Sunday, 14 July 2013

பைபிள் காமிக்ஸ் வரிசை --மோயீசன்

ஆருயிர் காமிக்ஸ் தேச பிரஜைகளே! இந்த வாரம் இனியதோர் வாரமாக அமைந்திட பரம்பொருளை வணங்கி வேண்டுகிறேன்! நினைவுகள் நிஜமாகட்டும்! நிம்மதி உங்கள் மனதில் நிரந்தரமாக குடியேற்றம் கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறேன்!

இந்த முறை புதியதொரு காமிக்ஸ் முயற்சியுடன் தங்களை சந்திக்கிறேன். 


கிறிஸ்துவ பெருமக்களின் வரலாறும் கடவுளுடன் அவர்கள் ஆதி காலத்தில் கொண்டிருந்த மாபெரும் பற்றும் உறுதியும் காமிக்ஸ் வடிவில் முன்பொரு காலத்தில் வெளியாகின. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் கண்காட்சியில் நிறைய காமிக்ஸ்கள் அருமையான ஓவியங்களுடன் கிடைத்து வந்தன. ஆனால் தற்போது அங்கு வெளியிடப்பட்ட ஒரு காமிக்ஸ் கூட கிடைக்காத நிலை!! தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது! வைத்து இருக்கும் நண்பர்கள் யாரேனும் கொடுத்து உதவினால் மிகுந்த ஆசிர்வாதமாக இருக்கும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!

நண்பர் R.T.முருகன் அவர்களது அன்பினால் இப்போது நீங்கள் படிக்கப் போகும் காமிக்ஸ் கிடைத்தது. அவருக்கு தமிழ் காமிக்ஸ் தேசத்தின் சார்பில் வணக்கங்கள்! நன்றி நண்பரே! இது மலையாளம் மொழியில் வெளியாகி பின்னர் தமிழுக்கு வந்த ஒரு காமிக்ஸ் என நினைக்கிறன்! அறிந்த பெருமக்கள் தகவல் அளிக்கலாமே??


இனி கதை --பண்டைய எகிப்து நாடு பலம்பொருந்திய நாடாக விளங்கிய காலக்கட்டத்தில் யூதர்கள் அவர்கள் தேசத்தில் வசித்து வந்த ஒரு வலிமை வாய்ந்த இனமாக இருந்தனர். அவர்களது தலைவர் யோசேப்பு எகிப்தின் ஆளுநராக ஆண்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் வரலாறு திரும்பியது. அவர் தங்களது நாட்டின் பஞ்ச காலத்தில் செய்த அரிய  சேவைகளை எகிப்தியர்கள் மறந்தனர். யூதர்களை அடிமை நிலைக்குத் தள்ளினர். பிரமிட் போன்ற பல மாபெரும் கட்டடங்களின் பணிகளில் வற்புறுத்தி ஈடுபட வைத்தனர். அந்த சூழலில் மோயீசன் என்கிற மோசஸ் அங்கே ஒரு யூத பெண்ணுக்கு பிறக்கிறார். அவரை கொன்று விடுவார்கள் என அவரது தாய் பயந்து நைல் நதியில் ஒரு பெட்டியில் வைத்து வீசுகிறாள். அந்த இடத்துக்கு வந்த மன்னனின் மகள் அந்த குழந்தையை தனது தத்துப் பிள்ளையாக ஏற்று வளர்த்து வருகிறாள். ஒரு கட்டத்தில் தான் யூதராலும் வெறுக்கப் படுவதுடன் எகிப்தினராலும் ஒரு கொலைக்காக தேடப் படும் சூழல் வந்ததை தொடர்ந்து நாட்டை விட்டு ஓடிப் போகிறார். அவரை தேவன் ஒரு முள் செடியில் தீயாக தோன்றி ஆட்கொண்டு எகிப்தில் அடிமைப் பட்டு இருக்கும் தன் மக்களை மீட்டு வர அனுப்புகிறார். அவருக்கு திக்கு வாய் என்றபோதிலும் தனது சகோதரன் ஆரோனின் உதவியுடன் எகிப்துக்குப் போய் அந்த தேச மாந்திரீகர்களை வென்று மன்னனின் மிரட்டல் உருட்டல்களைக் கண்டு அஞ்சாமல் இறைவன் அளித்த பல வரங்களை செயல் படுத்தி செங்கடல் வழியே கடலின் நடுவில் பாதை திறந்து மக்களை மீட்டு கானான் தேசத்துக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இறுதிவரை இறைவனின் கட்டளைகளை காத்து மக்களை நல்வழிப் படுத்தி இஸ்லாமியப் பெரியோர்களால்  மூஸா அலை ஹி சலாம் என்று அன்புடன் அழைக்கப் படும் 
அன்பர் திருவாளர் மோயீசன் அவர்களது வாழ்க்கை ஒரு காமிக்ஸாக தமிழ்ப் படுத்தப் பட்டிருப்பது எனக்கு ஒரு விதத்தில் பெருமையே! 
சின்னதொரு வேண்டுகோள் நண்பர் வினோஜ் அவர்கள் புதியதொரு வலைப்பூவை துவக்கி உள்ளார். அவர் துவக்க நிலை ஆட்டக்காரர் ஆகிட தங்களது மேலான ஆதரவினையும் அறிவுரைகளையும் அள்ளி வழங்கிட உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!

http://worldcomicraj.blogspot.in/
என்றும் அதே அன்புடன்!!
உங்கள் உற்ற நண்பன் ஜானி!!!

4 comments:

  1. welcome ji! just right clik n save!

    ReplyDelete
  2. நீங்கள்தான் உண்மையான மனிதர்!!! பைபிள் உண்மை வரலாறை எடுத்துக்காட்டும் விதமாக அதனை comics கட்டத்துக்கு கொண்டு வந்து உள்ளீர்கள்... இப்படி கிறிஸ்தவர்கள் எதற்காக பிறந்தார்கள் என்று நிருபியுங்கள்!!!

    ReplyDelete

IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்_Suresh Chand

for pdf hit link below: IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்