காமிக்ஸ் உலகில் உலா வரும் புலிகள்...

வணக்கங்கள் வருகை தந்திருக்கும் நெஞ்சங்களே!
காமிக்ஸ் உலகில் நவம்பர் மாதம் இரண்டாயிரத்து எட்டாவது ஆண்டில் இருந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ள காமிக்ஸ் வலைப்பூ நண்பர் "காமிக்ஸ் புலி" கலீல் அவர்களது முதலைப் பட்டாளம் ஆகும். அறுபத்து மூன்று பதிவுகளைத் தாண்டி கலக்கிக்கொண்டிருக்கும் அருமையான வலைப்பூ இது!
அவரது புகைப்படம் ப்ளஸ் குறிப்பு மாதம் ஒரு வாசகர் பகுதியில் இரத்தப் படலம் எட்டாவது பாகத்தில் வெளியானது.

ஆமாம் கலீல் அவர்களே உங்களை கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. உங்க அண்ணன் வீட்டை எப்போ கொள்ளை அடிப்பது??? ஹீ ஹீ ஹீ! அண்ணன் உங்ககிட்ட ஆட்டைய போடுவாரா இல்லை நீங்க அவருகிட்ட ஆட்டையை போடுவீங்களா?? உங்க புதையலின் முகவரி கொஞ்சம் கொடுக்க முடியுமா? எங்கள் கனவு நாயகி மாடஸ்டி மேல உங்களுக்கு எதுக்கு அவ்ளோ கோபம்? ஹீ ஹீ ஹீ!!!!

நண்பர் ஜோசப் ஜெயச்சந்திரன் அவர்களது குறிப்பு :கொள்ளை அடிக்க போறவங்க கவனத்திற்கு ...முகவரியை மாத்தி விட்டாராம்!!ஹீ ஹீ ஹீ!!
நண்பர் அஹ்மத் பாஷா நம்ம தொல்லைக்கு அஞ்சி பெங்களூர் போய் செட்டில் ஆயி வருடம் பல ஆகிவிட்டதாம்!!!ஹீ ஹீ ஹீ!

அப்புறம் நம்ம ராணி காமிக்ஸில் வெளியான புலி குறித்த செய்தி இது. இல்லைன்னா புலி எங்கேய்யா என்று கடுப்பாவோர் சங்கம் துவங்க சில நண்பர்கள் ஆர்வத்துடன் இருப்பது தெரிய வந்தது. லக்கி நான் உங்களை சொல்லலை!!!
 அவ்ளோதான்!!!இதர பக்கங்கள்::

வண்ணம் நம்ம கை வண்ணம்தான்!!!ஆனா அந்த வால் பில்லிது இல்லிங்கோ!

அப்படியே அப்பீட்டு வாங்கிக்கறேன்! வர்ட்டா???


Comments

ஏன் இந்த கொலைவெறி பதிவு தோழரே! இருந்தும் பதிவு அருமை... தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள். எனது அண்ணன் காமிக்ஸ் படிப்பதோடு சரி. மற்றபடி வாங்குவது, சேர்ப்பது நான் மட்டுமே. உங்கள் தலைவி மாடஸ்டி கதைகள் ஒன்றிரண்டு மட்டுமே நன்றாக இருக்கும். மற்றவையெல்லாம் போர் கதைகள். அதுவுமில்லாமல் இரத்தப்படலம் பாகம் 8 வரும் சமயத்தில் நிறைய மாடஸ்டி கதைகளாக எடி வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு காரணம்.
John Simon C said…
ஹீ ஹீ ஹீ தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! நீண்ட நாள் அவாவை கொட்டி விட்டேன் அவ்ளோதான்!
Aravinth Sing said…
நான் வசிக்கும் நாட்டில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதென்பது அரிது அதுவும் காமிக்ஸ் என்றால் சொல்லவும் வேண்டியதில்லை அறவே கிடைக்காது
அந்த வகையில் என் காமிக்ஸ் தேடலுக்கு தீனிபோடும் உங்களுக்கு என் ஆயிரம் நன்றிகள்.

Popular posts from this blog

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!