செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

P.T.சாமி அசத்தும் "அரக்கர் படை" ஒரு வாசு பிரசுரம் வெளியீடு!!!

வணக்கம் தோழர்களே!
                   இப்போதெல்லாம் மூத்த குடி மக்களைக் குறிவைத்து சில விஷமிகள் குற்றங்கள் இழைத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. வயதான காலத்தில் பிள்ளைகள் சிறகு முளைத்துப் பறந்து விட்டபின் கூடு காலியாகக் கிடப்பது காலத்தின் கோலம். பெற்றோர் தனி மரமான பின்னர் அவர்களுக்குத் தேவைகள் என்று வரும்போது மற்றவர்களையும் அன்னியர்களையும் அண்டியே வாழ வேண்டிய நிலை. என்னதான் ஒரு மனிதன் காசு, பணம், துட்டு, மனி, மனி என்று சேர்த்து வைத்து தன் இறுதி நாட்களுக்குத் தேவைக்கு மேலாகவே சம்பாதித்து வைத்திருந்தாலும் அனுபவிக்க வேண்டிய வயதும் கடந்து நாடி தளர்ந்து இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு காலத்தினை ஓட்ட வேண்டிய சூழல் வருகையில் பிறர் உதவி நாடும் நிலை வருகிறது. தவிர்க்கவே முடியாத இந்த காலக் கட்டத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள சில விதிமுறைகளைக் கடைபிடித்தே தீர வேண்டும். அந்த சில விதிமுறைகள் என்ன?
                  - இரவில் வீட்டைச்சுற்றி மின் விளக்குகளை எரிய விடுங்கள்.
                  - உங்கள் வசதிக்காக வேலைக்காரர்கள், ஓட்டுனர்களை நியமிக்கும்போது அவர்கள் முகவரி, தகுதி, நம்பிக்கையான நபர்தானா என்பது குறித்து கவனத்தில் கொள்ளுங்கள்.
                   -உங்கள் இல்லத்தில் பீரோ, மேசை , ஷெல்ப் போன்றவற்றின் சாவிகளை மிகவும் மறைவாக வைத்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
                   - வெளியூர் செல்லவிருக்கிறீர்களா? அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க மறக்காதீர்கள். அவர்கள் சிறப்பு கவனம் எடுத்துப் பார்த்துக் கொள்வார்கள்.
                   - உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலைய தொலை பேசி எண்கள், உறவினர்களது, பக்கத்து வீட்டார்களது அனைத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
                     - சோப்பு, சீப்பு, கண்ணாடி இதர பொருட்களின் விற்பனையாளர்கள் வந்தால் தயவு தாட்சண்யம் பாராமல் வெளியே நிறுத்தியே பேசி அனுப்பி விடுங்கள்.
                     - கண்காணிப்புக் கேமரா பொருத்தி விட்டால் அது மிகப் பெரிய பாதுகாப்பாக அமையும். குறைந்தது மூன்று மாத கால ரிக்கார்டு செய்யும் விதத்தில் இருப்பதாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
                   - சந்தேகத்துக்குரிய நபர் யாராவது நடமாடுவது கண்டால் அஞ்சாமல் ஜஸ்ட் ஒரு போன், ஒரே ஒரு போன்  காவல்துறைக்கு செய்தீர்களானால் உடனுக்குடன் வந்து சரிபார்த்து விசாரித்து அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அப்போதே ஒடுக்கி விடும் காவல் துறை. 

                 மொத்தத்தில், அந்நியர்களை உபசரித்து மகிழ்ந்தது ஒரு பொற்காலம். இப்போதோ நிகழ்வது கலிகாலம். எனவே எப்போதும் எச்சரிக்கை எனும் ஆயுதம்தனைக்  கைக் கொண்டால் அஞ்சி நடுங்கிடுமே கயவர் கூட்டம்.

நிற்க!

