ராணி ராஜ்யம் - 04 தப்பி ஓடிய இளவரசிஅன்பு நேயர்களே! ஆருயிர் கனவான்களே! காமிக்ஸ் உலகின் முடி சூடா மன்னர்களே! உங்கள் அன்பான வேண்டுகோளுக்கிணங்க என்னிடம் இருக்கிற அனைத்து ராணி காமிக்ஸ் கதைகளும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்! அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பார்ப்பதிலேயே நிஜமான சந்தோசம் நிலவுகிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமிருந்தது கிடையாது! அன்பு நண்பர் கிங் விஸ்வா அவர்களது வழிகாட்டுதலில் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி விரைவாக ஸ்கேன் படங்களை பதிவேற்ற கற்றுகொண்டேன்! அதனால் எளிதாக இங்கே படிக்க பல அரிய  நூல்கள் அணிவகுக்க உள்ளன. நேரமிருந்தால் என்பதனை அவசியம் சேர்த்து கொள்ளுங்கள்! 
       அதிலும் இந்த தப்பி ஓடிய இளவரசி எனும் நூல் திருவண்ணாமலையில் ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது. மிக மிக கவனமாக கையால் பிரிக்க வேண்டியிருந்தது. அவ்வளவு பழைய புத்தகம்! இன்று சுமார் ஒரு மூன்று வருடமாக என் வீட்டில் படிக்காமலேயே வைத்து இருந்தேன். ஸ்கேன் வாங்க வழிகாட்டிய நண்பர் கிங் விஸ்வா அவர்களது உபயத்தால் உங்களோடு நானும் இந்த புத்தகத்துடன் ஆஜராகிறேன்! வாங்க சேர்ந்து படிப்போம் தோழர்களே! 


விலை ஒன்றரை ரூபாய்தான்! இந்தமாதிரி பல புத்தகங்களை விலை ஏற்ற வசதியாக கிழித்து விடுகின்றனர்! அட்டையே இந்த கதை எகிப்து நாட்டு இளவரசி என்பதை தெளிவாக சொல்லி விடுகிறது. பழைய புத்தக கடைகளில் அனைவரையுமே உள்ளே சென்று நோண்ட விட மாட்டார்கள். நன்கு தெரிந்த கடைகள் கூட நாங்களே எடுத்து வைக்கிறோம் என்று வழியனுப்பி விடுவார்கள். அதற்கெல்லாம் சோர்ந்து பொய் விடாதீர்கள் நண்பர்களே. உங்களுக்கு சொந்தமாக போகும் காமிக்ஸ் எந்த இடத்திலும் உங்களுக்காக காத்திருக்கலாம். ஒரு காலத்தில் CROWN COMICS என்ற வலை தளம் இரண்டு மூன்று புத்தகங்களை பதிப்பித்து விட்டு பின்பு தளத்தை மூடி விட்டார்கள். அப்போ நான் வலைக்கு புதுசு. விரைவாக கைப்பற்றி விட்டேன். ஆனால் சிடி, காப்பி குறித்து அவ்ளோ பழக்கமில்லாததால் கணினியுடன் அவையும் சென்று விட்டன. விடுங்க காமிக்ஸ் உங்க கிட்ட இருந்தா நல்ல நண்பர்களிடம் கொடுத்து வாங்குங்க! ஜாலியா இருங்க! கொடுக்க முடியா நிலையில் மிக அரிய புத்தகமாக இருந்தா இது போல ஸ்கேன் அன்பளித்து கொள்ளுங்களேன். (ஹி ஹி ஹி நமக்கும்தான் உதவியா இருக்கும்!!) 

