சனி, 22 ஆகஸ்ட், 2015

கண்ணில் பட்ட துணுக்குகள்

-எல்லா வகையிலும் சமமான முக் கோணங்களுக்கு ஒரு பெயருண்டு. அது என்ன?
-கான்க்ரூயன்ட் (congruent)


-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நிக்சன் பதவியில் இருக்கும்போது இவர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது இவரது முகத்தை வைத்து வாட்சுகள் செய்யப்பட்டது. இந்த வாட்சுகள் மிகவும் பிரபலமடைந்தன. இந்த வாட்சுகளில் உள்ள நிக்சன் முகத்தின் கண்கள் ஒவ்வொரு நொடிக்கும் இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் செல்லும். அந்த முகத்தின் தலையில் நான் திருடன் இல்லை என்று எழுதப்பட்டிருக்கும்.


-பிறக்கும் குட்டிகளிலேயே யானைக் குட்டிதான் அதிக எடையுள்ளது. யானைக் குட்டியின் எடை அறுபத்தேழு கிலோவிலிருந்து தொண்ணூறு கிலோ வரை இருக்கும்.

-தமிழ் நாட்டில் உள்ள மாநகராட்சிகள் பன்னிரண்டு. அவை உருவான ஆண்டுகள்.
சென்னை மாநகராட்சி -1688
மதுரை -1971
கோவை -1981
திருச்சி -1994
நெல்லை-1994
சேலம் -1994
திருப்பூர்-2008
ஈரோடு-2008
வேலூர்-2008
திண்டுக்கல்-2014
தஞ்சாவூர்-2014

தூத்துக்குடி-2008

என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!

சனி, 15 ஆகஸ்ட், 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 052 -060_ A Rare Srilankan Tamil Comics!

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே. இனியஅறுபத்தொன்பதாவது  சுதந்திர தின  நல்வாழ்த்துக்கள்.







இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். சேர்ந்தே இன்னும் பல சாதனை படைப்போம்.
வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பு நண்பன் ஜானி!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 051 _ A Rare Srilankan Tamil Comics!

ஈரோடின் இன்ப மாநாடு. லயன் காமிக்ஸ் சார்பில் புத்தகத் திருவிழாவில் அரங்கேறியது. அதில் பங்கு கொண்ட நெஞ்சங்களைக் காண இந்த சுட்டியை அமுக்கி ஆசிரியர் திரு.எஸ்.வி. பக்கம் போங்கள்.
http://lion-muthucomics.blogspot.in/2015/08/blog-post_13.html?

என்றும் அதே அன்புடன்...
உங்கள் இனிய நண்பன் ஜானி.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 048 & 049_A Rare Srilankan Tamil Comics!


கிழமைகள் மாறி வந்தாலும் குழப்பங்களே இல்லாத கதை! தொடர்கிறது....

நீலாவின் கிளி

வணக்கங்கள் அன்பு உள்ளங்களே!
விதவிதமான சித்திரக்கதை நேயர்களில் புதுப்புது அறிமுகங்கள் கிடைப்பது என்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று நான் அறிமுகப்படுத்தவுள்ளவர்  திருவாளர்.சுரேஷ் சந்த் அவர்கள். தமிழ் சித்திரக்கதைகளின் மீது தீராத்தாகம் கொண்டுள்ள எக்கச்சக்கமான நண்பர்களில்   இவர் வேறுபடுகிறார். விதவிதமான பொருட்கள் சேகரிப்பு, நாணயங்கள் சேகரிப்பு, ரூபாய் நோட்டுகள் சேகரிப்பு, தாயத்துகள் சேகரிப்பு என்று இவரது சேகரிப்பின் எல்லைகள் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணிக்கின்றன. தமிழ் சித்திரக்கதைகள் மீது இவர் கொண்ட நேசம் நமக்கு வரப்பிரசாதம் என அமைந்து விட்டது நமக்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம். எத்தனையோ நண்பர்களது ஆதரவுக்கரங்கள், பலத்த கைதட்டல்கள்  இனி இவரை நோக்கிக் குவியும் என்பதில் சந்தேகமில்லை.  அன்னாரது வேண்டுகோளின்படி இந்தக் குறுங்கதை வெளியாகிறது. இது இதயம் பேசுகிறது இதழில் இடம்பெற்ற ஒரு சிறு சித்திரக்கதையாகும். நன்றிகள் சார். இன்னும் பல அருமையான கதைகளை வாசகர்களுக்கு அன்பளிக்க எங்கள் முன்கூட்டிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவாளர்.சுரேஷ் சந்த்.



பிடிஎப்  நண்பர் திரு.ரஞ்சித் கொடுப்பார். 

அப்புறம், திருவாளர்.சுரேஷ் சந்த் அவருடைய சேகரிப்புக்கு சித்திரக்கதைகள் நிறைய தேவைப்படுகிறது. நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ள https://www.facebook.com/suryantex.chandran?fref=nf

திகில், லயன் முதல் நூறில் ஐம்பது புத்தகங்கள், முத்து காமிக்ஸில் முதல் நூறில் ஒரு இருபது புத்தகங்கள் என சில தேவைகள் உள்ளன. தொடர்பு கொள்ளுங்களேன்?
அப்புறம் ஒரு முக்கியமான விடயம். அவரிடம் தமிழில் பேசும்போது கவனமாகப் பேசவும். தலைவர் தமிழ் சரியாகப் பேசுவார். மற்றவர்களும் அவ்வாறே பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஆடி மாதம் அடிக்குது காத்து....!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே!
இன்று உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும் காமிக்ஸ் உடன் வழங்கி மகிழ்ந்திடுக என்று தமிழ் சித்திரக்கதை முகநூல் பக்கம் அன்புடன் வழங்கும் காமிக்ஸ் பரிசு இது. என்ஜாய். 
இதயம் பேசுகிறது இதழில் இடம்பெற்ற இக்கதையின் கர்த்தா : திரு. கோபால குமார் , சித்திரக் காரர் திரு. ஜெயராஜ்.
  இதயம் பேசுகிறது இதழுக்கு எங்கள் அனைவரின் நன்றிகள். வாழ்த்துக்கள்.  



ஹி! ஹி! ஹி! நீங்கள் வேற மாதிரித்தானே எதிர்பார்த்தீர்கள். இதான்யா ட்விஸ்ட்டு. 

பிடிஎப் வேண்டுபவர்களுக்கு  திரு ரஞ்சித் அவர்கள்  விரைவில் சுட்டியை நல்குவார். வாசகர்கள் சார்பில் உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடை பெறுகிறேன். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.


சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...