புதன், 14 நவம்பர், 2012

தங்கமான போராட்டம்!

அருமை நண்பர்களே! ஆருயிர்த் தோழர்களே!

உங்களில் ஒருவன்! ஜான் சைமனின் இனிய வணக்கம்! தங்கள் வரவு நல்வரவாகுக! இடையே பணியில் சோதனைகளும் பின் சாதனைகளும் அனைவருக்கும் சகஜம்தானே? அடியேனுக்கும் அதே! அதே!
மனித வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது? அதை வாழ தெரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கிறது? ஆராய புகுந்தால் வாழ்வும் அதில் சில நிகழ்வுகளும் நம் வாழ்வின் இன்பங்களையும் அதை அனுபவிக்காமல் வெறுமனே ஆராய்ந்தே வாழ்க்கையை தொலைத்து கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளலாம்! 
பகவான் ஓஷோ கூறுவார்
 "ஒரு பூ பூத்திருப்பதை கண்ணால் பார்த்து ரசிக்கலாம். அதனை ஆராய்கிறேன் பேர்வழி என்று களத்தில் இறங்கினால் வெறும் இதழ்கள், இலைகள், மகரந்த தூள்கள், அல்லி வட்டம், புல்லி வட்டம், குறுக்கு வெட்டு தோற்றம், நெடுக்கு வெட்டு தோற்றம் ஆகியவையில் மூழ்கி பூவின் அழகை ரசிக்க மறந்து விடுவீர்கள்" இந்த சிந்தனைகளோடு இந்த பதிவிற்கு வருக வருக என மறு முறை வரவேற்கிறேன்!

  தரணி புகழும் "தங்க கல்லறை" என்ற இந்த நூல் 17  ஆண்டுகளுக்கு முன்னர் முத்து காமிக்ஸ் மூலமாக வெளியிடப் பட்டு விற்பனையில் சக்கை போடு போட்ட கதை. தற்போது மீண்டும் மீண்டு வந்திருப்பது முழு வண்ணத்தில். விலை வெறும் நூறு ரூபாய்களே. அந்த நூறு ரூபாய்க்குள் மிக சிறந்த கதை புத்தகமான இதனை வாங்கி வெற்றி வெளியீடான இந்த நூலை விற்பனையிலும் இந்த வருடத்தின் தலை சிறந்த வெளியீடாக மாற்ற உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


