ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஏசாவும், யாக்கோபும்_விவிலிய சித்திரக் கதைகள்_எஹோவாவின் சாட்சிகள் சபையோர்..

இனிய ஞாயிறு வணக்கங்கள்! அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக! 
இன்று யாக்கோபு, ஏசா வரலாறு யெகோவாவின் சாட்சிகள் சபையாரின் அன்புடன்  இங்கே பரிமாறப்படுகிறது! வாசியுங்கள்! உங்கள் சகோதர சகோதரிகளை அன்புடன் நடத்துங்கள்! இறைவனின் செய்தி அதுதான்!


மீண்டும் அதே அன்புடன் உங்கள் இனிய சகோதரன் - ஜானி!

Lion-Muthu Comics: இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்...!

Lion-Muthu Comics: இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்...!: நண்பர்களே, வணக்கம். டிசம்பரில் மொத்தம் 5 வெளியீடுகள் எனும் போது பணிகள் இரயில்வண்டியின் பெட்டிகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாய்  அணிவகுத்...

சனி, 29 நவம்பர், 2014

பொது அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்.....

வணக்கங்கள் பொது அறிவுத் தேடலில் பலசாதனை சிகரங்களை எட்டிப் பிடித்து இன்னும் இன்னும் இன்னும் என வெற்றிவாகைகளை சூடிடத் துடிக்கும் அன்பு உள்ளங்களே! 
 அன்றொரு நாள் இராமரின் பாலம் அமைத்திடும் அருமையான முயற்சியில் உதவிட சின்னஞ்சிறு அணில் ஒன்றும் தனது பங்களிப்பை ஈந்தது. அது மாதிரியான எனது பங்களிப்பையும் தாங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த வெற்றிநடை போடவும் தங்கள் நண்பர்களுக்கு இந்த ஒரு வரி பதில்களை பகிரவும் அன்புடன் அழைக்கிறேன். அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி குறித்ததான முக நூல் பக்கங்களிலும் இவற்றைப் பகிர்கிறேன்! தாங்களும் பகிர்ந்து சக தோழர்கள் வாசிக்க உதவினால் மகிழ்ச்சியே! 
இனி....  
வ.எண்.
கேள்வி
பதில்
1
எலெக்ட்ரானை கண்டறிந்தவர் யார்?
ஜெ.ஜெ.தாம்சன்
2
செல்வ வரி மற்றும் பண்ணை வரியின் பெயர்?
நேர்முக வரி
3
துராண்ட் கோப்பை தொடர்புடைய விளையாட்டு?
கால் பந்து
4
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்?
ராஜ முந்திரி
5
தென் இந்தியாவின் உயர்ந்த மலை சிகரம் அமைந்துள்ள மாநிலம்?
கேரளா
6
முதன்முறையாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரிம வேதிப்பொருள் எது?
யூரியா
7
குறைவான கல்வியறிவு பெற்றுள்ள இந்திய மாநிலம்?
பீகார்
8
கடிகார ஊசல் செய்ய பயன்படும் உலோகம் எது?
இன்வார்
9
கடலில் ஆழத்தை அளவிட உதவும் கருவி எது?
பாத்தோ மீட்டர்
10
போரும் அமைதியும் என்கிற நூலை எழுதியவர்?
லியோ டால்ஸ்டாய்
11
டைபாய்டு நோயை பரப்பும் கிருமி
சல்மோனெல்லா டி பி
12
சுற்றுச்சூழல் குறித்த படிப்பின் பெயர்
ஈக்காலஜி
13
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்
திருவனந்தபுரம்
14
டெல்லி செங்கோட்டையைக் கட்டியவர்
ஷாஜகான்
15
டிரைசெம் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டது
1979
16
பந்திப்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம்
மைசூர்
17
கக்ரபாரா பல்நோக்குஅணை அமைந்துள்ள மாநிலம்
குஜராத்
18
புத்த சங்கம் – முதலாவது நடந்தது?
ராஜ கிரகம்
19
புத்த சங்கம் – இரண்டாவது நடந்தது?
வைசாலி
20
புத்த சங்கம் – மூன்றாவது நடந்தது?
பாடலிபுத்திரம்
21
புத்த சங்கம் – நான்காவது நடந்தது?
காஷ்மீர்
22
லட்வியா நாட்டின் தலைநகரம்
ரிகா
23
இந்தியாவில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1951
24
சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்த சரசை நிர்மாணித்தவர்?
குரு இராமதாஸ்
25
காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை துவக்கிய ஆண்டு?
1930
26
உலகம் தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்தியா விழித்தது “ என்று கூறியவர்?
ஜவஹர்லால் நேரு
27
இராம கிருஷ்ணா மிஷன் இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
சுவாமி விவேகானந்தர்
28
அடிமை வம்சத்தினை தோற்றுவித்த மன்னர்?
இல்டுட்மிஷ்
29
தனி நபர் சத்தியாக்கிரகம் காங்கிரஸ்  துவக்கிய ஆண்டு?
1940
30
முதல் தனி நபர் சத்தியாகிரகி யார்?
வினோபா பாவே
31
பேரரசர் அசோகருக்குப் பின் ஆட்சி புரிந்த மன்னர்?
குணாளா
32
பாணபட்டர் எழுதிய நூல்
காதம்பரி
33
வராகமித்திரர் எழுதிய நூல்
பஞ்ச சித்தாந்திகா
34
காளிதாசர் எழுதிய நூல்
ருது சம்ஹாரம்
35
பிற்கால சோழ வம்சத்தை நிறுவிய முதல் மன்னர்
விஜயாலய சோழன்
36
சீனப்பயணி பாஹியான் எம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்?
இரண்டாம் சந்திர குப்தர்
37
ஆசாத் ஹிந்து பவுஸ் எனும் அமைப்பை நிறுவியவர்
சுபாஷ் சந்திர போஸ்
38
ஆங்கிலேயருடன் சீரங்கப்பட்டின உடன்படிக்கை செய்துகொண்ட மன்னர்
திப்பு சுல்தான்
39
இந்தியாவில் முதல் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிமுகம் செய்த ஆங்கில ஆட்சியாளர்
ரிப்பன் பிரபு
40
தமிழ் நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை என மதிக்கப்படுபவர் யார்?
வ.உ.சி.
41
கிலாபத் இயக்கம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
1920
42
அபிநவபாரத் எனும் புரட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர்
சவர்க்கார்
43
இந்திய சிப்பாய் கலகம் நடைபெற்றபோது பீகார் பகுதியில் அதற்குத் தலைமை ஏற்றவர்
கன்வர்சிங்
44
அக்பரின் ஆட்சிப் பொறுப்பு துவங்கியது
1556
45
பைராம்கான் இறத்தல்
1560
46
ஜிசியா வரி நீக்கப்பட்டது
1564
47
அக்பரின் குஜராத் வெற்றி
1572
48
காந்தியடிகளால் முதன்முதலில் சத்தியாக்கிரகம் துவக்கப்பட்ட இடம்
சம்பரான்
49
திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர்
பெரியார்
50
சுதந்திர கட்சியை நிறுவியவர்
இராஜாஜி
51
வகுப்புவாத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர்
மக் டொனால்ட்
52
ஜாலியன் வாலாபாக் படுகொலை –ஆண்டு?
1919
53
பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தேர்வான முதல் இந்தியர்  
தாதாபாய் நௌரோஜி
54
இந்தியாவில் முதன்முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் யாவர்?
போர்த்துகீசியர்கள்
55
தமிழக வரலாற்றின் இருண்ட காலம்
களப்பிரர் காலம்
56
சோழப் பேரரசின் முக்கியமான இறக்குமதிப் பொருட்கள்
குதிரைகள்
57
சிவாஜியின் அமைச்சரவையில் இருந்த மன்னருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் பெயர்?
அஷ்டப்பிரதான்
58
பிரபஞ்ச மித்திரன் என்னும் வார இதழை நடத்தியவர்
வ.உ.சி.
59
ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று முழங்கியவர்?
லால் பகதூர் சாஸ்திரி
60
இந்திய திட்டக் குழுவின் தலைவர் யார்?
பிரதமர்
61
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறுகின்ற வயது?
65
62
பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற ஆண்டு
1789
63
இந்திய உதவி ஜனாதிபதியின் பதவிக் காலம்
ஐந்து ஆண்டுகள்
64
இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1950
