ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தேசமலர் காமிக்ஸ்​ தொடரும் ஒரு தேடல் படலம்......

மாலை வணக்கம் நண்பர்களே! அப்புறம்? பட்டாசுகளை வாங்கிக் குவித்து விட்டீர்களா? கொடுக்கிற காசுக்கு நல்ல பட்டாசா வாங்குங்க! சலுகை விலையில் பொருள்களை அள்ளும்போது கவனமா பொருள்களை சரிபார்த்து வாங்குங்க! எதையோ தலையில் கட்டிவிடப் போறாங்க! எச்சரிக்கை!
உங்களுக்கு ஒரு வேலை வைக்கப் போறேன்! தேசமலர் காமிக்ஸ் குறித்த செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். முகநூலில் கூட செய்யலாம். எத்தனை புத்தகம்தான் அதில் வந்தது? எத்தனை ஸ்கான் முடித்து ஆவணப் படுத்தப் பட்டுள்ளது? உங்ககிட்ட எந்த வடிவிலாவது இருக்கா? அதை டிஜிட்டல் முறையில் தொகுக்கலாமா? இது குறித்து உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் வாங்கி கொடுக்க (ஹி ஹி ஹி இலவசமாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்!!!) முடியுமா? உங்களுக்கு தேசமலர் போன்று அரிய காமிக்ஸ்களை பாதுகாக்கும் எண்ணம் உள்ளதா? அதில் எவ்விதம் ஈடுபடலாம் என்று நினைக்கிறீர்கள்?
இது போன்ற விவாதங்கள் மறைமுகமாக நிறைய நடந்து வருவது நாம் அறிந்ததே! புத்தகங்களை நேசிக்கும் மாந்தர்கள் மட்டும் சற்று வெளிப்படையாகவே இது குறித்து புலம்பி வருகிறோம்! இதில் தேவையில்லாத அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் நமக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறதே என்கிற பெருமூச்சுகளும் உள்ளவர்கள் ஜாலியாக இங்கே வாங்க இல்லைனா தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முக நூல் பக்கத்துக்கு வாங்க! அங்கே உங்கள் ஆதங்கங்களை பட்டி டிங்கரிங் பார்த்துடலாம்! இப்போதைக்கு இந்த அட்டைப் படம் (ஹி ஹி ஹி தினா உங்க நற நற நத்தம் தாண்டியும் கேக்குது பாஸ்!) பார்த்து ரெலாக்ஸ் ஆகுங்க. பின்னாடி புத்தகம் உங்களை ஏதாவது ஒரு ரவுண்டில் வந்தடையும். என்ஜாய் தீபாவளி பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ்! (ஆமாப்பா அவங்களும் காமிக்ஸ் படிக்கிறாங்களே!!) எங்க ஆபிஸ்லேயே ஒரு பெண்மணி கிரீன் மனோர் படிச்சிட்டு அசந்துட்டாங்க! bye! bye! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...