சின்னதொரு நன்றி கூறல்...

வணக்கங்கள் பல நண்பர்களே!
தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் பின்னூட்டம் மூலம் தங்கள் அரிய கருத்துக்களை தெரிவிப்பதற்கும் நன்றிகள்! இந்த பின்னூட்டங்கள் மட்டுமே அடுத்த அடியினை எடுத்து வைப்பதற்கும் என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும் எனக்கு உதவியாக உள்ளது. பாராட்டுக்கு ஏங்காத மனம் எங்கே இருக்கிறது சொல்லுங்கள் ஹீ ஹீ ஹீ அதுவும் நண்பர் ஞானப் பிரகாசன் வெளியிட்டுள்ள கருத்து என்னை நிஜமாகவே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. நமது காமிக்ஸ்களின் பொற்காலத்தை நினைவு கூறும் எண்ணத்திலேயே இந்த ப்ளாக் துவங்கினேன் என்பதே உண்மை. லயன் காமிக்ஸ் திரும்ப எழுந்து பலமாக ஊன்றி நின்று விளையாட ஆர்வம் கொண்டு அதற்கு வலு சேர்க்கும் எண்ணத்திலேயே இந்த வலைப்பூ துவங்கினேன். இரண்டாயிரத்து இரண்டில் தன் விஸ்வரூபம் காட்டி நம்மை அசத்தி விட்டார் விஜயன். இன்னும் பலப்பல சாதனைகளைப் புரிந்து காமிக்ஸ் உலகின் தமிழ் பக்கங்களை தன் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் வளப்படுத்தி வருகிறார். மென்மேலும் தொடர இந்நேரத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுதான் முறை.
இன்னும் சீன வீரன் அவனது வம்சாவளிகள் அநீதியை எதிர்த்துப் போரிடும் தமிழ் காமிக்ஸ் எந்த பதிப்பகத்தில் வெளியானது என்று இன்றுவரை அறுதியிட்டுக் கூற முடியாத நிலையே இன்னும் நிலவி வருகிறது. நண்பர் சம்பத் போன்ற அன்பு நிறை நெஞ்சங்கள் மனது வைத்தால் இந்த முயற்சிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதில் குறையே இருக்காது. எதிர்காலம் லயன் குழுமம் கையில். இறந்த காலத்தைத் தேடிய என் பயணம் தொடர்ந்து கொண்டே இருப்பது உங்களது ஆதரவிலும் அன்பிலும் அக்கறையிலும்தான். இந்திரஜால் காமிக்ஸின் முதல் வெளியீடு துவங்கி பட்டியல் தயாரிப்பதும் எவரெஸ்டை எட்டிப் பிடிக்கும் முயற்சியே......ஆனாலும் துவங்கி இருக்கிறோம். நண்பர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து உதவ வேண்டுகோள் விடுத்து நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!
நண்பர்கள் சொக்கலிங்கம் மற்றும் செந்தில்குமார் ஆகியோரது அருமையான சிந்தனையில் உதித்த வண்ணக் கலவைகள்!


இந்திரஜால் காமிக்ஸின் முழுமையான பட்டியலை தயாரிப்பது குறித்து தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் பக்கத்திலும் இந்திரஜால் பக்கத்திலும் விவாத சக்கரத்தை சுழற்றி விட்டு விட்டேன். இனி சக்கரத்தை சுற்றும் பொறுப்பு உங்கள் கைகளில். அங்கேயும் வாருங்கள் folks! anything possible to us!


Comments

Balaji Sundar said…
// இரண்டாயிரத்து இரண்டில் தன் விஸ்வரூபம் காட்டி நம்மை அசத்தி விட்டார் விஜயன்// ?!!
40 வருடத்திற்கு முன் வந்த காமிக்ஸ்-ன் ஒரு பக்கத்தை கலரில் பார்க்கவே எவ்வளவு பிரமிப்பாக உள்ளதுஎன்றால்,சுமார் 40வருடத்திற்கு முன் கலரில் வந்த இந்திரஜால் காமிக்ஸ்-ன் விவரங்களையும்,அந்த புத்தங்களை போடோவில் பார்க்கும் போது எற்படும் மகிழ்ச்சியே தனிதான் நண்பரே!அவ்வகையான அற்புதமான வாய்ப்பை உருவாக்கி உங்கள் பெருமுயற்சிக்கு பாராட்டுக்கள் !
John Simon C said…
வந்தனங்கள் நண்பர்களே! உங்கள் ஒத்துழைப்பு எதையும் சாதிக்கும்! வாழ்க வளமுடன்!
senthilpanruti said…
நன்றிகள் ஜான் அவர்களே......
மிக்க மகிழ்ச்சி நண்பரே! மிகவும் நன்றி!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!