வெள்ளி, 26 செப்டம்பர், 2025

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..

 வணக்கங்கள் அன்பு வாசக நட்பூக்களே.. 

         பல்வேறு பணிகளுக்கிடையில் அரியதொரு புத்தகத்தின் அபூர்வமான தொடர் ஒன்றை வாசித்து மகிழ சிறிது நேரம் கிடைத்தது.. அந்த தொடர்தான் விநோதக் கொலையாளி.. முத்து காமிக்ஸ் வாரமலரில் அருமையாக வெளியிடப்பட்டு பின்னர் முழுமையும் இணையத்தில் கிடைத்தாலும் கூட இன்றுதான் இந்தக் கதையை வாசித்து மகிழ்ந்தேன்.. தொடர்ந்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் சிறு ஆசை... ஏற்கனவே நூல் வடிவிலும், இணையத்திலும் வாசித்து விட்ட நண்பர்கள் ஸ்கிப் செய்து விடலாம்.. புதிய வாசகர்களை எப்படியேனும் சித்திரங்கள் பக்கம் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்கிற காரணத்துக்காக அவ்வப்போது என் வலைப்பூவில் கொண்டு வந்து மணம் வீசச் செய்வது என் வாடிக்கை..யாராயினும் ஏதேனும் வருத்தங்கள் அடைந்தால் ஜஸ்ட் ஒரு செய்தி அனுப்பினால் உடனே பதிவை நீக்கி விடுவேன். ஆகவே நம் நட்பை முன்னிட்டு இந்த தொடரை வாசிக்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.. புதிதாக வாசிப்பவர்கள் மட்டும் தங்கள் கமெண்ட்ஸ் அனுப்புங்கள்.. நன்றி. 

ஒரு காக்கைக்கா மருத்துவர் அலறுகிறார் என்றால் நீங்கள் இன்னும் காக்கையிடம் வம்பிழுத்ததில்லை என்று அர்த்தம்..அதன் கூடு இருக்கும் திசையில் சென்றதில்லை என்று அர்த்தம்..அதன் முட்டை என்ன வண்ணத்தில் இருக்கும் என்று ஆராய மரத்தின் மீதேறி அதன் கூட்டை எட்டிப் பார்க்கவில்லை என்று அர்த்தம்.. சும்மாவேனும் கல்லைத் தூக்கி அதன் மீது எரியவில்லை என்று அர்த்தம்.. இவை அனைத்தையும் செய்து காக்கை உங்கள் தலையில் வந்து ஒரு கொத்து விட்டிருந்தால் வாருங்கள் வாசக நெஞ்சமே.. நீங்க நம்மாளு.... 
ராணி காமிக்ஸில் வெளியாகி மிரட்டிய கதை ஒன்று இருக்கிறது..விசித்திரப் பறவைகள்.. நினைவிருக்கிறதா? கமெண்டில் பதிவிடலாம்.. நன்றி.. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..

 வணக்கங்கள் அன்பு வாசக நட்பூக்களே..           பல்வேறு பணிகளுக்கிடையில் அரியதொரு புத்தகத்தின் அபூர்வமான தொடர் ஒன்றை வாசித்து மகிழ சிறிது நேரம...