திங்கள், 29 ஜூலை, 2019

அங்கிங்கெனாதபடி.. வினாடி கதைகள்-ஜானி சின்னப்பன்..

அவனின் இஷ்டதெய்வத்தினை தரிசிப்பதற்காக கைக்குழந்தை, பச்சை உடம்பு மனைவி, வயதான அம்மா எல்லோரையும் அழைத்துக் கொண்டான். திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த ஊர்..அடித்துப் பிடித்து, நாலு பேரை மிதித்து, தானும் குடும்பத்தாரும் மிதிபட்டு நசுங்கி சாமியை தரிசித்து ஊர் திரும்பும்போது..அந்த கூட்டத்துல நாலு பேரு நசுங்கி செத்துட்டாங்களாமே..ஐயோ பாவம்  என கதைத்துக் கொண்டே வீடு சேர்ந்தான்.. பூஜை அறையிலிருந்த அவனின் இஷ்ட தெய்வம் அதே அருள்நிறைந்த புன்முறுவலுடன்...

(Disclaimer: இவை அனைத்தும் என் சொந்த கற்பனைக் கதைகளே...யார் மனதையும் புண்படுத்துவதோ யாருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதோ என் எண்ணமில்லை.. நீண்டகால வாசகர் எனும் நிலையிலிருந்து எழுத்துலகில் சிறு காலடி வைத்திருக்கிறேன்.. பிழைகளிருப்பின் பொறுத்தருள்க..)

திங்கள், 22 ஜூலை, 2019

செய்தி.. வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..

டிங்.. டிங்.. டிங்..கென வந்து விழுந்த செய்திகளால் எரிச்சலானான் தமயந்தன்.. வேகமாக கமெண்டில் ஆங்ரி சிம்பலை தேடிப்பிடித்து பதிலுக்கு அனுப்பி வைத்தான்.. பதிலாக சிரிப்பு சிம்பலே வந்து கொண்டிருக்க..வேறு வழியில்லாமல் சிரிப்பு சிம்பலைத் தானும் தட்டினான்..புத்தர் புன்னகைத்தார் அருகிலிருந்த ஷெல்பொன்றில் சிலையாக..

(Disclaimer: இவை அனைத்தும் என் சொந்த கற்பனைக் கதைகளே...யார் மனதையும் புண்படுத்துவதோ யாருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதோ என் எண்ணமில்லை.. நீண்டகால வாசகர் எனும் நிலையிலிருந்து எழுத்துலகில் சிறு காலடி வைத்திருக்கிறேன்.. பிழைகளிருப்பின் பொறுத்தருள்க..)

வியாழன், 18 ஜூலை, 2019

இக்கணமே கொன்றுவிடுக..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்

அந்த க்ரைம் எழுத்தாளர் "இக்கணமே கொன்றுவிடுக" என புதிதாக தலைப்பிட்ட கதையை  கவர் மேலே குறிப்புடன் அனுப்பி வைத்தார். அந்த தபால் தப்பான முகவரியில் கவனக்குறைவாக டெலிவரி செய்யப்பட்டது.. அதை கொண்டுபோய் கொடுத்த கூரியர் பாயின் கையில்
கைநிறைய டிப்ஸ் பணத்தோடு
டைம்பாம் அடங்கிய பார்சல் ஒன்றினை  திணித்தான் முகவரியிலிருந்த ஆசாமி.  "உள்ளே வாட்ச் ஒன்று பிறந்தநாள் பரிசாக வைத்திருக்கிறேன். போகிற வழியில் இதனை சேர்ப்பித்து விடேன்.." டிக்.டிக்..டிக்..

புதன், 17 ஜூலை, 2019

சதிவலை...வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்

நீங்க சொன்ன மாதிரியே லாரியை ஏத்தி அவனைக் கொன்னுட்டேன் எஜமான்..மீதிப் பணத்தை வந்து வாங்கிக்க இப்ப வரட்டுங்களா என்றவனின் லாரி டயர் படீரென வெடித்ததில் நிலைதடுமாறிய வாகனம் அதலபாதாள மலைச்சரிவில் குட்டிக்கரணமடிக்கத் தொடங்கியது..டமார்ர்..எதிரில் பேசிக் கொண்டிருந்த எஜமானின் செல்போனும் சூடேறி வெடித்தது..படீர்ர்..

