Friday, 24 October 2014

மோசே எகிப்தில் வளர்கிறார்_விவிலிய சித்திரத் தொகுதி_JW Comics_jw.org

அன்பார்ந்த காமிக்ஸ் குடும்ப வாசகர்களே!
அனைவருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள்! பட்டாசு வெடித்து மகிழ்ந்திருப்பீர்கள். காமிக்ஸ் உலகில் திகட்டத் திகட்டத் தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸ் வாசிப்பில் புன்னகை சதவீதத்தை அதிகப்படுத்திக் கொண்டும் இருப்பீர்கள் என நம்புகிறோம். நண்பர்கள் தங்களது கருத்துகளையும் அவ்வப்போது பகிரலாமே? தோழர்கள் தங்களது மகத்தான நேரத்தையும் காலத்தினையும் இதில் செலவழித்தே தங்களுக்கு விருந்து படைத்து இருக்கின்றனர் என்பதனை சில வார்த்தைகள் பகிர்ந்து நன்றாக இருந்தது அல்லது இல்லை என்பது குறித்தோ இந்த வசனம் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என்பது போன்ற கருத்துகளையோ கொடுத்து உதவலாம். 
நிற்க! 
நண்பர் மோசேயின் பால்ய காலம் காமிக்ஸ் வடிவில் சிறுவர்களுக்கு உதவும் விதத்தில் சுருக்கமாக சில சித்திரங்கள் வாயிலாக யெகோவாவின் சாட்சிகள் சபையினர் அருமையாக விளக்கி உள்ள சித்திரக்கதைதான் இந்த மோசே எகிப்தில் வளர்கிறார்.
உங்கள் பகுதி கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தால் இந்த கதையினை வாட்ஸ் அப் அல்லது வேறு வழிகளில் பகிரலாமே? அவர்தம் குழந்தைகளுக்கு சொல்லித் தர ஏதுவாக இருக்கும் அல்லவா?
இந்த வேண்டுகோளை கொஞ்சம் கவனிங்க பாஸ்! 


யோசேப்பின் வாழ்க்கை! இந்தப் பதிவினில் விவரிக்கப்பட்டுள்ளது தாங்கள் அறிவீர்கள்! அவ்வாறு வேற்று நாட்டில் தனது கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் தாலந்தால் மன்னரது அடுத்த இடத்துக்கு உயர்த்தப்பட்ட யோசேப்பின் காலத்தில் யூதர்கள் பெரு மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதன் பின்னர் யோசேப்பினை அறியாத ஒரு மன்னன் எகிப்தினை ஆள நேரிட்டபோது அவனுடைய கண்கள் தங்கள் இனத்தாரை விட யூதர்கள் சமுதாயம் மிக வலிமை படைத்ததாக மலர்வதைக் கண்டு அஞ்சினான். அதனால் யூதர்களின் ஆண் குழந்தைகளை கொன்றுவிடவும் யூதர்கள் அனைவரையும் அடிமையாக்கிவிடவும் உத்தரவு பிறப்பித்தான். அந்த துயரமான சூழலில் மோசே பிறக்கிறார். அவரை அவரது தாயாரும், தமக்கையாரும் நைல் நதியருகே ஒரு பேழையில் வைத்து (மகாபாரத கர்ணன் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) கோரை புற்களிடையே வைத்து விட மன்னனின் செல்ல மகள் அவ்விடம் குளிப்பதற்கு வர அதன் பின் நடப்பதே கதை. 

"மிரியாமின் பொறுமைக்குக் கிடைத்த பலன் அக்குழந்தை இளவரசியாரால் கவனிக்கப்படுகிறது!"

மோசே எகிப்தியருடன் ஒன்றாக வளர்ந்தாலும் பிறந்த வம்சத்தை மறக்கவில்லை! அவர்களது கஷ்ட நஷ்டங்களை கவனித்து வேதனை அடைகிறான்!
வேறு நாட்டிற்கு அடைக்கலம் நாடி ஓடுகிறான். அங்கே தனது மாமன் மகள் சிப்போராவை மணக்கிறான்.
அதன் பின்?.....காத்திருங்கள்! விரைவில் "இறைவன் மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார்" என்கிற போஸ்டில் சந்திப்போம்! அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது! 
(மழை இந்த முறை ஓவர்ங்க! மழை நீர் திட்டம் உங்கள் வீட்டில் இன்னும் உயிரோடு இருக்கிறதா??? கொஞ்சம் சரி பாருங்களேன்? அப்போதான் பூமித்தாயின் தாகம் உண்மையாகத் தீரும்! ப்ளீஸ்!) 

4 comments:

 1. சூப்பர் ஜானி ஜி.

  அட்டகாஷ்!

  ReplyDelete
 2. @ joc johny

  உங்கள் கதை சொல்லும் பங்கே அவ்வளவு சுவையாகவும்,அழகாக உள்ளதென்றால் அதை காமிக்ஸ்ஆக படிக்கும்போது..எப்படி இருக்கும் என நினைத்தாலே அட்டகாசமாக உள்ளது நண்பரே...முழு கதை காமிக்ஸ் ஆக உள்ளதா...

  ReplyDelete
 3. சின்ன சின்ன தொகுப்பாக ஐந்து கதைகள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன ஜி! அனைத்தும் அடுத்தடுத்து பகிரப்படும்.

  ReplyDelete
 4. நன்றி விஸ்வா ஜி!

  ReplyDelete

IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்_Suresh Chand

for pdf hit link below: IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்