           வரலாறு நினைவு கூறும் அட்டகாசமான காமிக்ஸ்கள் வெளியாகிப் பட்டையைக் கிளப்புகிற இந்த அருமையான நாட்களில் அந்த காலத்தில் வெளியாகி தனிச் சிறப்பு பல கொண்டு மிகுந்த ஆதரவினையும் அமர்க்களத்தையும் வென்றெடுத்து மக்களின் காமிக்ஸ் காதலை அதிகரித்ததில் பலப்பல காமிக்ஸ் வெளியீட்டாளர்களுக்கும் பெரும் பங்குண்டு. 
                நாவல் உலக பிரம்மா. பேய்க் கதை மன்னன் திரு.பி.டி.சாமி அவர்களது வைர எழுத்துக்களைத் தாங்கி வந்த "வாசு பிரசுரத்தின்" அரியதொரு  பொக்கிஷப் பக்கங்களைக் கண்டு ருசித்து மகிழ ஆசையா? அப்போ நீங்க அடுத்த பாராவுக்குத் தாவலாம். 

            மத்தவங்க இங்கிட்டே களட்டிக்குங்க. இல்லாட்டி நான் முன்னாடியே முக நூலின் முக்கிய பக்கங்களில் எச்சரித்திருந்தது போன்று மண்டை காய்ந்து போவது சர்ர்ர்வ நிச்சயம். ராயப்பேட்டை ராக்கர்ஸ் சார்பில் அச்சேற்றம் கண்டதொரு அற்புதமான ஓவியங்கள் நிறைந்த பயங்கர திகில் காமிக்ஸ் இந்த அரக்கர் படை. மனதில் உறுதி உள்ளவர்கள் மட்டும் தொடரலாமே.....
                  





கவனிங்க மக்களே மாயாவி ஒரு அருமையான பாத்திரம் எனில் ஜானும் அருமையான பாத்திரமாக மக்கள் மனதில் நிலை கொண்டிருந்த காலத்தில் உருவான கதை இது. இரு பெரும் வீரர்களை ஒருங்கிணைத்து கதை எழுதியதற்கு பாராட்ட நினைத்தால் கொஞ்சம் அடுத்த பக்கங்களைப் படித்து விட்டு முடிவு செய்யலாம் வாங்க!




மாயாவிக்குதவிய மங்கை 

என்ன கொடுமை மாயாவிக்கு இழைக்கப்பட்டிருக்கிறது!!! இது போன்று மாயாவி ஒரு கட்டத்தில் பிராண்டாகவே இருந்தது தமிழ் நாட்டில் மாயாவியாரின் ஆதிக்கம் எந்த அளவிற்கு பரவி இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

என்ன கொடுமை சார் இது. மாயாவியாரைக் கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது??? 

நாங்க மட்டும் என்ன செய்றது? மாயாவி கதை எல்லாம் நிறுத்திட்டாங்கம்மா! இனி அந்த அளவுக்கு அட்டகாசமாக மாயாவி கதை எழுதும் ஜாம்பவான்கள் அயல் நாட்டில் உருவாகவில்லையே?? 


மிரட்சிப் பார்வை + மிரட்டல் பார்வை அசத்துறார் சிவராஜ்!






















நாங்களும்தான் மேடம் எதிர்பார்க்கவில்லை. படுபயங்கரமான விண்வெளி எதிரிகளுடன் மோதி பட்டையைக் கிளப்பும் திறமையான மாயாவியாரைக் கொன்ற மிருகத்தை நற நற நற!







அடப்பாவிகளா மாயாவி கையிலேயே விஷப்புகை இருக்குமடா! அதனை மறந்த ஆசாமிகளை என்ன பண்றது மக்களே! 

வாசு பிரசுரம் வெளியிட்ட அபூர்வமான கதைகளைத் தாங்கிய புத்தகங்களை நீங்கள் வைத்திருந்தால் அரக்கர் படைக்கு வரையப்பட்ட அட்டை, பின் அட்டை, மற்ற கதைகள், மொத்தம் எத்தனை காமிக்ஸ்கள் இவ்வகையில் வந்துள்ளன என்பது குறித்து என்னுடன் விவாதிக்கலாமே! உங்கள் தொடரும் ஆதரவுக்கும் ஆயாவுக்கும் எந்தன் நன்றிகளை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொண்டு அன்பு நண்பர் "சம்பத், திருப்பூர்" அவர்கள் இந்தப் புத்தகத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன். நன்றிகள் பல!  
   

