Friday, 28 November 2014

அயல் கிரகம் அல்டெபாரன்- ஒரு விளக்கப் பார்வை!

வணக்கம் அன்பு நண்பர்களே!
இன்டெர் ஸ்டெல்லார் குறித்து விளக்கமளிக்க கிறிஸ்டோபர் நோலன் ஒரு காமிக்ஸ் கொண்டு வர முயலும் இவ்வேளையில், அயல் கிரகம் அல்டெபாரன் என்கிற மனிதர்கள் வசிப்பதற்கேற்ற ஒரு கிரகத்தில் ஒளியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் விண்கலத்தில் சென்றடையும் மனிதர்கள் பின்னர் பூமியோடு தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் என்ன மாதிரியான சூழலில் வசிக்கிறார்கள் என்கிற கற்பனைக் காவியம் இந்த வரிசையில் வெளியிடப்பட்டு பட்டையைக் கிளப்பிய aldebaran and betelguse என்கிற வரிசையில் வெளியிடப்பட்டுள்ள சினி புக்கின் அற்புதமான சித்திரக்கதை இது. ஒரு தொடக்கமாக விண்வெளியில் அந்த கிரகங்கள் நிலை கொண்டிருக்கும் இடத்தினைக் குறிக்கும் வரைபடம் கொடுக்கிறேன். எடுத்துக் கொண்டு புதையலைத் தேடிக் கிளம்புங்கள்! ஆனால் அதற்கு எங்கள் கேக்றான் மேய்க்றான் கம்பெனி பொறுப்பு ஏற்காது என்கிற உத்தரவாதத்துடன் விடை பெறுகிறேன்!
நண்பர் ஞானப்பிரகாசர் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே இன்னும் சில விவரங்கள் பதிகிறேன். மனிதர்கள் வசிக்கத் தகுந்த வேறு கிரகங்களை நமது விஞ்ஞானிகள் இன்றுவரை  தேடிக்கொண்டே இருக்கின்றனர். இந்த பூமி ஒரு வேளை அழிந்து விடும் சூழல் வந்தால் அதற்கு மாற்று வழியாக இதே போன்ற தட்பவெப்ப சூழல் கொண்ட கிரகங்கள் வேறு எந்த அண்டத்திலாவது இருந்திடாதா என்கிற தேடல் மனித குலம் இன்றுவரை சிந்தித்துக் கொண்டே இருக்கிற ஒரு மிகப் பெரிய விஷயமாகும். 
கதாசிரியர் அருமையாக வேற்று உலகங்களை அமைத்துள்ளார். 
அதன்படி ஆளற்ற விண்கலம் கலீலியோ கலீலி ஜனவரி 2047 ல் கிரகம் அல்டெபாரனைக் கண்டறிகிறது. அது டாரஸ் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ளது. நாமிருப்பது பால்வெளி நட்சத்திர மண்டலம் என்பது தெரிந்ததுதானே?
அறுபத்து நான்கு ஒளி ஆண்டுகள் தாண்டி அந்த கிரகம் அமைந்துள்ளது.
ஒளியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் விண்கலம் சுமார் பத்து ஆண்டுகள் முன்னர் கண்டறியப்பட்டதாக கதை விரிகிறது.
செப்டம்பர் 2055 ல் மனிதர்களுடன் ஒரு விண்கலம் அங்கு சென்றடைந்தவுடன் அல்டெபாரன் என அந்த கிரகம் பெயரிடப்படுகிறது. பூமிக்கு சமமான தட்பவெப்ப சூழ்நிலை, செடி, கொடிகள், நிலவமைப்பு என அனைத்துமே அருமையாகப் பொருந்திப் போகிறது.
2061ல் ஐக்கிய நாடுகள் சபை அந்த கிரகத்தில் மக்களைக் குடியேற வைக்க முடிவு செய்கிறது. அதன்படி குடிமக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  

2078ல் ஜோஹன்னஸ் கெப்ளர் விண்கலம் ஆயிரத்து ஐநூறு பயணிகளுடன் தனது பயணத்தை துவக்குகிறது. சூரிய மண்டலத்தைத் தாண்டி 11 th february 2079ல் அந்த விண்கலம் அல்டெபாரன் கிரகத்தினை அடைகிறது.
அது இறங்கும் இடத்தினை அனடோலி லேம்ரிக் என்கிற குடியேற்றங்களின் பிரசிடண்ட் நினைவாக "அனடோலியா"  எனப் பெயரிடுகின்றனர். அதுவே அவர்களது தலைநகராகிறது.   
அதே வருட மார்ச்  மாதம் மீண்டும் புவிக்குத் திரும்பும் கெப்ளர் விண்கலம் அதில் பயணமான பதினான்கு குழு உறுப்பினர்களுடன் காணாமல் போகிறது.

பின்னர் 2084 ல் புவியில் இருந்து அனுப்பப்படும் இரண்டாயிரத்து ஐநூறு மனிதர்கள் அடங்கிய டைக்கோ ப்ராஹே விண்கலம் செல்லும் வழியில் மாயமாகிறது. அதன் காரணமாக இயற்பியலாளர்கள் கருதுவது "benivides transfer" இது ஒரு வகையான சூழல். இது ஒளிவேகத்தினை உடைக்கும் வல்லமை உடையது என்று கருத்துக்கள் விளைகின்றன. எனவே இந்த நிலைமைக்கான தீர்வு கிடைக்கும்வரை  அல்டெபாரன் கிரகத்துக்கு செல்லும் அனைத்து விண்கலங்களும் ரத்து செய்யப்படுகின்றன.  