65
தற்போது இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமைகள்
ஆறு
66
மாநிலப்பட்டியலில் உள்ள அதிகார மூலங்களின் எண்ணிக்கை
66
67
இந்திய அரசியலமைப்பின் சட்டத் திருத்தங்களில் மிகவும் நீளமானது
42வது சட்டத்திருத்தம்
68
பாராளுமன்ற அமைப்பில் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது?
காபினெட்
69
ஹேபியஸ் கார்ப்பஸ் என்றால் என்ன?
ஆட்கொணரும் ஆணை
70
ரிட் ஆப் மாண்டமஸ் ?
கீழ் நீதிமன்றத்தை செயல்படக் கோருதல்
71
ஒருவர் மக்களவை உறுப்பினராக தேர்தலில் நிற்பதற்கு எத்தனை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்?
25
72
அரசியலமைப்பின் அடிப்படையில் கண்டனத் தீர்மானம் யார்மீது கொண்டு வர முடியாது?
துணைக் குடியரசுத் தலைவர்
73
நிதி மசோதா மாநிலங்களவையில் எத்தனை தினங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்படவேண்டும்?
14 நாட்கள்
74
12வது நிதிக் கமிஷனின் தலைவர் யார்?
சி.ரங்கராஜன்
75
இந்திய அரசியல் நிர்ணய சபைக்குத் தலைமை தாங்கியவர்
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
76
இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் அமைந்திருக்கும் பகுதி
பகுதி IVIVIV
77
பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்கு வகை செய்த சட்டத்திருத்தம்
73 வது திருத்தம்
78
இந்திய அரசின் அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது?
இரஷ்யா
79
இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது?
அயர்லாந்து
80
பஞ்சசீலக் கொள்கையை வகுத்தவர்
ஜவஹர்லால் நேரு
81
காமன் வெல்த் அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் யார்?
டான் மேக்கென்னன்
82
எரித்ரோமைசின் குணப்படுத்தும் நோய்?
காச நோய்
83
சிங்கங்களின் சரணாலயம்
கிர் காடுகள்
84
மலேரியா நோய்க்கிருமியை மனித உடலுள் செலுத்தும் கொசு வகை
பெண் அனபோலிஸ் கொசு வகை
85
ஒரு கிராம் கார்போஹைட்ரேட் உடலுக்கு தரும் சக்தி எவ்வளவு?
நான்கு கிலோ கலோரி
86
என்டோக்ரைன் சுரப்பிகள் சுரப்பது?
ஹார்மோன்கள்
87
செல்லின் ஆற்றல் மையம்
மைட்டோ காண்டிரியா
88
மனித உடலில் உள்ள தசைகள்
457
89
மின்சாரத்தால் உண்டாகும் தீயை அணைக்க உதவும் பொருள்
கார்பன் டெட்ரா க்ளோரைட்
90
ஒளிச் சேர்க்கையின்போது மிக முக்கியமாகத் தேவைப்படுவது
க்ளோரோப்லாஸ்ட்
91
ந்யூட்டன் வளையச் சோதனையில் உண்டாகும் வளையம்
ஒரு மைய வட்ட வடிவமுடையது
92
ஒரு கால்வனா மீட்டர் அம்மீட்டராக செயல்பட கால்வனா மீட்டருடன் எதை இணைக்கவேண்டும்?
சிறிய மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்.
93
வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாத ஒன்று எது?
ஒலி
94
ஐசோடோப்புகள் என்பவை
ஒரே அணு என்னும் வேறுபட்ட அணு எடையும் உள்ளவை
95
இயங்கிக்கொண்டிருக்கும் கோள்களுக்கு இடையேயான கவர்ச்சி விசை பற்றிக் கூறிய அறிஞர்
ந்யூட்டன்
96
உயர்த்தப்பட்ட மின் மாற்றியில் இருப்பது
துணைச் சுற்றின் எண்ணிக்கை முதன்மைச் சுற்றை விட அதிகம்.
97
டெட்ராசீன் என்பது என்ன?
வெடி மருந்து
98
ஒரு கரைசலின் pph மதிப்பு14 ஆக இருந்தால் அதன் தன்மை
வீரியமிக்க காரத்தன்மை
99
வைட்டமின் சி யின் வேதிப்பெயர்
அஸ்கார்பிக் அமிலம்
100
பீனாலுக்கு வேறு பெயர் என்ன?
கார்பாலிக் அமிலம்

 திருத்தங்கள் செய்திட ஏதேனும் தென்பட்டால் சுட்டிக் காட்டினால் மகிழ்வேன்! என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...