ஞாயிறு, 27 அக்டோபர், 2013
தேசமலர் காமிக்ஸ் தொடரும் ஒரு தேடல் படலம்......
மாலை வணக்கம் நண்பர்களே! அப்புறம்? பட்டாசுகளை வாங்கிக் குவித்து விட்டீர்களா? கொடுக்கிற காசுக்கு நல்ல பட்டாசா வாங்குங்க! சலுகை விலையில் பொருள்களை அள்ளும்போது கவனமா பொருள்களை சரிபார்த்து வாங்குங்க! எதையோ தலையில் கட்டிவிடப் போறாங்க! எச்சரிக்கை!
உங்களுக்கு ஒரு வேலை வைக்கப் போறேன்! தேசமலர் காமிக்ஸ் குறித்த செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். முகநூலில் கூட செய்யலாம். எத்தனை புத்தகம்தான் அதில் வந்தது? எத்தனை ஸ்கான் முடித்து ஆவணப் படுத்தப் பட்டுள்ளது? உங்ககிட்ட எந்த வடிவிலாவது இருக்கா? அதை டிஜிட்டல் முறையில் தொகுக்கலாமா? இது குறித்து உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் வாங்கி கொடுக்க (ஹி ஹி ஹி இலவசமாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்!!!) முடியுமா? உங்களுக்கு தேசமலர் போன்று அரிய காமிக்ஸ்களை பாதுகாக்கும் எண்ணம் உள்ளதா? அதில் எவ்விதம் ஈடுபடலாம் என்று நினைக்கிறீர்கள்?
இது போன்ற விவாதங்கள் மறைமுகமாக நிறைய நடந்து வருவது நாம் அறிந்ததே! புத்தகங்களை நேசிக்கும் மாந்தர்கள் மட்டும் சற்று வெளிப்படையாகவே இது குறித்து புலம்பி வருகிறோம்! இதில் தேவையில்லாத அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் நமக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறதே என்கிற பெருமூச்சுகளும் உள்ளவர்கள் ஜாலியாக இங்கே வாங்க இல்லைனா தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முக நூல் பக்கத்துக்கு வாங்க! அங்கே உங்கள் ஆதங்கங்களை பட்டி டிங்கரிங் பார்த்துடலாம்! இப்போதைக்கு இந்த அட்டைப் படம் (ஹி ஹி ஹி தினா உங்க நற நற நத்தம் தாண்டியும் கேக்குது பாஸ்!) பார்த்து ரெலாக்ஸ் ஆகுங்க. பின்னாடி புத்தகம் உங்களை ஏதாவது ஒரு ரவுண்டில் வந்தடையும். என்ஜாய் தீபாவளி பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ்! (ஆமாப்பா அவங்களும் காமிக்ஸ் படிக்கிறாங்களே!!) எங்க ஆபிஸ்லேயே ஒரு பெண்மணி கிரீன் மனோர் படிச்சிட்டு அசந்துட்டாங்க! bye! bye!
சனி, 26 அக்டோபர், 2013
அன்புள்ள ஆசிரியர் அய்யா எ.சோதி அவர்கள்....
அன்புள்ளம் கொண்ட நண்பர் பெருமக்களே வணக்கம்!
பெருமதிப்புக்குரிய ஆசிரியர்களில் கதை சொல்லும் ஆசிரியர் எப்போதுமே சிறப்பு வகிப்பார்;அனைத்து மாணவர்களின் அன்பையும் ஆதரவையும் எளிதாகப் பெறுவார். அவரை சுற்றி அவரது அன்பர்கள் கூட்டம் எப்போதுமே வலம் வரும். கதைக்கும் ஆசிரியருக்கு தனி மவுசு உண்டு.
* எனக்கு வாய்த்த ஆசிரியர் திரு.சிம்சோன் அவர்களும் அவரது மனைவி திருமதி.கலாவதி டீச்சர் அவர்களும் அவர்களது அன்பும் அரவணைப்பும் என்றுமே மறக்க இயலாத நிகழ்வுகள்! சாரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. அவருக்கு தண்ணீர் டம்ளரில் கொண்டு சென்று கொடுத்தால் மேலே கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு நடுவில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு அடியில் உள்ள நீரையும் ஊற்றிவிடுவார். அதற்கு அவர் சொல்லும் காரணம் இன்னும் விசித்திரமானதாக இருக்கும் மாசுகள் நீரின் மேல் மற்றும் அடியில்தான் தாங்குமாம்.