7 கருத்துகள்:

  1. அருமையான பதிவு ..
    வாழ்த்துக்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி நண்பரே. நேரில் வாருங்கள் ஒரு நாள் நிறைய அளவளாவலாம்! சென்னை தங்களை வரவேற்கிறது!

    பதிலளிநீக்கு
  3. வருடல் (scanning) தரம் அருமை! ஆனால், இடையிடையே போட்ட கருத்துக்கள் மூலம் கதையின் ஓட்டைகளை நீங்களே உணர்த்தி விட்டீர்கள்! இன்னும் கொஞ்சம் நல்ல கதைகளாக வெளியிடுங்களேன்!

    பி.டி.சாமி அவர்களின் கதைகளை நானும் சிறு வயதில் விழுந்து விழுந்து படித்ததுண்டு. இப்பொழுது அவர் பெயர் தவிர வேறொன்றும் நினைவில் இல்லை. 'பொன்னி காமிக்'சின் இறுதிக் காலத்தில் மாயக்கதைகள் பலவற்றைப் படக்கதைகளாக அல்லாமல் வெறும் உரை வடிவில் வெளியிட்டார்கள். அவையெல்லாம் படிப்பதற்கு நன்றாக இருந்ததாக நினைவு. முடிந்தால் அவற்றை வெளியிட வேண்டுகிறேன்!

    அண்மைக்காலமாக, நிறையச் சித்திரக்கதைகளை இணையத்திலிருந்து தரவிறக்கி வருகிறேன். அவற்றுள் பெரும்பாலானவை இப்பொழுது படிக்க அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால், மேத்தா காமிக்சின் 'மர்ம மாளிகை' போன வாரம் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அந்த நிறுவனத்தினுடைய மற்ற வெளியீடுகளையும் படிக்க ஆவல். வெளியிடுவீர்களா?

    பதிலளிநீக்கு
  4. முடிந்தால் அல்ல நண்பரே கட்டாயம் முடியும். பல நண்பர்களது தேடலும் உதவிகரமாக இருந்து வருகிறது. நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கலாம். உரைவடிவில் பொன்னி காமிக்ஸ் வெளியான மந்திரவாதி கதைகளும் தங்களை சந்திப்பது நிச்சயம். அதுவரை தேடலை நிறுத்தாதீர்கள். கிடைத்தால் என் முகவரிக்கு அனுப்புங்கள் நண்பர்களுக்கும் கிடைத்திட ரசித்துப் படித்து மகிழ்வோம்.
    மேத்தா காமிக்ஸ் வண்ணத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது உறுதியாகிவிட்டதால் அதனை மட்டும் தவிர்த்து வருகிறேன். சில பக்கங்கள் ஸ்கான்களுடன் கதை சொன்னால் போதுமா என நண்பர்கள் தெரியப்படுத்தலாமே?

    பதிலளிநீக்கு
  5. //மேத்தா காமிக்ஸ் வண்ணத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது உறுதியாகிவிட்டதால் அதனை மட்டும் தவிர்த்து வருகிறேன்// - அட! உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான செய்தி! தகவலுக்கு நன்றி நண்பரே! சித்திரக்கதைகளும், சிறுவர் இலக்கியமும் மீண்டும் தழைக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பம். எனவே, சில பக்கங்களல்ல, மேத்தாவிலிருந்து ஒரு பக்கத்தைக் கூட வெளியிட வேண்டா! கதையையும் வெளியிட வேண்டா!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பதிவிற்கு நன்றி

    நானும் ஒரு காமிக்ஸ் வெறியன் ஆனாலும் எங்கள் நாட்டில் அவ்வளவாக தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பதில்லை
    ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்படும் பெரும்பாலான இத்தாலி மொழி கமிக்ஸ்களை பெற்றுக்கொள்ளமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  7. ஐயா, நான் “7 பூட்டுக்கள் பூட்டிய கதவு" by PT சாமி புத்தகத்தை தேடி கொண்டு இருக்கிறேன். அது எங்கே கிடைக்கும் என வழி காட்டுங்கள். என் தோழி ஒருவள் பல வருடங்களாக தேடி கொண்டு இருக்கிறாள். நீங்கள் உதவி செய்வீர்கள் என நம்பி வந்துளேன் .

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...