    "தங்கம்" என்றாலே ஒரு கிக் வந்து விடுகிறது இல்லை? தங்கத்தில் கல்லறையா தலைப்பே திகில் ஊட்டுகிறதே என்ற எண்ணம் தோன்ற செய்கிறது இல்லையா? முன் அட்டையில் கம்பீரமாக நாயகர்கள் வலம் வரும் காலமிது. எந்த துறையிலும் தலைவர்களே முன் நிறுத்தப் படுவதை நாமெல்லாம் கண்டிருக்கிறோம். இந்த கதையில் வில்லனை அட்டை படத்தில், அதுவும் முன் அட்டையில் தீட்டி இருப்பதே இந்த கதையில் வில்லனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். அடர்ந்த பனி இரவில் மலைகளின் மத்தியில் மர்மமாக எரியும் நெருப்பை நோக்கி பாயும் தோரணையில் தெரியும் ஒரு மர்ம ஆசாமியே கதையின் வில்லாதி வில்லன்.
      பின் அட்டையில் தகிக்கும் பாலை வெளியில் சுட்டெரிக்கும் சூரியனின் கொதிப்பினை பின்புலமாக கொண்டு அமைந்திருக்கும் அட்டையில் கண்களில் தெறிக்கும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக பாய தயாராக நிற்கும் அழகான குதிரையின் மீது அமர்ந்திருப்பவர்தான் கதையின் ஹீரோ ப்ளூ பெர்ரி என்கிற கேப்டன் டைகர்.
            அமெரிக்க ராணுவத்தில் அரிய பல சாதனைகளை நிகழ்த்தி அதிகாரிகளிடம் கெட்ட பெயரும், வீரர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் ஹீரோவாக பதிவான நாயகன்தான் நமது அன்பான டைகர். அவரது அனைத்து கதைகளிலுமே ஒரு அப்பாவி நாயகனின் மீது பழி விழும். அதனை நியாயத்தின் துணை கொண்டும், தோழர்களின் துணை கொண்டும் எப்படி எல்லாம் களைந்து எறிகிறார் என்பதையும் தன் மீதான பழியினை எப்படி எதிர் கொண்டு வென்று நிற்கிறார் என்பதனையும் மிக ஆழமாக சித்திரங்கள் மூலமும், கதையின் அதி வேகமான போக்கின் மூலமாகவும் தெரியப்படுத்தி இருப்பார்கள்.
                        இக்கதையில் நம் நாயகன் தங்க வேட்டை வெறி பிடித்த ஒரு கயவனை துரத்திக்கொண்டு பாலை பரப்பில் நுழைகிறார். அவரது உற்ற நண்பன் அவருக்கு துரோகம் இழைத்து விட்ட நிலையில் நீதியை நிலை நாட்ட  தனது தன்னம்பிக்கையை துணையாக கொண்டு முன்னேறி செல்கிறார். பின் தொடரும் தீயவர்களின் கூட்டம் ஒரு புறம், அபாச்சே செவ்விந்தியர்களின் தொல்லை மறு புறம் என பாய்ந்து வந்தாலும் அஞ்சாமல் முன்னேறி செல்கிறார். ஒரு கட்டத்தில் தான் தேடி செல்லும் கயவன் எவ்வளவு கொடியவன் என்று அறிய நேரும் போது தனது தோழனை அவனிடம் இருந்து காக்கும் மிக முக்கியமான பணியும் சேர்ந்து கொள்கிறது.
                         தன் தங்கத்தை பூதம் போல காக்கும் மர்ம மனிதனின் தொடர் தாக்குதல்களில் இருந்து மீண்டு அவனை அவன் குகையிலேயே சந்திக்கிறான்  லக்னர் எனும் பெயரை உடைய கயவன். அவனை ஆசை காட்டி தங்க தோட்டாக்கள் செய்யும் பட்டறைக்குள் இறங்க செய்து விடுகிறது அந்த பிசாசு. அதுதான் தனக்கு விதிக்க பட்ட தங்க கல்லறையோ என்ற அச்சம் உறுத்த அந்த நேரத்திலும் தனது மன வலிமையின் காரணமாக தப்பி வருகிறான் லக்னர். அவனை பின் தொடரும் டைகர் மற்றும் தோழர் ஜிம் என்ன செய்கிறார்கள்? உண்மையில் அந்த பிசாசு யார்? ஆகிய கேள்விகளுக்கு வாங்கி படியுங்கள் "தங்க கல்லறை" இப்போது பரபரப்பான விற்பனையில்......
மீண்டும் மீண்டு வரும் வரை உங்களின் அன்பில் என்றும் திளைத்திருக்கும் உங்கள் இனிய நண்பர் ஜான் சைமன்..
நண்பர் சௌந்தர் அவர்களது ஸ்கேன் சில உங்கள் ஆதரவான பார்வைக்கு. கீழே...








அடுத்த வருட அதிரடிக்கும் கதைகளுக்கு முன் பதிவு செய்திடுங்களேன்???


தங்க கல்லறை எனது பார்வையில் 


அடியேனின் அன்பு மகன் கிறிஸ்டோபர்!
மற்ற படங்களை கண்டு களிக்க http://tamilcomics-soundarss.blogspot.in/ என்ற முகவரியில் உங்கள் நட்புக்கு நண்பர் திரு.சௌந்தர் இருக்கிறார்.
http://www.comicsda.com/2012/11/theghostwithgoldenbulletsblueberry.html என்ற முகவரியில் அன்பு நண்பர் ராஜ் குமார் இருக்கிறார்  சென்று கண்டு படித்து மகிழுங்கள்!!
நிற்க! சின்னதாய் மனதை பாதித்த செய்தி:

  அடக்குமுறை, சர்வாதிகாரம் என அதிகார போட்டிகள் ஆரோக்கியமில்லாமல் நடந்து அதில் பலியான எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்கள் கூக் குரலினை பதிவு செய்ய முடியாமல் மெளனமாக கண்ணீர் வடித்து தமக்குள் அடக்கி வைத்து மரணித்து விடுகின்றனர். சத்தியம் என்றும் வெல்லும்!! ஆனால் காலம் எப்போதும் சீக்கிரம் ஓடி விடுகிறது. இரண்டும் ஒரே கோட்டில் எப்போதும் பயணம் செய்வதில்லை. அதனால் பாதிப்பின் வீரியம் குறைய வெகு நாட்கள் ஆகி விட்ட பின்னர் வரும் நீதி என்பது மனம் தளர வைக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
 ஒரு சகோதரியின் கண்ணீரை ஆனந்த விகடன் பதிவு செய்து வைத்திருக்கிறது. அதனை நான் முன்பதாக படிக்க வில்லை அடுத்த மாதம் அது தொடர்பான விளக்கம் விகடன் கொடுத்திருந்தது. ஆனந்த விகடனின் இந்த பதிவுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதனை குறித்த சிந்தனையில் நண்பர் திரு சௌந்தர் அவர்களது வலை பக்கங்களை மேய்ந்த போது கிடைத்த ஸ்கேன் சிலவற்றினை இங்கே இணைக்கிறேன். நண்பர்கள் அதில் உள்ள உண்மையை உணர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். மனதை பாதித்த இந்த செய்தி கீழே !





