வியாழன், 18 ஜூலை, 2019

இக்கணமே கொன்றுவிடுக..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்

அந்த க்ரைம் எழுத்தாளர் "இக்கணமே கொன்றுவிடுக" என புதிதாக தலைப்பிட்ட கதையை  கவர் மேலே குறிப்புடன் அனுப்பி வைத்தார். அந்த தபால் தப்பான முகவரியில் கவனக்குறைவாக டெலிவரி செய்யப்பட்டது.. அதை கொண்டுபோய் கொடுத்த கூரியர் பாயின் கையில்
கைநிறைய டிப்ஸ் பணத்தோடு
டைம்பாம் அடங்கிய பார்சல் ஒன்றினை  திணித்தான் முகவரியிலிருந்த ஆசாமி.  "உள்ளே வாட்ச் ஒன்று பிறந்தநாள் பரிசாக வைத்திருக்கிறேன். போகிற வழியில் இதனை சேர்ப்பித்து விடேன்.." டிக்.டிக்..டிக்..

2 கருத்துகள்:

  1. அருமை! ஆனால் கதையில் சுருக்கம் இருக்கும் அளவுக்கு அதன் சொல்லாடல்களில் சுருக்கம் இல்லை என்பது சிறு குறை. வரிகளை நீள நீளமாக வளர்த்தாமல் சிறு சிறு வரிகளாக உடைத்து எழுதினால் என்னும் செம்மையாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். தங்களது விருப்பப்படி முயற்சிக்கிறேன்..சம்பவங்களை வேகமாக அடுக்கியதில் வார்த்தைகளை தொடுப்பதில் என மாற்றங்களை கொண்டு வர கண்டிப்பாக முயற்சிக்கிறேன். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..

      நீக்கு

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...