பூத்ததொரு புத்தம் புது மலர்!!!!

வணக்கங்கள் கனவு மிகு நெஞ்சங்களே! 
வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒவ்வொரு வித கனவு இருக்கும்! அது அவ்வப்போது சின்னச்சின்னதாய் நிறைவேறும்போது கிடைக்கிற சந்தோஷங்கள்தான் அடுத்தடுத்த சாதனைகளுக்கு எரிபொருளாக இருந்து நம்மை தள்ளிக்கொண்டு செல்கின்றதாக அமையும்!
எனக்கு காமிக்ஸ் மீது எப்போதுமே ஒரு மையல் ஊடு பாவாக இருந்து கொண்டே இருக்கிறது! குறிப்பாக தமிழக காமிக்ஸ் உலகில் புத்தம் புது முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்ற நேரங்களில் எக்கச்சக்க சந்தோஷங்கள் நிறைந்து வழிந்து நெஞ்சம் மகிழ்ச்சியில் மையம் கொள்கின்ற நிலையை அனுபவிக்க ஒரு கொடுப்பினை வேண்டும். தற்போது லயன் காமிக்ஸ் இருநூறு ரூபாய் விலையில் புத்தம்புதிய கதைவரிசைகளுடன் சோதனை முயற்சியாக கொண்டு வந்திருக்கும் லயன் ஆல் நீயூ ஸ்பெஷல் என்கிற புத்தகம் மிக மிக சிறப்பானதாக அமைந்துள்ளது! காமிக்ஸ் படிக்கின்ற நெஞ்சங்கள் வாங்கிப் படித்து நண்பர்களுக்கும் தந்து உதவி மேலும் அதிக வாசகர்களை லயன் காமிக்ஸ் வாசிப்பாளராக மாற்றிட இந்த பதிவு உதவினால் மகிழ்வேன்! 

க்ரீன் மேனர் என்கிற பெயரில் ஆங்கிலத்தில் வந்திட்ட “பச்சை மாளிகை படுகொலைகள்” கதை வரிசை தமிழுக்கு இந்த புத்தகத்தின் மூலம் அறிமுகமாகிறது.

கொலை செய்வீர் கனவான்களே –அவலத்தில் குதூகலம், ஒரு பின்குறிப்பு, சிறு கொலையும் கைப்பழக்கம், இரசித்துக் கொல்ல வேண்டும்,நிஷ்டூர தண்டனை, போதையில் வந்த போதனை ஆகிய கதைகள் இடம் பெற்று உள்ளன. ஒரு ஊர்ல ஒரு பங்களா அந்த பங்களா வேலைக்காரன் மனரீதியாக அந்த பங்களாவின் ஆத்மாவாக நீண்ண்ட கால வாசம் செய்தவன், ஆங்கே வாசம் செய்த பெரிய மனுசங்களின் சிறிய மனசை பற்றி கதைகதையாக சொல்வதாக விரியும் கதையில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை நண்பர்களே! மிஸ் பண்ணக் கூடாத கதை இது.
அடுத்து “தோட்டா தேசம்” கமான்சே என்கிற பெண்ணின் வீரத்தையும், ரெட் டஸ்ட் என்கிற வீரனின் தீரத்தையும், மூவாறு பண்ணையின் மனிதர்களையும் அவர்களது பண்ணைக்கு ரயில் பாதை, செவ்விந்தியர்கள் என அடுத்தடுத்து வரும் சோதனைகளையும் அவற்றைக் கடந்து வர அந்த மாந்தர்கள் என்னென்ன சாகசங்களிலும் தியாகங்களிலும் ஈடுபட்டார்கள் என்பதைக் குறித்தும் அதிரடிக்கும் சித்திரத் தரத்தினில் ரசித்திட மறவாதீர்கள்.
பிரளயத்தின் பிள்ளைகள் ----விவரிக்க இயலா சோகங்களை பதிவு செய்துள்ள இந்த கதை நிச்சயம் உங்களை பாதிக்கும். ஜெர்மனியின் தீரமிகு போர் தனது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமையாது ஹிட்லர் என்கிற தனி மனிதனின் இன துவேஷத்தால் மாறிப் போய் வரலாற்றின் இருண்ட பக்கங்களாய் விரிகின்ற அவலத்தின் ஒரு சின்னஞ்சிறு பகுதியை நாடோடிகளின் வாழ்க்கை சம்பவங்களை தொட்டுக்கொண்டு இந்த கதை விரிகிறது! படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய கதை!
அடுத்து கொஞ்சமே தலை காட்டிய ஸ்டீல் பாடி ஷெர்லாக் கூலியில்லா கைக்கூலி, நதியில் ஒரு நாடகம் ஆகிய இரண்டு கதைகளுடன் வந்திருக்கிறார். உண்மையான ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை நையாண்டி செய்கின்ற வகையாயினும் படிக்கப் படிக்க பிடிக்கும் வகையானவர் இவர்.
தவிர நண்பர் சுந்தர வரதனின் கடிதம் இடம்பெற்றுள்ளது.

திரு.இளங்கோ ரவி அவர்களது விவரங்களுடன் மாதம் ஒரு வாசகர் பகுதி மலர்ந்துள்ளது. அன்னாருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!! அப்புறம் அப்புறமே இன்னொரு பொழுது வளமுடன் விடியும் என்ற நல்ல நினைவுகளுடன் தங்களின் அன்பின் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்!!!  
Comments

எனக்கு தெரிந்து ஆல் நியூ ஸ்பெசல் பற்றிய முதல் பதிவு . . கலக்குங்க காவலரே .
P.Karthikeyan said…
சூப்பர் ! தொடர்ந்து கலக்குங்க !
Periyar said…
கலக்கீட்டீங்க!

All New Special - பற்றிய முதல் பதிவு
எனக்கு இன்னும் புக்கே வரல.

நீங்க கலக்குறீங்க
John Simon C said…
welcom thina! தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
நன்றி திரு கார்த்திகேயன் அவர்களே
நன்றி பெரியார் எதை கலக்குனேன் என்று தெரியலைடி மாப்ளே!! ரொம்ப குஷியோ???
கிறுக்கல் கிறுக்கன் அவர்களே எனக்குமே ஆச்சரியம்தான்! அதனால்தான் நெட் ரொம்ப தொல்லை பண்ணியும் இரவு இரண்டரை மணி வரை பொறுமையாக போராடி பதிவு செய்தேன் என்பது உபரி தகவல்! ஹி ஹி ஹி நல்வரவுகள் அனைவருக்கும்!
Krishna VV said…
புத்தகம் கிடைக்காத என்னை போன்றவர்களுக்கு மிக உதவியாக இருக்கிறது.
நன்றி ஜானி ஜி

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!