 சர்வாதிகாரம் என்பதே ஆபத்தானதுதான், அது உலகத்தில் எங்கிருந்தாலும் , எந்த மூலையில் இருந்தாலும் அதனை அன்பால் மட்டுமே, அஹிம்சை முறையில்  மட்டுமே களையப்பட  வேண்டும். அன்பு மட்டுமே நிலை பெற வேண்டும். அதுவே மனித குலத்தின் மாபெரும் கண்டு பிடிப்பாகும் என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து ஆகும். ஆயுதம் அன்பானால் அமைதி கண்டிப்பாக, நிச்சயமாக வரும் வந்தே தீரும்!!

  என்றும்  அதே அன்புடன் மற்றும் கனத்த இதயத்துடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

8 கருத்துகள்:

  1. நண்பரே

    அருமையான பதிவு ...

    உண்மையிலேய தங்க கல்லறை அதுவும் வண்ணத்தில், ஒரு அற்புதமான படைப்பு.

    மின்னும் மரணம், இரும்புக்கை எத்தன் போன்றவையும் வண்ணத்தில் கூடிய சீக்கிரம் வர வேண்டும்.

    ஜான் மற்றும் ஜூனியர் ஜான் போட்டோ அருமை நண்பரே ...


    தொடந்து கலக்குங்க ....

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    பதிலளிநீக்கு
  2. நல்வரவு நண்பர் திரு கிருஷ்ணா அவர்களே! அடிக்கடி கடி கடி பதிவுகள் உங்களை துரத்திகொண்டேதான் இருக்கும்! ஹீ! ஹீ! ஹீ!

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக வரும் என்றே நம்புவோம் நண்பா! நமது பலத்த ஆதரவுக் கரம் இருந்தால் விஜி சார் பலதும் சாதிப்பார்!
    உங்க ஜூனியர கேட்டதாக சொல்லுங்க ஜி! தீபாவளி வாழ்த்துக்கள் (ஹி ஹி ஒரே ஒரு நாள்தானே போச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க)

    பதிலளிநீக்கு
  4. கன் தாங்கிய போஸை எதிர்பார்த்து வந்தால் சன் தாங்கிய போஸ்! அருமை! :)

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு நண்பரே :-)

    //கன் தாங்கிய போஸை எதிர்பார்த்து வந்தால் சன் தாங்கிய போஸ்! அருமை!// SAME FEELING :-)

    பதிலளிநீக்கு
  6. பதிப்புலகத்தில் ஒரு கலாட்டா!!
    திரு. கலாட்டா - கார்த்திக் அவர்களே! வருகைக்கு மிக்க நன்றி! உங்க கமென்டை மிகவும் இரசித்தேன் . தமிழ் காமிக்ஸ் உலகத்தினை பட்டை தீட்டிய சிலர் எனும் வரிசையில் உங்கள் பெயரும் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என ஒரு திருக்குறள் உண்டு. அடியேன் எப்பவும் ஜால்ரா சைடுதான். ஆனால் ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான் எனும் தாரக மந்திரத்திற்கு (நன்றி அந்த விளம்பரத்தை படைத்த கனவான்களுக்கு!! ) ஏற்ப தங்கள் குறைகளை சுட்டி காட்டும் தன்மை நல்ல உரைகல்லாக திகழ்ந்து லயன் குடும்பம் இன்னும் கவனமாக கதை தேர்வு மற்றும் சிறப்பான மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் பணிகளை மிக மிக மிக அட்டகாசமாக செய்து உலக தரம் கொண்டு நற்பெயர் பெறுவார்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது தோழா !

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கு மிக்க நன்றி நண்பா! வாழ்க நீர் பல்லாண்டு. திரு சௌந்தர் மிக சிறப்பாக அனைத்து பதிவுகளையும் கொண்டு வருகிறீர். அடியேனுக்கு ராணி காமிக்ஸ் மீது ஒரு கண். அதில் நிறைய பதிவிடுங்க ஜி..!!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...