சனி, 27 செப்டம்பர், 2025

ஆயிரம் தலை கேட்கும் அதிசய மாயாவி-திரு.K.V.கணேஷ் பிறந்த தின ஸ்பெஷல்

 அன்பிற்கினிய நண்பர் திரு.கேவிஜி என்று அழைக்கப்படும் kv.கணேஷ் அவர்களது பிறந்ததினம் இன்று.. சென்னையை மையமாகக் கொண்டு தன் வாழ்வில் பல சாதனைகளை செய்து வரும் அண்ணன் கேவிஜி இன்னும் பல சிறப்பான நிகழ்வுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் வாழ்வில் நிறைவாக அடைய இறைவனை வேண்டுவோம்.. 


மொழிபெயர்ப்பாளர், சக வாசகர், நண்பர் திரு.kv.கணேஷ். 

இனிய இந்த நிகழ்வைக் கொண்டாடி மகிழ நம் வாசகர் வட்டத்துக்கும் அவருக்கும் சிறு அன்பளிப்பாக என்னால் இயன்ற சிறுவர் நாவல் ஒன்றைப் பகிர்கிறேன்.. 
ஆயிரம் தலை கேட்கும் அதிசய மாயாவி.. 1982ம் ஆண்டில் ரூ.1.25 (ஒரு ரூபாய் மற்றும் நாலணா என்போம்) விலையில் வசந்தி பப்ளிகேஷன் சார்பில் 29வது வெளியீடாக மலர்ந்து பின்னர் ஒரு காலத்தில் நம் அன்புக்குரிய நண்பர்களால் தேடிப்பிடித்து விலைக்கு வாங்கப்பட்டு அதனை ஸ்கேன் வடிவில் மாற்றி தேடலில் ஈடுபட்டுவரும் சக வாசகரான என்னுடன் பகிரப்பட்ட அபூர்வமான புத்தகம் இது. நண்பர்கள் டெக்ஸ் சம்பத், ரஞ்சித் இருவரையும் இவ்விடம் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.. 

           இந்த நூலை அந்த கால புத்தக நிறத்திலேயே வடிவம் மாற்றாமல் கொடுத்திருக்கிறேன். வாசித்து இன்புறுங்கள்.. அவசியம் எனில் வெண்மையாக்கி விடலாம். ஆனால் எழுத்துக்கள் அந்த வெண்மையில் அடிபட்டு விடும் என்பதாலும் வாசிக்க ஏதுவான நிறத்தில் இருப்பதாலும் மாற்றமின்றி பகிர்ந்துள்ளேன். என்ஜாய்... 







ஆரவல்லி, சந்திரகுமார், குரங்கு மாயாவி என்று நிறைய நபர்களை சந்திக்கவிருக்கிறீர்கள். துடிப்பான கதை இது.. ஒரு ஓரமாக தரவிறக்கி வைத்து விட்டு கடமை முடிந்தது என்று மட்டும் இருந்து விடாதீர்கள் என்பது என் அன்பு வேண்டுகோள்..  
அதிகாலையில் அதிர்ச்சி
குறிகார கிழவி 
மாலை மறைந்தது 
ஆரவல்லியின் முடிவு 
பாலைவன மாளிகை.. 
இவை எல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? புத்தகத்தில் இருக்கிறது நட்பூஸ்.. சென்று வாசித்து மகிழ அழைக்கிறேன்.. கம்மான்.. 
தரவிறக்க சுட்டி..
https://www.mediafire.com/file/serxlc8l1bpxs6h/Ayiram_Thalai_ketkum_athisaya_Mayavi_VP_publications_KVG_Birthday_gift.pdf/file


1 கருத்து:

ஆயிரம் தலை கேட்கும் அதிசய மாயாவி-திரு.K.V.கணேஷ் பிறந்த தின ஸ்பெஷல்

 அன்பிற்கினிய நண்பர் திரு.கேவிஜி என்று அழைக்கப்படும் kv.கணேஷ் அவர்களது பிறந்ததினம் இன்று.. சென்னையை மையமாகக் கொண்டு தன் வாழ்வில் பல சாதனைகளை...