வணக்கம் அன்புள்ளங்களே!
நலமே! நலமா?
சிலந்திகளில் அருமையான வகைகள் உண்டு! அவற்றில் இருந்து மாறுபட்டு நிற்கும் ஒரு சிலந்தி வகை ப்ளாக் விடோ என்கிற பெயருள்ள கருப்பு விதவை சிலந்தியாகும்.
இதே பெயரில் நடாஷா என்கிற காமிக்ஸ் பாத்திரமும் உண்டு.
http://i.annihil.us/u/prod/marvel//universe3zx/images/c/cf/BlackWidow-mini-Granov.jpg
http://marvel.com/characters/bio/1009189/black_widow
நிற்க! நமது லயன் காமிக்ஸில் ஜூன் மாதம் 1995 ஆம் வருடம் நூற்றி பதிமூன்றாவது வெளியீடாக மலர்ந்த புத்தகம்தான் "விபரீத விதவை"
முன் அட்டை
பின் அட்டை இன்ஸ்பெக்டர் ஆபத்தின் துப்பறியும் கேள்வியுடன் இப்போதைய நரிலாக் போல வெளியாகும்! சரியான பதிலுக்கு பரிசு அறிவிப்பும் இருக்கும்.
ஹாட் லைன் இல்லாத துவக்கமா?
மியாவ் மியாவ் மரணம் என்கிற கதை துவக்கி வைத்த விபரீத வீரர் சார்லசின் சாகசம் இங்கே மறுபடியும் துவங்குகிறது!
தனியே ஒரு ஜோடி ஒரு கோடீஸ்வரரின் நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்கும் துணிவுடன் சென்று இறங்குகிறது! அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது! பாதிக்கப் பட்ட பெண்ணின் தகப்பனார் துப்பறியும் பணியை சார்லசிடம் ஒப்படைக்கிறார். அவரது தில்லான முயற்சிகள் இறுதியில் புற்று நோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் பக்க விளைவாக சிலந்தியாக உருமாறும் சக்தி கொண்ட பெண்ணிடம் முடிகிறது! அவள் அவ்வப்போது கோடீஸ்வரர்களை திருமணம் செய்வதும் போட்டுத் தள்ளி விட்டு காணாமல் போவதும் தொடர்ந்ததும் அதே போன்ற சம்பவங்கள் எங்காவது உருப் பெறுகிறதா என்பதை சார்லஸ் ஆராய்ந்து அங்கிருக்கும் கோடீஸ்வரரின் விதவையை சந்தேகித்து கை ரேகையை எடுத்து சோதித்து பார்த்து அதே பெண்தான் ஆனால் வெவ்வேறு வடிவம் எடுக்கிறார் என்பதை புரிந்து கொண்டு நேரடி நடவடிக்கையாக அதிரடியாக உள்ளே நுழைந்து உண்மையை வெளிக் கொணர முயல்கிறார் சார்லஸ்! அதன் பின் தொடரும் பரபரப்பூட்டும் சம்பவங்களை படித்து மகிழுங்கள்!
அறிவியல் உண்மை _ப்ளாக் விடோ சிலந்தி வகை தன் ஆண் இணையினுடன் இணைந்து இனப்பெருக்கம் காரணமாக உடலுறவு கொண்ட சில மணித் துளிகளில் ஆண் இணையை கொன்று தின்று விடும்! இது மிகத் தெளிவான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மையாகும். அதன் விஷமும் கொடூரமான தன்மை கொண்டது!
ஏஜன்ட் பூஜ்யம் அவ்வளவாக சிரிக்க வைக்கவில்லை என்பதால் இன்னும் பதிப்பு காணாமல் உள்ளார் தமிழில்!
பூத வேட்டைக்கு முன்னரே விளம்பரம் செய்துள்ள கதை!
திருவண்ணாமலை நண்பர் ஜெய் சங்கரின் திறமைக்கோர் சான்று!
ஜட்ஜ் dred சிறு சிறு கதைகளில் அவ்வளவாக ரசிக்க முடியாமல் உள்ளார்! விரைவில் முழு நீள கதையில் ஜொலிப்பார் என நம்புவோம்! சமீபத்தில் சினிமாவாக வந்தது!
அடுத்தது இவரை எப்போ வெளியிடறீங்க என்கிற கும்மி ஸ்டார்ட் பண்ண தயாரா? நண்பர்களே?
வருவாரா? இவர் வருவாரா?
இந்தக் கதையும் மிக சிறப்பான வெற்றியை ஈட்டிய கதையாகும்!
ரத்தக் கரம் என்கிற ரிப் கிர்பி கதையில் முதலில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு பின்னர் கண்டு கொள்ளப் படாமல் இப்போது உயிர் பெற்று மலர்கிறது! காமிக்ஸ்களுக்கு அழிவில்லை! இதுவரை வெளியான பட்டியலை நண்பர்கள் திரு ஸ்டாலின் மற்றும் பலர் சேர்ந்து தயாரித்து உள்ளனர்! அவர்களது சீரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!