திங்கள், 19 நவம்பர், 2012

அதிரடியின் அடுத்த பெயர் -- வாய்னே ஷெல்டன் !!!!

                        அன்பார்ந்த வாசக பெருமக்களே! வணக்கம். அடுத்து  ஒரு பதிவோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். வீட்ல  எல்லோரும்  சுகமா?  அனைவரையும்  விசாரித்ததாக சொல்லுங்க!   தீபாவளி   எல்லாம் நல்லா போச்சுங்களா? வெடி எல்லாம் நல்லா வெடிச்சதா? தலைவர் டைகரின் தங்க கல்லறையுடன் மகிழ்ச்சியா, திகிலா , சோகமா , கோபமா  இருந்திருப்பீங்க((!!!!!!!!!!!!!)). நானும் அதே!! அதே!! 

             நான் வாண  வேடிக்கை எல்லாவற்றையும் நம்ம ஆசிரியரின் ப்ளாகில் ரசிக்க நேரம் இருந்த அளவிற்கு பின்னூட்டம் போட்டு கலாட்டாவில் கலந்து கலாய்க்க நேரமில்லாமல்  போய்டுச்சி ! அதேன்  என்னோட ஒரே ஒரு வருத்தம்!!!
             
              நண்பர்கள் வடை (அடச்சே!) படை வளர்ந்து கொண்டே வருவது மிக மிக நல்ல விஷயம். அன்புக்கும் அரவணைப்புக்கும் அச்சாணியாக ஆசிரியர் திரு.விஜயன் அவர்கள் இருக்கையில் எந்த குழப்பமும் வெயிலை கண்ட பனியாக, சிங்கத்தை கண்ட சிறு நரியாக மாறி ஓடிவிடும். நம்ம கருத்து கும்மாங்குத்துக்கள் நல்ல ஒரு நிலையை காமிக்ஸ் உலகில் கண்டிப்பாக உருவாக்கும். நாற்பது வயதே கடந்த குழந்தை நம்ம காமிக்ஸ். ஆகவே அது தன் சிங்க பாய்ச்சலில் இறங்க உறுதுணையாக இருப்பது, பெட்ரோலாக விளங்குவது உங்கள், என் கருத்துகளே. ஆகவே நிறைய விவாதங்களையும், வில்லங்கமில்லாமல் அனைவரையும் அனுசரித்து களமிறக்குங்கள் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.  
இதான் வடை. நம்ம ப்ளாக் அகில உலக அளவில பிரபலம் ஆய்ட்டதால (அடப்பாவி  7 பேர் தொடரும்போதே  இவ்வளவு குசும்பா என யோசிப்போர் கவனத்திற்கு --நாங்கல்லாம் குசும்பை குளுப்பாட்டி  குன்னூர்ல குடியேத்துனவங்க!! (என் சொந்த வசனம் நண்பர்களே! வடிவேலுக்கு வேணும்னா வந்து பார்க்க சொல்லுங்க! ) நிறைய  வெளி நாட்டவர் நம்மளை தொடர்பு கொண்டு இருக்காங்க! அவர்களுக்காக!! வடை என்பது நிலாவில் நீலான் தனது காலினை பதிக்கும்  முன்னமே நாங்க சுட்டு தேர்ல  ஏத்தி அனுப்பி வைத்த ஒன்றாகும். என்ன ஒண்ணு  அமெரிக்காகாரன் போகறதுக்குள்ள வேற்று கிரக வாசிகள் அடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க!    
                   இனி பதிவுக்குள்  போகலாம். அதிரடி நாயகர்கள் வரிசையில் இன்னும் ஒரு ராக்கெட்  வீரன் வாய்னே ஷெல்டன்!!. நம்ம தமிழ் காமிக்ஸ் உலகத்தில் அறிமுகம் ஆகிறார். முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு கொண்டாட்ட காமிக்ஸ் வெளியீடான முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் மூலமாக நம் காமிக்ஸ் வானில் சிறகடிக்க வருகிறார். ஆதரவு நல்குவீர் நண்பர்களே!!   ஐம்பது வயது, எல்லா ஆயுதங்களையும் கையாளும் திறமை. வசீகரிக்கும் நரை முடி, பல அதிரடி பயிற்சிகள் முடித்த நாயகருக்கு ஒரு பணி ஒப்படைக்க படுகிறது. லாரி ஓட்டி போய் விபத்தை சந்தர்ப்ப வசமாக ஏற்படுத்தி விடும் நண்பரை மீட்க வேண்டிய நிலை...