விளம்பரத்தினை கண்நோக்கினீர்களா? தினதந்தி நாளிதழ் ஒரு சிகரம் தொட்ட நாளிதழ்! அதன் சிறப்பான வெளியீடுகள் அனைத்தும் மக்களின் மனதில் மாறாத பாதிப்பினை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை. அதன் பொற்காலம் 
 அந்த காலகட்டம். நானெல்லாம் சின்னஞ்சிறு மழலை. எனக்கு என் தாத்தா பாட்டி உடனிருந்து மிக அழகாக அன்பையும் அறிவையும் காமிக்ஸையும் போதித்து வளர்த்தார்கள். படம் பார்த்து கதை சொல்ல அப்போ கிடைச்சது எல்லாம் ஒரு சிங்கம் நான்கு காளைகள் மாதிரியான புத்தகங்கள்தானே நண்பர்களே! கிராமங்களுக்கு எங்கள் ஊரில் இருந்துதான் தினத்தந்தி செல்லும். எனவே அதே வழியாக ராணி காமிக்ஸ் வந்து சேர்ந்தது.  தலைவர் பட்டையை கிளப்பும் காதலியை விற்ற உளவாளி!!! மறு பதிப்பு இருக்கு போட்டுடலாம்! ஹி ஹி ஹி !!


தெரியுதா இந்த அழகி யாரென்று?? நம்ம ரம்யா கிருஷ்ணன் அவர்கள்தான். விளம்பரம் வருவது ஒரு கட்டத்தில் அளவாக இருந்தால் தவறில்லைதான் என்பது என் கருத்து!


 இறுதியாக பெரு மூச்சு விடும் நண்பர்களுக்கு ஒரு சில வார்த்தைகள். சென்னையில் இருக்கும் சில ஆங்கிலேயர் கால கட்டிடங்களை பார்க்கும்போதும், பழங்கால தேக்கு மர  வேலைப்பாடுகளை பார்க்கும்போதும் நமக்கு தோன்றுமே!! அடடா இப்படி ஒரு கால கட்டமும் கடந்து சென்றுதான் இருக்கிறது என்றே நினைத்து ஏங்க செய்கிறோமில்லையா? அதே நினைவுகள்தான் இப்போதும் எழுந்திருக்கும் அல்லவா? சரி விடுங்க ஜி!

    புது காமிக்ஸ்கள் வாழ வளர தழைத்தோங்க நம்மால் ஆன முயற்சிகளை எடுப்போம் நண்பர்களே! முத்து காமிக்ஸின் நெவெர் பிபோர் ஸ்பெஷல் முன்பணம் கட்டியாச்சா? ஆதரிப்பீர்! நாற்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த பதிப்பகத்தாரின் அற்புதமான படைப்பு! பத்து கதைகள்! அதிரடி, நகைச்சுவை, கலாட்டா நிரம்பிய இதழ்!

        பழைய அரிதான காமிக்ஸ்களுக்கு என்று தி காமிக்ஸ்   ப்ராஜக்ட் என்கிற ப்ளாக் இயங்குகிறதில்லையா? அதே போலதான் அந்த காலம் திரும்பிவராத நிலையில் இருப்பதை பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே! http://archive.kaskus.co.id/thread/3870846/2000 என்கிற முகவரியில் நிறைய காமிக்ஸ்கள் உள்ளன சென்று படித்து தமிழுக்கு கொண்டுவர தங்களால் இயன்ற முயற்சிகளை எடுங்கள்! நண்பர்கள் http://www.kittz.info/2012/12/super-hero-tiger-action.html திரு.கிருஷ்ணா அவர்களது முகவரியில் தலை நீட்டினால் அங்கே டைகர் ஹென்றி என்கிற இணை பிரியா ஜோடியின் கதை காத்திருக்கிறது. படித்து மகிழுங்கள்! மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே! 
சிறப்புரை: 
அன்பு காமிக்ஸ் காதலர் திரு விஸ்வா அவர்களின் கை வண்ணத்தில் மெருகேறிய காமிக்ஸ் படங்களை பாருங்களேன்! அவரது தீரா காமிக்ஸ் காதலுக்கு என் வணக்கங்கள். படங்களை பதிவிடும் முன்னர் மிக சிறப்பாக மெருகேற்றி பின்னர் வெளியிட்டால்தான் மிக அருமையாக அமையும் என்னும் உயர்ந்த சிந்தனை உள்ள அவரிடம் இனி வரும் நாட்களில் இதில் சிறப்பான கவனம் செலுத்துவேன் என்பதை இங்கேயே உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்! வருகைக்கும் காமிக்ஸ் வளர்ச்சியில் தங்கள் அக்கறைக்கும் வழி கட்டி உதவிய மாபெரும் சிந்தனை உயர்வுக்கும் மிக்க நன்றிகள் தோழரே! 
இமயமே!
நீ ஒரு அழகான கவிதை!

