ஞாயிறு, 2 நவம்பர், 2025

IND-24-037-ராட்சஸ ரட்சகர்-பகதூர்

 வணக்கங்கள் அன்புள்ளங்களே.. 

நம் மதிப்புக்குரிய நண்பர்  மாரிமுத்து விஷால் அளித்த மற்றுமொரு அன்பளிப்பாக இந்த முறை பகதூர் சாகசமான ராட்சஸ ரட்சகர்.. மூன்று ரூபாய் விலையில் வாராந்திர இதழாக 13-19,செப்டம்பர், 1987 அன்று வெளியாகி இன்றளவில் அபூர்வமான இந்திரஜால் காமிக்ஸாக நிலைத்து விட்ட பகதூர் சாகசம் இந்த ராட்சஸ ரட்சகர்..  



கதை சுருக்கம்: 

பிச்சை எடுக்கும் சிறாரை மனித வடிவில் வாழும் ராட்சசர்களிடம் இருந்து காக்கப் போராடும் ரட்சகர் பகதூர், எடுத்த காரியத்தை முடித்தாரா என்பதே கதை.. 



நான் கடவுள் ராஜேந்திரன் போன்ற மோசமான ஆசாமி லம்பு. சிறுவர், சிறுமியரை முடமாக்கி தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு பிச்சை எடுக்க வைக்கிறான். இது ஒரு வேளை நான் கடவுள் திரைப்படத்தின் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கலாம். பகதூர் அப்படி ஒரு பெண் கையில் குழந்தையுடன் பிச்சை எடுப்பதைக் கண்ட பகதூர் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு சென்று காப்பகம் ஒன்றில் விட்டு விடுகிறார். அத்துடன் நிற்காமல் இத்தகு கயமைக்குப் பின் இருப்பது எவரது கைங்கர்யம் என்பதைக் கண்டே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தீவிரமாக அதிரடியுடன் முயற்சித்து அந்த அநியாயத்துக்குப் பின்னால் இருக்கும் பிக் ஷாட் யார் என்று கண்டு பிடித்து விடுகிறார். 

கோபி சந்த் சேட் இதை செய்தது என்று தெரிந்து கொண்டபின் ஆட்டம் இன்னும் வேகம் எடுக்கிறது.. சேட்டின் ஒட்டு மொத்த வியாபாரத்தையும்  ஒடுக்குகிறார் பகதூர்.. இறுதியில் சேட் திருந்துவதற்கு ஏதுவாக ஒரு ஏற்பாட்டையும் செய்து அதனை செம்மையாக சாதித்தும் காட்டுகிறார் பகதூர்.. சுபம்.. 

இந்த கதையின் ஹைலைட்ஸ் 

*லம்புவுடன் பகதூர் மோதல் 

*அரை டிக்கெட் (இவர் அப்படியே சி.ஐ.டி. ராபின் கதையில் வரும் காவல் துறை இன்பார்மர் வேடத்தின் பிரதிபலிப்பாக தோன்றியது எனக்கு மட்டும்தானா?) 

*காவல் துறைக்கு பல்வேறு விதத்தில் பகதூர் சேட் ஜியின் அக்கிரமங்கள் பற்றி செய்தி அளித்து அவரது நெட்வொர்க்கை முடக்கிப் போடுவது.. 

*சிறுவன் ராஜிவ் சேட்டின் மகன் என்றாலும் தன் தந்தையைத் திருத்த ஆடும் நாடகம். 

இதர: 

*பீகிங் மனிதர்கள் அவர்களின் வேட்டைத் தொழிலும் பெண்கள் குழந்தைகளைப் பராமரித்தலும் 

*நியாண்டர் தால் மனிதர்களில் தோல் ஆடை பயன்படுத்தல் 

இவற்றை சித்திர வடிவில் புரிந்து தெரிந்து கொள்ள ஏதுவாக சிறப்பாக அளித்துள்ளனர்.. 

ஆக அருமையானதொரு பேக்கேஜ் இந்த கதையாகும்.. 

தரவிறக்க சுட்டி: 

https://www.mediafire.com/file/7m3r6qgu98arq0o/IND-24+-037-+ராட்சஸ+ரட்சகர்+-பகதூர்_3.00.pdf/file







நன்றி அனைவருக்கும்.. 
அடுத்து நமக்குத் தேவையான சித்திரக்கதைகளைப் பார்ப்போமா..?

மூன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

1.       

22

52

29-12-85

NeradiModhal Part 1

Phantom

நேரடிமோதல் I

2.       

23

1

05-01-86

NeradiModhal Part 2

Phantom

நேரடிமோதல் II

3.       

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

4.       

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு

 இறுதி முயற்சி சீராக சென்று கொண்டிருக்கிறது.. மூன்றாவது தொகுப்பு நிறைவடைவது உங்கள் கையில்தான் உள்ளது தோழர்களே.. மனது வைத்தால் மார்க்கம் உண்டு.. வாருங்கள்.. 

ஆவணப்படுத்தலில் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் பெருமகிழ்ச்சியும், பேருவகையும்..

என்றும் அதே அன்புடன் ஜானி சின்னப்பன் 









IND-24-005-பழி தீர்த்த விழி-பகதூர்

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இனிய வாசகர்களே.. நண்பர் மாரிமுத்து விஷால் உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த கதை பகதூர் சாகசமாகும்.. சித்திர ஜெயன், பாரு, மணியன் ஆகிய சிறு நகைச்சுவை கதைகளும், பக்க நிரப்பிகளும் இந்த கதையின் ஸ்பெஷல்.. 




கதை: ஜகஜித் உப்பல் 

சித்திரங்கள்: கோவிந்த் பிராஹ்மணியா 

வெளியிடப்பட்ட தேதி: 1-7, பிப்ரவரி 1987 

வாரமொரு இதழாக வெளியிடப்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியாவின் அருமையான படைப்பு இந்த இந்திரஜால் காமிக்ஸ் ஆகும்.. மொத்த பக்கங்கள் 32, விலை:ரூ.3.00

மல்டி கலரில் அசத்திய கதை இது..  

இந்திரஜாலின் மூன்றாவது தொகுப்பிது. 

இந்த தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

1.       

22

52

29-12-85

NeradiModhal Part 1

Phantom

நேரடிமோதல் I

2.       

23

1

05-01-86

NeradiModhal Part 2

Phantom

நேரடிமோதல் II

3.       

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

4.       

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு

5.       

24

37

13-09-87

RaatshaRatchagar

Bahadur

ராட்சஸரட்சகர்





IND-24-037-ராட்சஸ ரட்சகர்-பகதூர்

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நம் மதிப்புக்குரிய நண்பர்  மாரிமுத்து விஷால் அளித்த மற்றுமொரு அன்பளிப்பாக இந்த முறை பகதூர் சாகசமான ராட்சஸ ரட்சக...