கல்கியின் அபூர்வ அட்டைபடம்..

அன்பு நண்பர்களே வணக்கம்!
வலைதள எல்லைகளைத் தாண்டி நூல் வாசிப்புக்கு ரசிகராக இருப்பது என்பது ஒரு சவால் எனில் அதிலும் அபூர்வமான புத்தகங்களைத் தேடித்தேடி மலர் நாடி வண்டு திரிதல் போன்று ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் சிலர் பம்பரமாக சுற்றி வருகின்றனர். இன்னும் சிலர் தாங்கள் விரும்பிய காமிக்ஸ் கிடைக்காத நிலையில் தளங்களில் கிடைத்திடும் காமிக்ஸ்களை பிரிண்ட் செய்து கையில் வைத்துப் படிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இரு வேறுபட்ட ரசனைகளும் வாசிப்பு என்பதில் மையம் கொள்வதே இறுதியில் நடந்திடும் அற்புதம்.
                    வாசகர்களின் வரம் புத்தகங்கள். புத்தகம் என்றதுமே அவற்றின் வீர்யம், வீச்சு என்பது மிக மிக ஆழமானதாகவும் அழகானதாகவும் அமைந்திடுவதும் அவற்றின் ஒவ்வொரு பரிமாணமும் மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவும், வாழும் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியும். வாழ்வுக்கு வழிகாட்டும் வகையிலும் அமைந்திடுவது என்பது அருமையான விஷயம்.
                         அதிலும் சித்திரக் கதைகளுக்கு என அட்டகாசமான ரசிகர் படை தனது சூறாவளி தேடல்களுடன், காடு, மலை, வெயில், மழை என தட்ப வெப்பத்தினையும், தொலைவையும் துச்சமென மதித்து தங்களின் அபிமானத்துக்குரிய நாயகர்களின் கதைகளை எப்படியேனும் அடைந்தே தீர்வது என்கிற தீர்க்கமான முடிவோடு நித்தம் நித்தம் புதுப்புது அனுபவங்களுடனும் தேடலில் கிடைக்கும் சின்னச்சின்ன வெற்றியையும் உடனே உலகுக்கு அறிவித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருவது தமிழக மண்ணின் அதிசயம்.
                            இதோ ஒரு நண்பர் வலைதள எல்லையைத் தாண்டி வெளியே உலா வருபவர். சித்திரக்கதை கிடைத்திடும் எனில் அதனை அடைந்திட எத்தனை தடைகள் இருப்பினும் வில்லாய் வளைந்து அம்பாய்ப் பாய்ந்து கைப்பற்றி மகிழ்வதில் வல்லவர் திரு. பிரவீன்குமார் அவர்கள்.
(கோப்புப் படம்)

நண்பரது ஆழமான தேடலில் சிக்கிய இந்த அபூர்வமான இதழின் அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு....

சரி சித்திரக்கதை?
கௌசிகன் கதை எழுதி, ரமணி சித்திரம் தீட்டி அவள் எங்கே? என்கிற தலைப்பில் சுமார் முப்பது வாரங்கள் வெளியான தொடர் சித்திரக் கதை அடங்கிய கோப்பினைக் கண்டுபிடித்துள்ளார் நண்பர்களே. அந்தக் கதை பின்னர் இங்கே வெளியிடுகிறேன்! மீண்டும் சந்திப்போம்! வருகைக்கும் பின்னூட்டம் மூலம் தொடர்பு கொள்வதற்கும் நன்றிகள்! 
என்றும் அன்புடன் ஜானி!

Comments

mayavi. siva said…
@ jsc johny

உங்கள் தமிழ் நடையும் சரி,கல்கி அட்டைபடமும் சரி கைவண்ணம் ஜொலிக்கிறது நண்பரே...! தொடருங்கள்..!!
John Simon C said…
மிக்க நன்றி நண்பரே! உங்கள் போன்ற உற்சாகத்தை விதைத்திடும் விவசாயிகள் இருந்திடும்வரையில் என் அன்பின் அறுவடையும் மிக அதிகமாகவே இருந்திடும் என்பது உறுதி! வாழ்க!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!