சென்னையில் ஒரு விபத்து...

அன்புடையீர், வணக்கம்.
இது வெள்ளம் கண்ட நகரம். எங்கள் சென்னை மா நகரம். இங்கே எத்தனையோ சம்பவங்கள். எத்தனையோ நல்ல எண்ணங்கள். எத்தனையோ அனுகூலங்கள். எத்தனையோ நிகழ்வுகள். நான் ஒரு காவலராக இருந்தபோதிலும், போக்குவரத்தில் பணியாற்றும்போதுதான் நிறைய விபத்துகளையும் அதில் பாதிக்கப்பட்டோரையும் நிறைய கண்டிருக்கிறேன். இப்போது வெள்ளம் வந்து மக்களின் உத்தமர்களை அடையாளம் காண்பித்துச் சென்று விட்டது என்றாலும் இவர்களும் துவக்கத்தில் இருந்தே இங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாக நான் எழுதிய கவிதை. அன்றும், இன்றும், இனியும் இவர்கள் இருப்பார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரே என்பதால் வாசிக்கும் உங்களுக்கே இது சமர்ப்பணம்!


தூக்கி விட
ஆயிரம் கரங்கள்
நீளும்...


வாயில் விட
தண்ணீர் புட்டிகள்
துடிக்கும்...

பொங்கும் இரத்தம்
தவிர்க்கக் கைகள்
எங்கிலும் கர்சீப்புகளை நீட்டும் ....

விழுந்தோருக்கு
விருந்தோம்பும்
இதுதான் எங்கள்
மாநகரம்....என்றும் அதே அன்புடன்
உங்கள் இனிய நண்பன்
ஜானி...

Comments

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!