செவ்வாய், 16 ஜூலை, 2019

விடாது விதி.. வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..


கிரகம் எக்ஸ்.. கிரகத்தின் ஒட்டுமொத்த ஏலியன்களையும் லேசர் துப்பாக்கிகளால் சுட்டுப் பொசுக்கி வெற்றியோடு திரும்பியவனை காதலோடு எதிர் கொண்டாள் சமீபத்தில் பிரசவித்த மனைவி..கையிலிருந்த குழந்தை நான் ஒரு மியூட்டன்ட்டாக்கும்(திடீர் மாற்றமடைந்த ஜீவன்) என அவனைப் பார்த்து புன்னகைத்தது..

திங்கள், 15 ஜூலை, 2019

ஏக்கம்..#வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்




அப்பா வரும்போது இனிப்புப் போளி வாங்கி வாங்கப்பா என்ற குழந்தையின் குரலுக்கு லேசாக அதிர்ந்து தலையாட்டியவன் தன் வெறும் சட்டைப் பையை தடவிக்கொண்டே புறப்பட்டுப்போய் ஏற்கனவே பட்ட கடனுக்காக பரோட்டா பிசைய ஆரம்பித்தான் உணவகம் ஒன்றில்...

வியாழன், 11 ஜூலை, 2019

விதி..! வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..



தடதடத்த அந்த புல்லட்டை சரேலெனத் திருப்பியவன் தலைகுப்புறக் கவிழ்ந்தான்... ஆழ் இருளில் கறுப்பாய் குறுக்கே கிடந்ததொரு நாய்ப் பொம்மை..#வினாடி கதைகள்.. #ஜானி சின்னப்பன்..

முற்பகல் செய்யின்..



பாசமாய் அம்மா நீட்டிய தயிர் சாதத்தில் உப்பு அதிகமென தூக்கி எறிந்த நினைவு வந்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது ஓட்டலின் பேரருக்கு..என்னாய்யா உப்பை அள்ளிக் கொட்டி வெச்சிருக்கீங்க? ஹோட்டலாய்யா இது...#வினாடி கதைகள்..# ஜானி சின்னப்பன்

சமம்..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்



அடச்சே..தெம்படுற இடத்தில எல்லாம் எந்த கருமம்பிடிச்ச  போஸ்டரையாவது ஒட்டி அசிங்கமாக்கிடறானுக என கோபத்துடன் அந்தப் போஸ்டரைப் பிடித்திழுத்து கிழித்தபோது.. போன வருடம் அவனுக்காக நண்பர்கள் ஒட்டியிருந்த பிறந்ததின வாழ்த்து போஸ்டரிலிருந்த அவன் கண்கள் அவனை வெறித்துப் பார்த்தன...#வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..

செவ்வாய், 2 ஜூலை, 2019

வருமா மீண்டுமொரு மழைக்காலம்...?

காய்ந்து போன குளங்களே...நிரம்பி வழிவதெக்காலம்...?
துள்ளித் திரிந்த மீன் கூட்டங்களே.. மறுஜென்மம் கொள்வதெக்காலம்...? தீய்ந்து போன பாசிகளே..
விழித்தெழுந்தும் உயிர்ப்பூப்பதெக்காலம்..?
பாய்ந்திரை கவ்விடும் மீன்கொத்திகளே..உங்கள் வயிறுநிறைவதெக்காலம்...?
கும்மாளம் போடும் தவளைகளே...உங்கள் பாடலைக் கேட்பதெக்காலம்...?
எழும்பி அடங்கும் அலைகளே...
உங்கள் வளைவுகளில் இதயம் தொலைப்பதெக்காலம்?
மிதக்கும் பூச்சிக்கூட்டங்களே..
உங்கள் இறகொலி கேட்பதெக்காலம்?
உயிரை ஈயும் மாமழையே நீ தரணியேகுவதெக்காலம்...
விரைந்து வருவாய் நானிலம் நனைப்பாய்... உயிர்களைக் காப்பாய்...

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...