வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 21

வணக்கங்கள் என் அருமை தோழமை நெஞ்சங்களே! வீரகேசரி தனது இருபது பாகங்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து இறுதி இலக்கினை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்கிறது. தொடர்வோம் நாமும் அதன்பின்.... 
அப்புறம் ஒரு சின்ன தகவல் :
தலைக் கவசம் -தலை மட்டை -ஹெல்மட் சமாச்சாரம் இன்று அறிந்திருப்பீர்கள். கட்டாயம் தலைக் கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தினை ஓட்டுவது என்பது இனி மிக முக்கியமாகக் கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டிய விஷயம். இது நீதி மன்ற உத்தரவு. சமீபத்தில் ஒரு தலைக் கவசம் அணியா நண்பர் ஒருவரை நிறுத்தினேன். தலைக் கவசம் குறித்துக் கேட்டபோது இது ஒன்றும் கட்டாயம் இல்லை. வாய்மொழியாக உங்களுக்கு உத்தரவு இருக்கு. அது உங்களுக்குத் தெரியாது என்று அப்பாவியாகக் கூறினார். சில சட்டங்கள் என்றுமே உயிர்வாழ்தல் பொருட்டு அலட்சியம் செய்யக் கூடாதவை நண்பர்களே. சிறிது காலம் முன்னர் நான் விபத்தொன்றில் சிக்கினேன். என் தலை என் கட்டுப்பாட்டை இழந்து டெம்பிள் டவர் என்கிற கட்டிடத்தின் காம்பவுண்டு சுவரில் சென்று மோதுவதை உணர முடிந்தது. அடச்சே தலைக் கவசம் அணிந்திருந்தால் தப்பி இருக்குமென் தலை என்பதை அந்த வினாடி எண்ணியது என் மனம். இது போன்ற கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் நண்பர்களே? எனவே தயவு செய்து தலைக் கவசம் அணியுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பேணுங்கள் என்கிற சின்னஞ்சிறு  வேண்டுகோளுடன் நிறைவு செய்கிறேன்!
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி_ஜான் சைமன்
என்னங்க ஜி?
சரியா கேக்கலை|
அப்படியா?
சரி|
பண்ணிடலாம்|
இதோ உங்கள் பார்வைக்கு ஸ்கான் செய்த உண்மையான பக்கம். புத்தகத்தை பாதுகாத்து எங்கள் வாசக உள்ளங்களுடன் பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றிகள் திரு அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களே!
-டொக்-(ஹி ஹி ராஜேஷ் குமார் அண்ணன் மன்னிச்சு)

Comments

வணக்கம் ஜி.....பழைய ஃபார்ம் க்கு வந்து விட்டீர்கள் ....அரை மில்லியன் தங்கத்தை (அரை மில்லியன் ஹிட் ) பெறப்போவதற்கு வாழ்த்துக்கள் .....தொடர்ந்து கலக்குங்கள் ஜி...
John Simon C said…
நன்றிகள் பல ஜி! காமிக்ஸ் என்பதை மையமாகக் கொண்டு சோதனைகள் பல செய்து பார்க்கும் களமாகவே இங்கே வந்தேன். கிடைத்ததோ அரிய நண்பர்கள்! என்ன தவம் செய்தேன் என திக்குமுக்காட வைக்கும் அளவு நண்பர் படை! ஒரு புத்தகம் வேண்டுமெனில் தமிழ் பேசும் நண்பர்கள் இருக்கும் எவ்விடத்தில் இருந்தும் கொடுத்து உதவுகின்றனர். உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி நண்பரே!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!