வியாழன், 7 மே, 2026

RC 36 மனித பலூன்_டைகர் அண்ட் ஹென்றி_பாகம் ஒன்று..வண்ணத்தில்.. கோடை மழைப் பரிசு..2026

 அன்புள்ள வாசக, வாசகியருக்கு என் இனிய வாழ்த்துக்களும் வணக்கங்களும்.. 

      கோடை ஒரு மாதிரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.. மாம்பழம் கூட இம்முறை பருவம் தப்பி வந்ததும் இல்லாமல் அத்தனை சுவை இல்லை.. தேர்தல் அலையோ சுனாமியாக அனைவரையும் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.. இங்கே சித்திரக் கதை உலகிலும் பல்வேறு மாற்றங்களும், காட்சிகளும் புதிதாகி வருகின்றன.. செயற்கை நுண்ணறிவின் பலம் சராசரி வாசகனுக்கு சிறகுகள் கொடுத்து விடுகிறது.. இதோ சிறுவனாக சிறு வயதில் கண்டு மகிழ்ந்த டைகர் ஹென்றி கதையை என் மன சிறகுகள் கொண்டு வண்ணமிட்டு மகிழ்ந்தேன்.. உங்களுடனும் பகிர்ந்து மகிழ்வதில் பேருவகை கொள்கிறேன்.. கம் ஆன் லெட்ஸ் என்ஜாய் தி டைகர் அண்ட் ஹென்றி.. இன் கலர்..


சில குறிப்புகள்..
*இவை முறையான காப்பிரைட் வைத்திருப்பவர்களுக்கு சங்கடம் என்றால் நீக்கி விடுவதில் எவ்வித தயக்கமும் இல்லை. 
*ராணி காமிக்ஸ் எப்போதோ நின்று போன நினைவலைகளில் பயணிக்கும் அட்டகாசமான கதைகள்.. இன்றும் ராணி காமிக்ஸ் கொண்டு வரலாமே என்கிற மன ஆதங்கத்தை தினத்தந்தி அலுவலகத்திற்கு நேரில் தெரிவித்தோம்.. அவர்கள் விரும்பினால் இவற்றை அப்படியே எடுத்தாள்வதில் மகிழ்ச்சி கொள்ளும் வாசகர்களில் நானும் ஒருவனே.. 
*தொடர்ச்சியான வண்ணங்களை உதாரணமாக ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது. அதன் நிறத்தை அப்படியே அடுத்தடுத்த பேனல்களில் எதிர்பார்க்காதீர்கள்.வண்ணத்தில் ஒரு பேனலை இரசித்து விட்டுக் கடந்து செல்லுங்கள்.. தொடர்ச்சி கண்டிப்பாக இருக்காது.. 
இந்த அன்பளிப்பை யாரேனும் அச்சிட்டுக் கொடுக்கிறேன் என்றால் தயவு செய்து மறுத்து விடுங்கள்.. இவை நண்பர்களுக்காக என் கனவு ராஜ்யத்தின் பொக்கிஷங்களில் இருந்து எடுத்துக் கொடுத்த சிறு சிறு வைரத் துண்டுகள் என்பதை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள்.. 
இக்கதை முழுமையாக நிறைவு  அடைந்த பின்னரே பிடிஎப்   பகிர்வது குறித்து முடிவு செய்வேன். ஆகவே பிடிஎப் கேட்டு அடம்பிடிக்காதீர்கள்.. 
*இந்த கோடை ஸ்பெஷல் உங்களை மகிழ்ச்சி கொள்ள செய்திருக்கும் என்று நம்புகிறேன்.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

RC 36 மனித பலூன்_டைகர் அண்ட் ஹென்றி_பாகம் ஒன்று..வண்ணத்தில்.. கோடை மழைப் பரிசு..2026

 அன்புள்ள வாசக, வாசகியருக்கு என் இனிய வாழ்த்துக்களும் வணக்கங்களும்..        கோடை ஒரு மாதிரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.. மாம்பழம் கூட இ...