அல்டேபாரனில் புவியோடு கொண்டிருந்த தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டு விடுகிறது. அக்கிரகம் ஒரு ஆதரவுமின்றி தனித்து விடப்படுகிறது. இது நடந்து பத்து வருடங்கள் ஆகியும் விஞ்ஞானிகளால் விண்கலங்கள் மாயமாவதைக் குறித்த ஆராய்ச்சியில் எந்த ஒரு தீர்வையும் எட்ட முடியவில்லை.
நூறு வருடங்கள் கடந்த நிலையில் புதிதாக எந்த ஒரு விண்கலமும் அல் டிபாரன் மண்ணில் தரையிறங்கவில்லை. புவியுடனான தொடர்பும் மீண்டும் நிறுவப்படவில்லை.
கதை இந்த சூழலின் பின்னணியில் விவரிக்கப்படுகிறது. 
நாயகி கிம் முதலில் இந்த கிரகத்தில் ட்ரெக்கிங் மேற்கொண்டு பின்னர் பெட்டல்ஜியுஸ் கிரகத்திலும் ட்ரெக்கிங் மேற்கொள்கிறாள். அவள் சந்திக்கும் விசித்திர மிருகங்களும், வித்தியாசமான  சூழல்களும், சந்திக்கும் அபாயங்களும் இதற்கெல்லாம் காரணமான மனிதகுல கிறுக்குத்தனங்களும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
கதை எழுதிய எழுத்தாளர் திரு. லியோ அவர்கள் 1944 ல் பிரேசிலில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே எஞ்சினியரிங் பட்டமும் 1968ல் பெற்றார்.
சர்வாதிகாரத்துக்கு எதிராக இடதுசாரி அமைப்பில் செயல்பட்டவர் 
1971ல் நாட்டை விட்டுத் தப்பினார்.
 1974ல் மீண்டும் நாடு திரும்பியவர் ஓவியக் கலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சிறிது வருடங்கள் சென்றபின்னர் பிரான்ஸ் சென்று அங்கே ஐரோப்பிய கிராபிக் நாவல் துவக்கி பெயர்  பெற்றார்.
 1993 மனிதனால் உருவாக்கப்பட்ட மிக வித்தியாசமான கதை வரிசையான அல்டேபாரன் உலகங்களைப் படைத்தார். அவை மிகப் புகழ் பெற்ற எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ள சித்திரக்கதைகளின் வரிசையாகும். சினி புக் தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்த வரிசையை வாங்கி வாசிக்கத் தவறாதீர்கள். இணையத்திலும் ருசிக்க ஆங்காங்கே கொட்டிக் கிடக்கிறது. ருசியுங்கள்! 


என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!
5 comments:

 1. ஒன்றும் புரியவில்லையே! என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பா? இந்தப் படத்தை வைத்துக்கொண்டு அந்தக் கதைநூலை நாங்களே இணையத்தில் தேடி எடுத்துக்கொள்ள வேண்டுமா?

  ReplyDelete
 2. அதே அதே அதே நண்பரே இந்த aldebaran அகில உலக காமிக்ஸ் வானில் மிகவும் சிறப்பான ஒரு இடம் பிடித்த கதை வரிசை! ஆங்கிலத்தில் நிறைய இடங்களில் கிடைக்கிறது. இதில் கதாசிரியர் மிக அருமையாக வெற்றுக் கிரக அனுபவங்களை செதுக்கி இருக்கிறார். அதில் இருந்து பால்வெளி வீதியில் வசிக்கும் நாம் நோக்கினால் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட கதை நடக்கும் கிரகங்கள் அமைவிடத்தினைக் காட்டும் மேப் மட்டும் பகிர்ந்து உள்ளேன்!

  ReplyDelete
 3. தகவல்களுக்கு நன்றி! ஆனால், ஆங்கிலத்தில் படிக்கப் பொறுமை இல்லை. மேலும், தமிழில் படிக்கவே ஏராளமாக இருக்கும்பொழுது ஆங்கிலக் கதைகளைப் படிக்க ஏது நேரம்?

  ReplyDelete
 4. அருமை ஜி ,அவ்வப் போது தலயை பிய்தாலும் அருமையான சை-பிக் தொடர் இது.தமிழில் வரின் அருமையாக இருக்கும்.ஆனால் அந்த ரசனை எமக்கு வரும் என விஜயன் சாருக்கு தோன்றும் போது நாம் நிஜமாகவே ஆல்டெபாரானில் குடியேறி இருக்க வாய்ப்பு உண்டு.

  ReplyDelete
 5. அருமையாகக் கூறி உள்ளீர்கள்! ஆமாம் நாம இப்போ மட்டும் நாங்கள் எங்கிருக்கிருந்து தொடர்பு கொள்கிறோம் என்று நினைக்கிறீர்கள்?

  ReplyDelete

IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்_Suresh Chand

for pdf hit link below: IJC ஓட்டல் ஹாட் ஸ்பாட்