*எனது மணலூர்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் கே.என். (நாராயணன்) சார் ஒருமுறை பாடம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு நபர் அனுமதியின்றி உள்ளே புகுந்தார். யாருங்க நீங்க என்று விசாரித்தால் பதில் சொல்லாமல் சாக்பீஸை எடுத்து போர்டில் கிறுக்கினார்.
"HEA MISTAR BARMISAN"
பின்னர் தான் கொணர்ந்த நோட்டிசை எடுத்து எங்களிடம் காட்டினார்! அதில் நான் அனாதை எனக்கு உதவுங்கள் என்று எழுதி இருந்தது! அதைக் கண்டு கடுப்பான கே.என். சார் அந்த நபரை துரத்தி விட்டார். அவர் எழுதியது என்னவாக இருக்கும் என்று மிகவும் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகே புதிர் அவிழ்ந்தது.
"HEAD MASTER PERMISSION"
என்பதையே அவ்வண்ணம் எழுதியுள்ளார்.
*நானும் என் நண்பன் மற்றும் உறவினன் இளையராஜாவும் மணலூர்பேட்டையில் அந்த காலக் கட்டத்தில் இயங்கிவந்த ஒரு சில வாடகைப் புத்தக நிலையங்களின் தீவிர வாடிக்கையாளர்கள். வாங்குவது காமிக்ஸ் மட்டுமே! அதுவும் லயன் குழும காமிக்ஸ்களே வித்தியாசமான சைஸ்களிலும், நிறங்களிலும் வெகுவாக ஈர்க்கும்படி இருக்கும். டவுசர் பாக்கெட்களை நிறைய நிறைய திணித்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாமல் கச்சிதமாக ஒளிந்து கொள்ளும். அப்படி வாங்கி பதுக்கிக் கொண்டு போன ஒரு ஆர்ச்சி புத்தகம்தான் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி!" வெறித்தனமாக சிறுநீர் கழிக்கும் சந்தில் இரு சிறுவன்கள் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டு படம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? அந்த இடத்துக்கு வந்த ஆசிரியர் செந்தமிழ் செல்வன் கடுப்பாகி அந்த புக்கினை பிடுங்கி சென்று விட்டார். அது எங்க சார் இருக்கு???
*காமிக்ஸ் படித்தாலும் பாடங்களின் மீதும் காதல் கொண்ட என் சித்தப்பா இன்று பிரான்ஸ் தேசத்தில் செட்டிலாகி விட்டார். பின்னர் சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை! மாயத் தீவில் அலிபாபா இன்னும் வெச்சிருக்கீங்களா சித்தப்பா???
*என்னிடம் வாடகை கொடுத்தே காமிக்ஸ் படித்து அந்த நாட்களில் மிக நெருக்கமான நண்பர்களாக மாறிய பச்சை சட்டை பாலாஜி, குன்சு எ குணசேகரன், சரவணன், தத்துவம் என்று நாங்கள் செல்லமாக விளிக்கும் ராஜா என்று பள்ளி சிறுவர் பட்டாளம் வெகு நீளம்!
*இளையராஜாவையும் என்னையும் கடுப்பேற்றுவதற்காகவே களமிறங்கிய சித்தப்பா மகன் சங்கர் பாண்டிச்சேரி வரை சென்று ஞாயிறு சந்தையில் எடைக்குப் பிடித்து வந்ததில் யார் அந்த இரும்புக்கை மாயாவியும் அடக்கம்.
*சோழப்பாண்டிய புரம் முருகன் என்கிற இன்னொரு நண்பர் அந்தக் கால மாயாஜாலக் கதைகளை நம்பி, மோடி வித்தை புத்தகங்களை வாங்கி வசியம், ஆவி, ஏவல், பில்லி சூனியம் என்று பயம் காட்டி காமிக்ஸ் வாங்கிப் படிப்பார். அவருக்கு நாங்கள் செல்லமாக இட்டு அழைத்த பெயர் "மாண்ட்ரேக்".
