செவ்வாய், 30 ஜூன், 2015
திங்கள், 29 ஜூன், 2015
சனி, 27 ஜூன், 2015
சனி, 20 ஜூன், 2015
வெள்ளி, 19 ஜூன், 2015
புதன், 17 ஜூன், 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 23_A Rare Srilankan Tamil Comics!
வண்ணக்கனவுகள் என்றும் நினைவாகட்டும், நல்லவை நடந்தேறுக. வாழ்வு வளம்பெறுக! வணக்கங்கள் அன்பு நிறை நெஞ்சங்களே! வாழ்ந்தது போதுமா தனது ஜெட் வேகப் பயணத்தைத் தொடர்கிறது.
அப்புறம் ஒரு பழைய சித்திரக்கதையைத் தேடிப்பிடித்து நண்பர் திரு. டெக்ஸ் சம்பத் அவர்கள் கொடுத்து உதவி இருந்தார். அதன் ஒரு பக்கத்தை கடும் வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி வேறு தினுசில் பரிமாரியுள்ளோம். பார்த்து அதில் மாற்றங்களைக் கண்டு மகிழுங்கள். அப்படியே ஒரு பின்னூட்டம் மூலமும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால். செய்த பணிக்கு தாங்கள் பெறுகிற மகிழ்ச்சி என்னும் சன்மானமே எங்களுக்கான இறைவனின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்கிற எண்ணம்தான் இங்கு என்னையும் உலவ செய்கிறது.
சென்ற கதையில் திருத்தங்களைத் திருப்பிப் படித்தீர்களா? அவ்வப்போது உங்கள் கருத்துக்கள் எங்களை வந்தடைவதால் வரும் நன்மைகளில் அதுவும் ஒன்று. நண்பர் ஞானப் பிரகாசருக்கு மீண்டும் நன்றிகள்.
அதன் ஒரு பேனலை வண்ணத்தில் அலங்கரித்துள்ள திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் நன்றிகள்.
பை!
சனி, 13 ஜூன், 2015
ரோமாபுரி வீரர்கள் உலகப் போரில் கலந்தால்.....II
வணக்கங்கள் காமிக்ஸ் ரசிக நண்பர்களே!
இரண்டாம் உலக யுத்தம் நடக்கும்போது இடையே கால வெளியைக் கடந்து கிளாடியேட்டர்கள் எனப்படும் ரோமாபுரி விளையாட்டுப் போட்டி வீரர்கள் இடையே புகுந்தால் என்ன நடக்கும் என்கிற பார்வையில் பரிமாறப்பட்ட லயன் ஆங்கில வரிசை சித்திரக் கதை இது. முதல் பாகம் part-1 ல் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கும். இதன் நிறைவுப் பகுதி என் டெஸ்க் டாப்பில் மிக நீண்ட நாட்களாக கண்சிமிட்டிக் கொண்டே இருந்தது. எவ்வளவோ கலாட்டா செய்கிறோம். இடையே கிளாடியேட்டர்களையும் களமிறக்கி விடுவோமே. அவர்களும் ஜெர்மன் படையை துவம்சம் செய்யட்டுமே என்கிற ஆவலில் உங்களுக்காகத் தமிழ் படுத்தி (?) இருக்கிறேன். பிடிச்சிருந்தா ஒரு கடுதாசி போடறது? ஹி ஹி ஹி காலம் கரைத்து விட்ட ஒன்றாக மாறிக் கொண்டிருக்கும் கடுதாசி இன்று எனக்கு வராதா என்று நாம் ஏங்கிய நாட்களும் உண்டுதானே நண்பர்களே? சரி. சரி. கதையை வாசிங்க!
பின்னர்? என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

CORRECTED COPY (THANKS TO THIRU. E.PU.GNANAPRAKASAN)
வெள்ளி, 12 ஜூன், 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 22_A Rare Srilankan Tamil Comics!
வணக்கங்க நண்பர்ஸ்! நண்பிஸ்! திஸ் கதை தொடர் விறுவிறுப்பாக இறுதிக் கட்டம் நோக்கி நகர்ந்து செல்கிறது! என்ஜாய்!
மொராக்கோ மர்மம்! மாலைமதி காமிக்ஸ் வரிசையில் பிரமாதம் செய்ததொரு காமிக்ஸ். அதனை வண்ணங்களால் அலங்கரித்தால் என்ன என்கிற ஆர்வ மிகுதியில் ஒரு சில பக்கங்கள் மட்டும். ஆனா பெண்டு நிமிந்திட்டு. புத்தக உதவி செய்த அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அடம் பிடித்த சம்பத் அவர்களுக்கும் நன்றிகள்!
சில்லறை இல்லா மனிதன் கல்லறையில்....இதுதாங்க உலக நியதி. நல்லா சேமியுங்க. வாழ்க்கை வளமாகும்ங்க! செலவைக் குறைங்க. இப்போதைக்கு அவ்ளோதான். என்னிக்கும் உங்க அன்பான நண்பன் ஜானி!!!
