தட்டிப் பறக்க விட்டிருக்கிறார்கள் வரலாற்றில் பூத் என்ற நாடகம் நடிகன் ஆபிரகாம் லிங்கனை கொன்ற சம்பவம் உண்மை அந்த சம்பவத்தை வைத்துக் கொண்டுதான் எத்தனை எத்தனை கதைகள் வரலாற்றின் முக்கியமான ஒரு புள்ளியாக அந்த கருப்பு தினத்தை இது போன்ற கதைகள் தான் அவ்வப்போது நமக்கு நினைவூட்டுகிறது இங்க இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ இது போன்ற முக்கியமான ஒரு கருப்பு தினத்தை மையமாக வைத்து எந்த கதையை எழுதினாலுமே அது எதிர்ப்புக்கும் பிரச்சனைக்கும் தான் வழிவகுக்கும் ஆனால் அமெரிக்காவில் இப்போது இருக்கும் பிரசன்ட் பிரசிடெண்டையே கலாய்க்கும் வல்லமை படைத்தவர்கள் அமெரிக்கர்கள் அவர்களை தாண்டி அவர்களின் உறவின் முறையாரான பிரிட்டிஷார் ஐரோப்பிய நாடுகள் உலக நாடுகளின் தலைவன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவை அவ்வப்போது கதைகளில் புரட்டி போட்டு தான் வருகிறார்கள் அதற்குத் தகுந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சிவப்பு ஹல்க்காக அமெரிக்கன் பிரசிடெண்ட்டையே உருமாற்றி அமர்க்களம் படுத்துகிறார்கள் வாருங்கள் அனைத்தும் ரசிப்போம் ரசிக சிந்தனையுடன் வாசக நட்புடன்
என்றென்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக