ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

ஜென்மஜென்மமாய்..._ஜானி சின்னப்பன்

 


ஏன் இப்படி?

என்கிறாய்..

எப்போதுமே 

இப்படித்தான் 

இவன் 

என்பதை 

எத்தனை 

எளிதாக 

மறந்து போனாய்..

உனை சந்தித்த

அந்நொடி

அதிர்வை 

அகத்தில்

உணர்ந்தேன்..


நீ என்னவள்

என..


இன்றல்ல 

நேற்றல்ல 

ஜென்ம

ஜென்மமாய் 

தொட்டுத்

தொடர்ந்து 

வரும் நம் பந்தம்..

அடி

பேதைப் 

பெண்ணே..

உன்னுள் 

உன்னைக் 

கேட்டுப்பார்.. 

உற்றுக் கேள்.. 

அதே 

அலை அங்கும்..

அறிவாய்.. 


ஆழ்கடல்

நிச்சலனமாய்

அமைதியோடு

காத்திருப்பேன்..

கைசேர்வாயா

காரிகையே..


_ஜானி சின்னப்பன்..


#கவியதிகாரம் #ஜானி #jscjohny #chapterpoet

சனி, 13 பிப்ரவரி, 2021

விபரீதமாகுமுன் விலகிப்போ.._ஜானி சின்னப்பன்

 


ஒற்றையடிப் பாதையிலே

ஓரமாகப் பூப்போல 

ஒதுங்கிப் போகும்

காவியப் பெண்ணே..


ஓவியமாய் உன்னை மாற்றி

ஒற்றை வரியைத் தொடுத்திட முயன்றேன்..

ஆனால்..

ஆனால்..

என் கவிதை இரயிலேறித் 

தானே வந்து தாவித்

தொற்றிக் கொள்கின்றன 

வரிகள்.


கேட்டுவிட்டுப் போயேன்..

காதுகள் குளிரட்டும்..


ஒருக்களித்து நீ நின்றால்

இதயமே தடம் புரளுமே..


ஓரமாக நீ போனால்

காலடி நிலம் நழுவுமே..


கொலுசின் ஓசை விழுந்தால்

செவிக்குள் பூகம்பம் நிகழுமே..


கண்களின் ஓரப் பார்வையில்

அதிர்ச்சி அலைகள் சுனாமியாகுமே..


சூடிய பூ உதிர்ந்தால்

என் உயிரும் உதிர்ந்திடுமே..


விஸ்தாரமாய் விவரித்திடவே ஆசை..

விபரீதம் விபரீதம்..


விண் நழுவி விழுந்திடுமோவென

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..

சென்று வா.. சந்திப்போம்..


_ஜானி சின்னப்பன்..

#ஓவியஅதிகாரம் #கவியதிகாரம் #ஜானி #jscjohny #jscjohnyvisuals #jscjohnygraphites #jscjohnyarts

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

*தீராத தாகங்கள்..*_ஜானி சின்னப்பன்

 


துடித்தே 

தேய்ந்து போன 

நிமிடங்களின் ஏக்கங்கள்.. 


காத்திருந்தே

காய்ந்து போன

கண்ணீர்த் துளிகள்..


நிம்மதியைப்

பறித்துப்போன 

நிலைக்கா விநாடிகள்.. 


அனலைக் கிளப்பிப் 

புகையாய் மறைந்த

வெப்ப மூச்சின் 

துக்கங்கள்...


இயக்கம் நின்ற

இரத்தம் சுண்டிய

இதயத் துடிப்புகள்..


ஆழ்கடலின் அழுத்தமிகு 

காரிருள் அமைதியாய் நீ..

கடும் புயலொன்றில்

சிக்கி சேதாரமான

சிறு படகாய் நான்..


வெறிக்கும் கண்ணின் 

நிச்சலனம் பெருங்காவியம் 

ஒன்றை மௌனத்தின் 

பிரபஞ்சத்தில் எழுதிப் போகிறது..


நான் சென்று விட்டவன்..

உடல் விட்டு விலகியவன்..

தனியன்..