*எங்கள் காமிக்ஸ் அலப்பரை தாங்க முடியாமல் கடியான நண்பர் மலையப்பன் எங்கிருந்தோ அள்ளி வந்த புத்தகங்களை கண்ணிலே காட்டிவிட்டு பதுக்குவதிலேயே குறியாக இருந்ததால் காமிக்ஸ் கொள்ளை அடிக்கும் படலமும் செய்திட நேர்ந்தது!
நிற்க!

நான் ராணி காமிக்ஸ் ரசிக்கையில் ஆசிரியர்.திரு.எ.சோதி அவர்களது கதைகளையும் மிகவும் இரசித்தேன். அந்த அற்புதமான கரங்களின் குழந்தை இலக்கியத்தில் இருந்து ஒரு சிறுகதை இங்கே பகிர்கிறேன்.
பஞ்ச தந்திர கதைகளைப் போல வெகுவாக ஈர்க்கும்படி கதைகளும் சித்திரங்களும் அமைந்து இருக்கும்! ஆமா பட்டாசெல்லாம் கவனமா பார்த்து வாங்குங்க நாலு கடை ஏறி இறங்கினாலும் தப்பில்லை! எங்க ஆயுதப் படை மைதானங்களில் தள்ளுபடி விலையில் உண்மையிலேயே நல்ல பட்டாசுகள் கிடைக்கும். உங்க அருகாமையில் அமைந்துள்ள ஆயுதப் படை மைதானங்களையும் ஒரு விசிட் அடிங்க நண்பர்களே!
வரட்டுமா?
வரட்டுமா?
புதன், 23 அக்டோபர், 2013
பட்டாசு தீபாவளி!!!!
வணக்கம் அன்பு உள்ளங்களே!
மழை அன்னையின் தாலாட்டில் நனைந்து கொண்டே தீபாவளியை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராகிக் கொண்டு இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! காமிக்ஸ் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் வெகு வேகமாக முகநூல் பக்கங்களில் நிகழ்ந்து வருகின்றன. சில அந்நிய மொழி கதைகளும் ரசிகப் பெருமக்களால் அவ்வப்போது மொழி பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன.
நம் லயன் காமிக்ஸ் நிறுவனம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் டெக்ஸ் வில்லரின் இரண்டு சாகசங்களை குட்டித் தலையணை சைசில் இந்த தீபாவளிக்கு வாரி வழங்கி பட்டாசு கொளுத்துகின்றார்கள். உங்கள் பிரதிக்கு முந்துவீர். மேலும் விவரங்களுக்கு
அதே போல திகிலில் வெளியாகி மிரட்டி வந்த ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை இந்த தீபாவளிக்கு அதிரடியாகக் களமிறக்குகின்றனர்.. மறக்காமல் வாங்கிடுங்கள் நண்ப நெஞ்சங்களே! வாழ்த்துக்கள் கர்ணன் சார்! சேலம் செல்வம் டிசைன் சிங்கம் கர்ணனின் அட்டை டிசைன் இது.
வாழ்த்துக்கள் இலங்கை இனியன் பொடியன் சார்!
உங்கள் டிசைன் சூப்பர்!
வாழ்த்துக்கள் ஆதி தாமிரா அவர்களே!
வாழ்த்துக்கள் நண்பர் கொமாரபாளையம் அருணாச்சலம் அவர்களே!
வாழ்த்துக்கள் நண்பர் ரமேஷ் குமார் அவர்களே!
அப்புறம் சந்திக்கிறேன் நண்பர்களே! வாழ்க!
திங்கள், 14 அக்டோபர், 2013
ஜானி சிறப்பிதழ்!!!!!!
அன்பு நெஞ்சங்களே இனியதோர் காலைப் பொழுதில் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! நிலம் வாங்குவதில் உள்ள ஆர்வம் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகளில் அலைச்சல்களிலும்; நிலம் வாங்கும் முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய காரியங்களிலும் இல்லாமல் போவதால் சிக்கித் தவிக்கும் அனுபவம் ஒரு கொடுமையான விஷயம்! சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் வணக்கம் சென்னை திரைப்படத்தில் கூட ஏஜென்ட் அட்டகாசமே பிரதானப் படுத்தப்pattullathu!
வரவுள்ள ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல் வெற்றிகரமாக அமைய தங்களது மகத்தான ஆதரவை அள்ளி வழங்குங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
சனி, 12 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...