ரோமாபுரி வீரர்கள் உலகப் போரில் கலந்தால்.....II

வணக்கங்கள் காமிக்ஸ் ரசிக நண்பர்களே!
இரண்டாம் உலக யுத்தம் நடக்கும்போது இடையே கால வெளியைக் கடந்து கிளாடியேட்டர்கள் எனப்படும் ரோமாபுரி விளையாட்டுப் போட்டி வீரர்கள் இடையே புகுந்தால் என்ன நடக்கும் என்கிற பார்வையில் பரிமாறப்பட்ட லயன் ஆங்கில வரிசை சித்திரக் கதை இது. முதல் பாகம்  part-1 ல் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கும். இதன் நிறைவுப் பகுதி என் டெஸ்க் டாப்பில் மிக நீண்ட நாட்களாக கண்சிமிட்டிக் கொண்டே இருந்தது. எவ்வளவோ கலாட்டா செய்கிறோம். இடையே கிளாடியேட்டர்களையும் களமிறக்கி விடுவோமே. அவர்களும் ஜெர்மன் படையை துவம்சம் செய்யட்டுமே என்கிற ஆவலில் உங்களுக்காகத் தமிழ் படுத்தி (?) இருக்கிறேன். பிடிச்சிருந்தா ஒரு கடுதாசி போடறது? ஹி ஹி ஹி காலம் கரைத்து விட்ட ஒன்றாக மாறிக் கொண்டிருக்கும் கடுதாசி இன்று எனக்கு வராதா என்று நாம் ஏங்கிய நாட்களும் உண்டுதானே நண்பர்களே? சரி. சரி. கதையை வாசிங்க!
CORRECTED COPY (THANKS TO THIRU. E.PU.GNANAPRAKASAN)


பின்னர்? என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

Comments

//கட்டுமரமெண்டு கதைத்தால் எதுகை மோனை அமைக்க ஏலாது// - அதற்காகத் தவறான வார்த்தையைப் பயன்படுத்தலாமா நண்பரே? பாய்மரம் என்பது, கப்பலில் பாய்களைக் கட்டப் பயனாக நிற்கும் செங்குத்துக் கம்பு.

இருந்தாலும், உங்கள் சித்திரக்கதை ஆர்வத்துக்கும் தமிழ் ஆர்வத்துக்கும், உழைப்புக்கும் என் தலை வணங்கிய பாராட்டுக்கள்!
John Simon C said…
வணக்கங்கள் நண்பரே! தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் கருத்து மிகவும் சரி. பிழையைப் பொறுத்தருள்க. நான் அவ்வப்போது நகைச்சுவை செய்வது போல இதிலும் செய்திருந்தேன். ஹி ஹி ஹி தமிழில் வேறு சொலவடைகளைப் பயன்படுத்தி இருக்கலாம். இந்தக் கதை பிடித்திருந்தால் சிங்கத்தின் கதவைத் தட்ட நம் நண்பர்களைத் தூண்டுவதே என் அவா. நன்றிகள்.

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!