அடுத்த பதிவுகளில் உங்களை சந்திக்கும் நாள்வரை உங்களிடமிருந்து நீங்காத விடைபெறுவது உங்கள் இனிய நண்பன் --- ஜானி 

சிறப்பு நன்றிகள் :

1.முதல் காமிக்ஸ் பிளாக்கர் நண்பர் முத்து விசிறி அவர்கள்
மற்றும் 
2."அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் - காமிக்ஸ் பூக்கள் " அவர்களையே சாரும்.அவரது வழிகாட்டுதல் எனக்கும் கிங் அவர்கள் மூலம் கிடைத்தால் இனி மங்கலான பக்கங்கள் மிளிரும் என்பதனை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்!
Comments

King Viswa said…
உங்கள ப்ளாக்கில் முதலில் வந்து கமென்ட் இடும் பெருமை இந்த முறை எனக்கே தோழரே.

அட்டகாசம். நண்பரே. இந்த கதை பின்னாளில் ஒரு முறை ராணி காமிக்ஸில் ரீ பிரிண்ட் செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்றே நம்புகிறேன்.

ஆனால் ரீப்ரின்ட்டில் கலரில் வெளியிடுகிறேன் என்று மிகவும் மோசமாக வண்ணத்தில் வெளியிட்டார்கள்.
parimel said…

நன்றாக ஸ்கேன் செய்து வெளியிடப்பட்டுள்ளது உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பழுப்பு கலரை வெண்மையாக்க பல சாப்ட்வேர்களில் எளிய முறைகள் உள்ளன பயன்படுத்தி பாருங்கள் இன்னும் உங்கள் பதிப்பு மெருகேறும்.

King Viswa said…
நண்பரே,

இந்த ஸ்கான் யுக்திகளுக்கு நன்றிகள் சொல்வதெனின் அனைத்தும் "அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் - காமிக்ஸ் பூக்கள் " அவர்களையே சாரும்.

அவர்தான் என்னுடைய ஸ்கான் குரு.
King Viswa said…
இந்த புத்தகம் நம்முடைய காமிரேட் கல்லிடைக்குறிச்சி R.சரவண குமார் அவர்களுடையது. இவர் நமது தளங்களில் (RSK) என்கிற பெயரில் கமென்ட் இடும் நெடுநாள் வாசகர்.

இவருடைய புத்தகம் கல்லிடைகுறிச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றுள்ளது. அங்கிருந்து உங்கள் கைக்கு வந்துள்ளது.

உலகம் மிகவும் சிறியது என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா என்ன?
சைமன்ஜி நல்லொதொரு ஆரம்பம்.
முழு காமிக்ஸையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
என்னிடம் ஸ்கேனர் இல்லை.
ஆகையால் புத்தகங்கள் ஸ்கேன் செய்ய முடியவில்லை.
உங்களுடைய ஸ்கேன்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
தொடருங்கள் உங்களது நற்தொண்டை.

என்னுடைய தளத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
நான் வலைபூ ஆரம்பிதர்க்கு நண்பர் விஸ்வா அவர்களின் வலைபூவும் ஒரு தூண்டுதல் தான்.
இந்த நேரத்தில் நானும் எனது நன்றிகளை அவருக்கு உங்கள் வலைபூ மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பரே

நான் அதிகம் ராணி காமிக்ஸ் படிப்பதில்லை (முன்பு உண்டு, இப்பொழுது இல்லை).