நன்றிகள் tamilscannalations!!! இது சும்மா சாம்பிள் மட்டுமே!!! ஹீ! ஹீ! ஹீ !

அந்நிய மண்ணில் இருந்து அவரை மீட்க வேண்டும். தனது குழுவை தானே தேர்வு செய்கிறார். பட்டியலில் இடம் பிடிப்போரில் ஒரு வீர பெண்ணும் அடக்கம். அவர்களுடன் அந்நிய மண்ணில் அவர் நிகழ்த்தும் சாதனை  பட்டியல்களை பார்த்து ரசிக்க ஆதரியுங்கள்!!! "முத்து நெவெர் பிபோர்  ஸ்பெஷல்". விலை ருபாய் நானூறு மட்டுமே. பத்து முத்தான கதைகள் தாங்கி வெளி வருகிறது. தொடர்புக்கு சிவகாசி, பிரகாஷ் பப்ளிஷர்ஸ்.  

அப்புறம் நிறைய  தகவல்களுடன் இதே இடத்தில் சிந்திப்போம் நண்பர்களே. ஹாப்பி ரீடிங்! அடியோஸ்! அமிகோஸ்!
                                



9 கருத்துகள்:

  1. அய்யோ தலைவரே இப்படி கதைய லீக் பன்னிடீங்களே.

    பதிவு நன்றாக இருந்தது.நம்ம அட்ரஸ் கு ஒரு வடை செட் பார்சல்.
    வெய்னே அறிமுகம் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயில்லாமல் டால்டனில்லை கதையில் தங்கள் புகைப்படம் கண்டு மகிழ்ந்தேன்! ஆமா, அந்த புத்தகம் எதற்கான இலவசமாக வழங்கப்பட்டது நண்பா?

      நீக்கு
  2. நண்பா! நல்வரவு! கதையை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மட்டும் பயன்படுத்தி இருக்கிறேன் நண்பா!எப்படியாவது நம்ம முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் நிறைய விற்க வேண்டும். நமக்கும் நிறைய புது தலைமுறை வாசகர்கள் கிடைக்க வேண்டும். தங்கள் பதிவுகளில் பட்டையை கிளப்புங்கள்!

    பதிலளிநீக்கு
  3. தமிழ் ல் translate எ பண்ணிட்டீங்களா அப்பா ஹ்ம்ம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. நல்வரவு நண்பர் கிரி அவர்களே! ஏதோ எனக்குப் புரிஞ்சவரிக்கும் முயற்சி பண்ணியிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  5. வடை வெச்சும் நிறைய எலிங்களைக் காணோமே! எங்கப்பா இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  6. வடை வெச்சும் நிறைய எலிங்களைக் காணோமே! எங்கப்பா இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  7. தலைவா ....


    கலக்கறீங்க போங்க :)

    மறக்காமல் அடுத்த முறை வரும்பொழுது வடை வாங்கி வரவும் (இந்த வடை இல்ல பாஸ்.. அன்னைக்கு போட்ட ப்ரெஸ் வடை)

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    பதிலளிநீக்கு
  8. நீங்க வேற அந்த வடைல நூலெடுத்து உங்க ஊருக்கு ஏற்றுமதி பண்ணிட்டோம் நண்பா! ஆமா! தீபாவளி ஜாலியா போச்சா? நாங்க போடா போடி, ஒரு வாரம் விட்டு துப்பாக்கின்னு என்ஜாய் பண்ணிட்டோம்! என் மகன் ராக்கெட் விடுவதில் மிக ஆர்வம் காட்டினான்!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...