திங்கள், 11 ஆகஸ்ட், 2014

Bright Moon Comics # Pei Sollaith Thattathe!!_பிரைட் மூன் காமிக்ஸ் வழங்கும் "பேய் சொல்லைத் தட்டாதே!!!"

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அருமை சோதரர் சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களது கைவண்ணத்தில் மிளிர்ந்த க்ரீட்டிங்கினையே அன்பளிக்கிறேன்.
லயன் மேக்னம் ஸ்பெஷல் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அருமையான ஒரு தருணமிது. விற்பனையில் அன்றும் இன்றும் என்றும் ராஜாவான லயனின் பிறந்தநாள் இனிதே கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் காமிக்ஸின் சின்னஞ்சிறு மலர்கள் பல கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கிய எண்பதுகளின் காமிக்ஸ் பொற்காலத்தின் நினைவுகளைப் புதுப்பிக்க உதவிடும் ஒரு அருமையான காமிக்ஸ் ஒன்றினை நட்பால் எங்கும் பாலம் கட்டி மகிழும் அருமை நண்பர் சம்பத் அவர்களது அன்பளிப்பாகப் பெற்று வாசித்து பேருவகை அடைந்தேன். அந்த காமிக்ஸ் "பேய் சொல்லைத் தட்டாதே!!!" பிரைட் மூன் காமிக்ஸ் தமிழுக்கு ஈந்த ஒரு அரும் பரிசு இந்த கதையாகும்.

அருமையான இந்த முயற்சிக்கு ஆசிரியர் திரு எம்.உதய குமார் அவர்களுக்கு மிக்க நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். அன்னார் தற்சமயம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என விபரமறிந்தோர் என்னுடன் பகிரலாமே?
இனி கதைக்குள் செல்லுங்கள்.


















































cbr விரும்பும் அன்பர்களுக்கு...

அப்புறம்?
முகநூலில் லைக் தட்டிவிட்டு ஓடிப் போய் விட்டீர்கள் எனில் கனவில் ஆயா வருவாங்க! வசதி எப்படி? இங்கே வந்து ஒரு கமென்ட் போட்டாதானே அடுத்து அடுத்து முயற்சிகளை மேற்கொள்ள உற்சாகமாக இருக்கும். மொக்கை கதை என்று தள்ளி விடாதீர்கள். அப்புறம் பேய் வந்து கதவைத் தட்டினால் எங்கள் கம்பேனி பொறுப்பு ஏற்காது. ஹீ ஹீ ஹீ என்றும் அன்புடன் ஹீ ஹீ ஹீ 

6 கருத்துகள்:

  1. அருமை நண்பரே வணக்கம்!
    மிக நல்லபதிவு,அற்புதமான ஸ்கேன்,நேர்த்தியாகவும் அழகாகவும்
    நீங்கள் செய்திருக்கும் பதிவிற்காகவே
    கதை,ஓவியம் பற்றி கவலைபடாமல்
    படிக்க துண்டுகிறது நண்பரே !
    தொடர்ந்து அசத்துங்கள் !!!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் ரசித்தேன் ...
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. நானும் எத்தனையோ பதிவர்களைப் பார்க்கிறேன் இந்த இணைய உலகில். சிலர் கிடைக்கும் எல்லா நூல்களையும் மின்னூலாய் வெளியிட்டு அடுத்தவர் பிழைப்பில் மண்ணைப் போடுவார்கள். வேறு பலரோ நூல் பற்றி எழுதிவிட்டு மட்டும் விட்டு விடுவார்கள். ஆனால், நீங்களோ இந்த இரு மாதிரியாகவும் இல்லாமல் புது மாதிரியாய், பழைய சித்திரக்கதைகளை மட்டுமே மின்னூலாக்கி வெளியிடுகிறீர்கள். இது சிறந்த ஆவணப்படுத்தலாக அமைந்து அடுத்த தலைமுறைக்குப் பல அரிய கலைச்செல்வங்களை மீட்டுத் தரும் சேவையாய் அமைகிறது. அதே நேரம், இதை நீங்கள் ஓரிரு பதிவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து செய்து வருவது இந்த வலைப்பதிவை ஒரு கருவூலமாக மாற்றியுள்ளது. மிக மிக நன்றி! ஒவ்வொரு பதிவிலும் இந்தத் தொண்டைத் தவறாமல் மேற்கொள்ளும் உங்கள் உழைப்புக்கு மரியாதைமிகு வணக்கங்கள்! தொடர்க உங்கள் சேவை!

    பதிலளிநீக்கு
  4. வணக்கங்கள் பல நண்பர்களே! தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் பின்னூட்டம் மூலம் தங்கள் அரிய கருத்துக்களை தெரிவிப்பதற்கும் நன்றிகள்! இந்த பின்னூட்டங்கள் மட்டுமே அடுத்த அடியினை எடுத்து வைப்பதற்கும் என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும் எனக்கு உதவியாக உள்ளது. பாராட்டுக்கு ஏங்காத மனம் எங்கே இருக்கிறது சொல்லுங்கள் ஹீ ஹீ ஹீ அதுவும் நண்பர் ஞானப் பிரகாசன் வெளியிட்டுள்ள கருத்து என்னை நிஜமாகவே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. நமது காமிக்ஸ்களின் பொற்காலத்தை நினைவு கூறும் எண்ணத்திலேயே இந்த ப்ளாக் துவங்கினேன் என்பதே உண்மை. லயன் காமிக்ஸ் திரும்ப எழுந்து பலமாக ஊன்றி நின்று விளையாட ஆர்வம் கொண்டு அதற்கு வலு சேர்க்கும் எண்ணத்திலேயே இந்த வலைப்பூ துவங்கினேன். இரண்டாயிரத்து இரண்டில் தன் விஸ்வரூபம் காட்டி நம்மை அசத்தி விட்டார் விஜயன். இன்னும் பலப்பல சாதனைகளைப் புரிந்து காமிக்ஸ் உலகின் தமிழ் பக்கங்களை தன் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் வளப்படுத்தி வருகிறார். மென்மேலும் தொடர இந்நேரத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுதான் முறை. இன்னும் சீன வீரன் அவனது வம்சாவளிகள் அநீதியை எதிர்த்துப் போரிடும் தமிழ் காமிக்ஸ் எந்த பதிப்பகத்தில் வெளியானது என்று இன்றுவரை அறுதியிட்டுக் கூற முடியாத நிலையே இன்னும் நிலவி வருகிறது. நண்பர் சம்பத் போன்ற அன்பு நிறை நெஞ்சங்கள் மனது வைத்தால் இந்த முயற்சிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதில் குறையே இருக்காது. எதிர்காலம் லயன் குழுமம் கையில். இறந்த காலத்தைத் தேடிய என் பயணம் தொடர்ந்து கொண்டே இருப்பது உங்களது ஆதரவிலும் அன்பிலும் அக்கறையிலும்தான். இந்திரஜால் காமிக்ஸின் முதல் வெளியீடு துவங்கி பட்டியல் தயாரிப்பதும் எவரெஸ்டை எட்டிப் பிடிக்கும் முயற்சியே..ஆனாலும் துவங்கி இருக்கிறோம். நண்பர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து உதவ வேண்டுகோள் விடுத்து நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...