செவ்வாய், 11 நவம்பர், 2014

க்வாக் சுந்தரம்_குமுதம் சித்திரக் கதை.....

வணக்கங்கள் அன்புக்கும் பெரு மரியாதைக்கும் உரிய அன்பு நெஞ்சங்களே! அரியவகை சித்திரக்கதைகளை அவ்வப்போது இந்த வலைப்பூவில் மலரச் செய்து காமிக்ஸ் எனும் மணம் எப்போதும் கமழ்கிற பணியினை செய்து அதில் பேருவகை அடைவதையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன் யான். அந்த வகையில் இந்த முறை வெளியாவது குமுதம் நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பாக வெளியாகி, வெளியான இடங்களில் எல்லாம் இரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இன்றும் சிலாகித்துப் பேசி மகிழும் வகையில் பாத்திரங்களை செதுக்கி மிக அருமையாக சித்திர விருந்து படைத்துள்ள கதைதான் க்வாக் சுந்தரம். கதையினை மிக மிக மிக பாதுகாப்பான தங்களது பொக்கிஷ சாலையில் இருந்து நமக்காக கொடுத்து உதவிய திருவாளர்கள் அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மிகுந்த நன்றிகளை நமது வாசகர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். குமுதம் இதழுக்கு எந்தன் வந்தனங்கள். சுமார் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக சித்திரக்கதைக்கு ஒதுக்கித் தந்து காமிக்ஸ் உலகினுக்கு பெரும் ஆதரவினை நல்கி மாலைமதியிலும் அருமையான பல கதைகளை அள்ளித் தந்து இன்றும் என்றும் தனது அன்பினையும் ஆதரவினையும் காமிக்ஸ் உலகுக்கு நல்கி வரும் குமுதத்தின் சேவைக்கு ஒரு மெகா நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிற்க. இந்த சித்திரக்கதை குமுதத்தில் 06.02.1969  முதல் 14.08.1969 வரை வெளியாகி உள்ளது. மொத்தம் முப்பது அத்தியாயங்கள். ஒன்பது, பத்து, பதினொன்று, பத்தொன்பது, இருபத்து நான்கு ஆகிய அத்தியாயங்கள் மட்டும் இன்னும் சிக்காமல் உள்ளது. நண்பர்கள் சிலரிடம் இது குறித்து வேண்டுகோள் வைத்துள்ளேன். உங்களிடம் இருந்தாலும் பகிர்ந்திடலாமே?
இனி கதை....





















தொடருக்கு இடையே ஒரு துணுக்கு....



விளம்பர இடைவேளை......





























பின் குறிப்பு:
இந்தத் தொடரை உடனடியாக வெளியிட்டே தீர வேண்டுமென்று அன்புக்கட்டளையிட்டு சாதித்துக் காட்டிய அன்பு சகோதரர் அலெக்ஸ்சாண்டர் அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்! ஹீ ஹீ ஹீ மிரட்டுறார்யா! 
சிபிஆர் அல்லது பிடிஎப் லிங்க் நண்பர் வினோஜ் அவர்கள் விரைவில் இங்கு தருவார்! (மாட்டி விட்டுட்டோமையா ஹீ ஹீ ஹீ ) 
நண்பர் ரஞ்சித் முந்தி விட்டார்__நன்றி நண்பரே!
க்வாக் pdf பிரியாணி இதோ உங்களுக்காக....

1 கருத்து:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...