ஆனால் உங்களது கட்டுரை எங்கே மீண்டும் படிக்க வைத்து விடுமோ என்று பயமாக இருக்கிறது (அலைபாயுதே பாணியில் படிக்கவும்)

சூப்பர் தலைவரே ...

நண்பர் விஸ்வா, உங்களது வலைத்தளம் மிக நீண்ட நாட்களாக புதிக்கப்படாமல் உள்ளதே ... புலி பதுங்குவது எதற்கோ ?

திருப்பூர் ப்ளுபெர்ரி
King Viswa said…
திருப்பூர் ப்ளுபெர்ரி

//நண்பர் விஸ்வா, உங்களது வலைத்தளம் மிக நீண்ட நாட்களாக புதிக்கப்படாமல் உள்ளதே ... புலி பதுங்குவது எதற்கோ ?//

அண்ணே,

நான் புலியா? அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லை என்பது நாம் இருவருக்குமே தெரியும்.

முன்பெல்லாம் மாதத்திற்கு இரண்டு மூன்று முறைதான் பயணம். அதுவும் ஒரு பயணம் ஒரு வாரம் வரை செல்லும். ஆனால் இப்போதெல்லாம் சிறிய, சிறிய பயன்களாக பல. ஆகவே நேரமின்மையும் ஒரு காரணம்.

வேறொன்றுமில்லை.

சென்னையில் இருக்கும் நண்பர் ஜான் சைமனை சந்திக்கவே முடியாமல் இருக்கிறேன்.
King Viswa said…
கிருஷ்ணா வ வெ

//நான் வலைபூ ஆரம்பிதர்க்கு நண்பர் விஸ்வா அவர்களின் வலைபூவும் ஒரு தூண்டுதல் தான்.
இந்த நேரத்தில் நானும் எனது நன்றிகளை அவருக்கு உங்கள் வலைபூ மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.//

அனைத்து புகழும் நண்பர் முத்து விசிறிக்கே சமர்ப்பணம்.

அவரே முன்னோடி.

முதல் தமிழ் காமிக்ஸ் பதிவர்
John Simon C said…
நல்வரவு தோழர்களே! எதோ நாம அலைஞ்ச மாதிரி நம்ம நண்பர்கள் அலையக்கூடாது என்ற எண்ணம்தான்! வருகைக்கு பகிர்வுக்கும் நன்றிகள் பல! ப்ளூ பெர்ரி அவர்களே நீங்கள் ரசிக்க கொஞ்சம் கடிக்க கொஞ்சம் என அடுத்த அதிரடிகள் உள்ளன! அடிக்கடி வாங்க கிருஷ்ணா அவர்களே! முடியும்போது ஸ்கேன் பகிருங்கள் போதும் ஹி ஹி ஹி கிங் அவர்களை ஒரு மணி நேரம் போனில் கதைத்து நிறைய விடயம் அறிந்து கொண்டேன்! அவருக்கு என் நன்றிகள் மறுபடியும்!
John Simon C said…
சரவணன் அவர்களுக்கு தனியே தெரிவித்து விடுவோம்! மிக கூர்மையான பார்வை நண்பரே உங்களுக்கு!
Lucky Limat said…
தல அருமை.அப்படியே நமக்கு ஸ்கேன் மெயில் தட்டினால் நானும் படித்து கொள்வேன்.
நண்பர் ஜான் அவர்களே

உங்களது ஸ்கேன் அனைத்தும் அருமை ...


எனக்கு உங்களது ஸ்கேன் மெசின் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆசை ..

எனவே உங்களது ஸ்கேன் மெசினை உடனே ஒரு ஸ்கேன் எடுத்து எனக்கு அனுப்பி வைக்கவும் ...