ஆன்மாவாய் 

பிரபஞ்சம் தாண்டிப் 

பயணிப்பவன்..


இப் பாழும் இருளிலும் 

உன் நினைவலை

துரத்திப் பிடித்தென்னை 

அடிக்கும் துயரின் ஆணி உனக்கென்ன தெரியுமடி 

என் காதலைப் பற்றி...?!?!?


_ஜானி சின்னப்பன்..

_ஓவியம்_Lesndro cano bazan க்யூபா நாட்டு ஓவியர்..art credits..

வா இளையோனே...

 







வில்லென வளையட்டும் வானம்...

சில்லெனப் பொழியட்டும் பனிப்பூ..


சல்லென வீசட்டும் தென்றல்..


கண்சிமிட்டி சிரிக்கட்டும் நட்சத்திரங்கள்..


நித்தமும் உழைக்கட்டும் உன் கரங்கள்...


பலம் கொள்..

பயம் வெல்..



உன் வியர்வையைத் தழுவட்டும் பூமி..


வென்று காட்டிடு..


நின்று ஜெயித்திடு..



வானை வசமாக்கிடு...

வல்லமை வளர்த்திடு..

சக்தி ஒன்று திரட்டிடு...


இப்பிரபஞ்சத்தில் உன் பெயரைப் பதித்து விடு...


_ஜானிசின்னப்பன்..


வெள்ளி, 29 ஜனவரி, 2021

அடிப் பெண்ணெனும் தீயே...

 


பனிசூழ் உலகிலே 

அகத்தீயாய் நீ...

விட்டு விலகியே 

அகிலம் சமம்செய் 

அகத்தியனாய் நான்..

முத்திரை பதிக்குமொரு

மென் முத்தமிட 

நெருங்கினால்

நொறுங்கிடும்

தரணியே..

இணையாமலே

தண்டவாளமாய் 

நம் பாதைகள்..

அங்கு நீ..

இங்கு நான்..

விதியை

நொந்தவாறே

தொலைவே நின்று

துயரம் அடக்கிப்

புன்னகையைப் 

பரிசளிக்கிறேன்..

ஏற்றிடுவாய்

ஏந்திழையே..

பிழைத்துப் போகட்டும்

மானுடர்கள்..

பிரஞ்சம் நம் காதல் 

பிரிந்தாலும் இறுகிடும்

மாயம் புரியாமலே

போகட்டும்...

- ஜானி சின்னப்பன்

#கவிதையதிகாரம்

#ஜானி #jscjohny

புதன், 27 ஜனவரி, 2021

இழப்பைக் கடப்போம்...

 *இதையும்...*


கடந்து வருவீர் 

நெஞ்சில் வலி

 கொண்டோரே..

காலமொன்றே 

கண்ணீரின் வலியைக்

கரைத்திடும் மருந்தாகும்..

எல்லோரின் நினைவிலும் 

எங்கோ ஒரு மூலையில்

சுகமாகவோ

வேதனையுடனோ

மகிழ்ச்சியுடனோ

வெறுப்புடனோ

ஏதாவது ஒரு நினைவின்

கீற்றாகத் தங்கும் எவரது இழப்பினையும்..

தவிர்க்கவே முடியா 

நினைவுகளும்...

தாங்கவே இயலா 

பாரங்களும்..

தொண்டையை அடைத்திடும் துக்கமும் நம்மிடம்

சொல்லிப் போகும் 

செய்தி ஒன்றுண்டு கேளீர்...

இதுவும் கடந்து போம்..

ஏற்கனவே இழந்த 

ஏதோவொன்றின் 

யாரோ ஒருவரின்

எண்ண மிச்சம் 

கரைந்தது போலவே...

ஆம்..

காலமே காயத்தையாற்றும் அருமருந்து.. 

மனதைத் தேற்றி

வாழ்வை மாற்றி

உறவைப் போற்றி 

வாழ்வோம் வாரீர்...

#செயலதிகாரம்...

#jscjohny

#ஜானி

#கவிதையதிகாரம் 


(நண்பர் ஒருவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாரின் ஆறுதலுக்கு...)

சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...