புதன், 10 ஜூன், 2015
ராகாப்-பணிவுள்ள இதயம்-விவிலிய சித்திரக் கதை வரிசை-jw.org Comics
அன்பு மிகு தோழமைகளே! ஐம்பதாயிரம் ஹிட்டுகளை ஒரு வழியாகக் கடந்து அடுத்தக் கட்ட மலர்தலை நோக்கி என் வலைப்பூ தனது பயணத்தைத் தொடர்கிறது. அதற்காக என் நன்றிகள். விவிலியம் குறிப்பிடும் ஒரு சில பெண்மணிகளுள் ராகாப் ஒருவர். இயேசுவின் முன்னோர்களுள் ஒருவர். அவரது வரலாற்றின் ஒரு சுருக்கமான பாகத்தை இம்முறை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இனிய வாசக நெட்டிசன்களே! தங்கள் கருத்துகள்தான் என்னை முன்னே செல்ல ஊக்குவித்தன உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நீங்கள் இங்கே சைலன்ட் ரீடர் வரிசையில் இருக்கலாம். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி!
செவ்வாய், 9 ஜூன், 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 21
வணக்கங்கள் என் அருமை தோழமை நெஞ்சங்களே! வீரகேசரி தனது இருபது பாகங்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து இறுதி இலக்கினை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்கிறது. தொடர்வோம் நாமும் அதன்பின்....
அப்புறம் ஒரு சின்ன தகவல் :தலைக் கவசம் -தலை மட்டை -ஹெல்மட் சமாச்சாரம் இன்று அறிந்திருப்பீர்கள். கட்டாயம் தலைக் கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தினை ஓட்டுவது என்பது இனி மிக முக்கியமாகக் கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டிய விஷயம். இது நீதி மன்ற உத்தரவு. சமீபத்தில் ஒரு தலைக் கவசம் அணியா நண்பர் ஒருவரை நிறுத்தினேன். தலைக் கவசம் குறித்துக் கேட்டபோது இது ஒன்றும் கட்டாயம் இல்லை. வாய்மொழியாக உங்களுக்கு உத்தரவு இருக்கு. அது உங்களுக்குத் தெரியாது என்று அப்பாவியாகக் கூறினார். சில சட்டங்கள் என்றுமே உயிர்வாழ்தல் பொருட்டு அலட்சியம் செய்யக் கூடாதவை நண்பர்களே. சிறிது காலம் முன்னர் நான் விபத்தொன்றில் சிக்கினேன். என் தலை என் கட்டுப்பாட்டை இழந்து டெம்பிள் டவர் என்கிற கட்டிடத்தின் காம்பவுண்டு சுவரில் சென்று மோதுவதை உணர முடிந்தது. அடச்சே தலைக் கவசம் அணிந்திருந்தால் தப்பி இருக்குமென் தலை என்பதை அந்த வினாடி எண்ணியது என் மனம். இது போன்ற கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் நண்பர்களே? எனவே தயவு செய்து தலைக் கவசம் அணியுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பேணுங்கள் என்கிற சின்னஞ்சிறு வேண்டுகோளுடன் நிறைவு செய்கிறேன்!
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி_ஜான் சைமன்
என்னங்க ஜி?
சரியா கேக்கலை|
அப்படியா?
சரி|
பண்ணிடலாம்|
இதோ உங்கள் பார்வைக்கு ஸ்கான் செய்த உண்மையான பக்கம். புத்தகத்தை பாதுகாத்து எங்கள் வாசக உள்ளங்களுடன் பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றிகள் திரு அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களே!
-டொக்-(ஹி ஹி ராஜேஷ் குமார் அண்ணன் மன்னிச்சு)
திங்கள், 8 ஜூன், 2015
ருத்ராட்சம் - இலவசம்!!!
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
ஒரு நண்பர் சமீபத்தில் ஒரு பக்க செராக்ஸ் ஒன்றினைக் கொடுத்து வாசிக்கும்படி கூறினார். அதில் ருத்திராட்சம் அணிவதின் நன்மைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருந்தன. இறுதியில் தலைப்பில் கண்டபடி ருத்திராட்சம் இலவசம் என்கிற விஷயம் என்னை ஈர்த்தது. உண்மையான ருத்திராட்சம் கிடைப்பது அரிது என்றிருக்கையில் இங்கே திரு.ராஜேந்திரன் என்கிற சகோதரர் தன்னை இது விஷயமாக அர்ப்பணித்து செயல்பட்டு வருவதும் அவரே http://omnamashivaayaa.blogspot.in/ என்கிற வலைப்பூ நடத்தி வருவதும் தெரியவந்து அவரைத் தொடர்பு கொண்டேன். அருமையான மனிதர். 9942441111 என்கிற எண்ணில் அவரைத் தொடர்பு கொண்டு பேசலாம். அவரது கைபேசிக்கு உங்கள் முகவரியை அனுப்பி ருத்திராட்சம் பெற்று மகிழலாம். அவரிடம் இருந்து சில ருத்திராட்சங்களை என் காவல் துறை நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தேன். நீங்களும் முயலலாமே?
நண்பர் சிவ் வின் சமீபத்திய பதிப்பு...
http://comicstamil.blogspot.in/2015/06/blog-post.html
பின்? பை!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...