ஆயாவும் --- ஜானியும் இணையும் அதிரடி!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! 
ரிப்போர்டர் ஜானி கதைகளுடன் கருப்பு கிழவியின் சாகசமும் முன்னொரு காலத்தில் இடம்பெற்று திகில் காமிக்ஸுக்கு அட்டகாசமான வெற்றியை தேடித் தந்தது. அதில் ஒரு கதை மட்டும் இங்கே!வருகிறேன் தோழர்களே! 


Comments

raj kumar said…
aaya super,johnny scan eppa poduving aarvamaaga ullen
John Simon C said…
நம்ம கதையை நாமளே போட்டா எப்படி ஜி? ஓவர் டு கிரிஷ்!! ஹி ஹி ஹி இதான் கிரேட் எ ஸ் கே ப் ஜி!!! இந்த ஆயா கதைகளை இனி மறுபதிப்புகள் மூலமாக தரிசிப்பது இயலாது என திரு விஜயன் அவர்கள் குறிப்பிட்டு சொல்லிவிட்டார்! ஜானி கதைகள் அப்படி அல்ல! மீண்டும் உயிர்பெறும் வாய்ப்புகள் உள்ளன என நான் திடமாக நம்புகிறேன் ஜி! அப்புறம் வேலை புளியந்தோப்பு காவல் நிலையம்! உங்களை மீட்ட முடியாமைக்கு வருந்துகிறேன்! உங்கள் ராணி காமிக்ஸ்கள் மிக பத்திரமாக வைத்து இருக்கிறேன்! நேரமும் காலமும் அமைந்தால் நாகாவிடமாவது சேர்ப்பிக்க முயற்சிகளை மேற்கொள்கிறேன்! வாகனம் வாங்க முயன்று வருகிறேன்! இரவில் ரோந்துப் பணிகள் எனக்கு புதியது! வாகனம் கட்டாயம் வேண்டும்! எனவே வாங்கியதும் அடிக்கடி சந்திக்க முயல்கிறேன்! நண்பர்கள் வேளச்சேரியில் அமைந்துள்ள பீனிக்ஸ் இல் கூடப் போகின்றனர்! தாங்கள் வருவீர்களா?
ஆயாவும் ஜானியும் என்று ஏன் பெயரிட்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஆயா ஜானியின் துணை நாடவில்லை; ஜானி தான் ஆயாவின் கதை கேட்க ஆவலாய் உள்ளதாக ஆங்காங்கே தகவல்களும் வதந்திகளுமாக கசிந்துள்ளன. ஜானிக்கும் ஆயாவுக்கும் போட்டி வைத்தால் ஆயாவே இன்றும் என்றும் ஆயா-டக்கர் என்றும் நிரூபணமாகும் என்று நினைக்கிறேன் !
கறுப்புக் கிழவியின் கதையில் 63 ஆம் பக்கத்தின் கடைசி பேனலில் உள்ள சித்திரத்திற்கு, கொள்ளையில் மீட்கப்பட்ட அத்தனை செல்வங்களையும் அடகு வைத்து விடல்லாம் போலிருக்கிறது நண்பரே :) அதுவும் வண்ணத்தில் வருவதாக இருந்தால், நம் சொத்தில் சிறு பகுதியை கருப்பு கிழவி அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விடாலாம் என்றே தோன்றுகிறது !?
இதைவிட சிறந்த கறுப்புக் கிழவியின் கதைகளை பதிவிட வேண்டுகிறேன். என்றாவது ஒருநாள் கருப்பு கிழவி நமக்கு துணை வருவாள்; அன்று நாம், இவ்வுலகை இறந்துவிட்ட பேய்களை கொண்டும் உயிர் துறந்த ஆவிகளை கொண்டும் ஆட்சி செய்வோம், நம் கிழவியை நமக்கு தலைவியாய் கொண்டு சுடுகாட்டு பேய்கள் அனைத்தையும் நமக்கு ஏவல் புரிய வைப்போம் !

அதுவரை நாம் நடு ஜாமத்தில் கிழவியின் கட்டளைக்காக விழித்திருப்போம் !
John Simon C said…
வெல்கம் ஜி! ஆயாவுக்கு அதிரடி வரவேற்பு கிடைக்கப் போவதற்கான தொலைதூர மின்னல் கீற்றுகள் புறப்பட்டு விட்டதாகவே தங்கள் பின்னூட்டம் காட்டுகிறது!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!