திருப்பூர் ப்ளுபெர்ரி
John Simon C said…
நல்ல கிண்டல் அய்யா!
To Viswa from RSK on FB :)

//Saravana Rsk ஜானி! நான் பள்ளி நாட்களில் கலெக்ட் செய்த புக்ங்க இது.!!!
என்னைக் கண்டறிந்து கமென்ட் இட்ட திரு.கிங் விஷ்வா அவர்களுக்கு என் நன்றிகளைச் சேர்த்துவிடுங்களேன்.
நன்றி ஜானி!
நன்றி கிங் விஷ்வா!//
நினைவுகளை தூண்டும் பதிவு நண்பா!!! ஆனால், உங்கள் டெர்ரர் போட்டோவை எதிர்பார்த்து வந்த எனக்கு, வழக்கம் போல ஏமாற்றம் மட்டுமே மிச்சம்! புதுசா ஏதாவது துப்பாக்கியோட போட்டோ போடுங்க ஜான் ஜி! :)

நான் காமிக்ஸ் பற்றியும் எழுதுவதிற்கு - முத்துவிசிறி, ரஃபிக், கிங் விஸ்வா, கனாக்களின் காதலர் இவர்களைப் போன்ற இன்னும் பல சீனியர் காமிக்ஸ் ரூட்டுத் தலைகளும் காரணம்! ஆனால், பெயர் குறிப்பிட்ட இவர்கள் முக்கியமானவர்களில் முதன்மையானவர்கள்! :)
ரொம்ப நன்றி சைமன்.

த.ஓ.இளவரசி நிறைய மலரும் நினைவுகளை கிளறிவிடுகிறாள். இவளை வாசிக்க அந்த காலத்தில் நான் பட்ட பாடு...
bala10 said…
நன்றிகள் நண்பா தங்கள் முழுப் பதிவை படித்து மகிள்சி அடைந்தேன் ஏனென்றால் நான் ஒரு ராணி காமிக்ஸ் பிரியன் . நான் பல வருடங்களாக ஐரோப்பாவில் வசிப்பதால் இப் புத்தகங்களை பார்க்க கூட முடியவில்லை
முடிந்தால் 1994ம் வருடங்களுக்கு முன்னைய ராணிகாமிக்ஸ் முழுப் பதிவுகளை பதிவு செய்யவும்
email = balakumar257@gmail.com
John Simon C said…
வருகைக்கு நன்றிகள் நண்பர்களே! நல்வரவு திரு பாலா அவர்களே! தங்களை போன்ற காமிக்ஸ் ரசிகர்களை இந்த ப்லாகில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி! கடல் கடந்து தேசம் கடந்து இணையம் வழியாக நாம் ரசனைகளை பரிமாறி கொள்ள முடிந்தது குறித்து பெரு மகிழ்ச்சி! லயன் முத்து காமிக்ஸ்கள் வளர ஆதரவு கரம் நீட்டுங்கள்! சாகா தமிழ் காமிக்ஸ் மூலம் தன கரத்தினை விரிக்க தினத்தந்தி தந்த நல்ல ஆதரவு என்னும் நிலைப்பாடுதான் இங்கே நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது! திரும்ப நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் ராணி காமிக்ஸ் மலர வாஞ்சையாக உள்ளது! பார்க்கலாம்! ரசிகர்கள் அதிகம் பெருகினால் அதுவும் கட்டாயம் நடக்கும்! வருகைக்கு நன்றி தோழர்களே! அடுத்த பதிவுக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.....
krish said…
Fantastic effort johny and viswa.
John Simon C said…
thanks krish sir!
John Simon C said…
thanks krish sir!
John Simon C said…
ungal mail idyai enakku anuppungal ithan digital version kodukkiren. athu chokkalingam sir + my effort. innum pala muyarchigal nadanthu kondu ullana! kindly visit tamil comics times facebook page!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!