இனிய வணக்கங்கள் அன்பு மிக்கோரே...
அதிலும் குறிப்பாக தன்னந்தனியே படிப்புக்காக கடலூர் புனித வளனார் பள்ளியில் சேர்க்கப்பட்டு விடுதியில் கட்டுப்பாடான வாசிப்புக்கும் வழிவகை செய்து கொடுத்திருந்த அந்த காலத்தில் குடும்பத்தை பிரிந்த துயரங்கள் கற்பனைகளால் ஈடுகட்டப்பட்டன. அதிலும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் ஆண்டு தோறும் மறக்காமல் கொண்டு வந்து கண்காட்சிக்கு வைக்கும் இரஷ்ய மொழி மாற்ற மற்றும் சிறுவர் இலக்கிய நூல்கள் அப்படியே அள்ளிக்கொள்ள எத்தனிக்க வைக்கும்... மறக்க முடியா நாட்கள் அவை. அதிலும் ஒரு சோகம் நேர்ந்தது எனக்கு...யாரோ ஒரு புத்தகத்தை ஆட்டையைப் போட்டு கண்காட்சிக்கு வெளியே வேறோர் இடத்தில் கன்னி மாதா சிலையருகில் வைத்து விட்டுப் போய்விட அதனை ஆஹா லக்கி பிரைஸ் என்று எடுத்து சென்று எனது டெஸ்கில் வைத்திருந்த போது அது போல நிறைய புத்தகங்கள் ஆட்டை போடப்பட்டு விட்டதாக வார்டன் உள்ளே வந்து சோதனை போட ஆரம்பிக்கவும் என் டெஸ்க்கில் விலைக்கு வாங்கிய சில புத்தகங்களுடன் இந்த புத்தகமும் இருக்க பில்லை வைத்து அதனை கண்டு பிடித்த வார்டன் அதனை பறிமுதல் செய்ததும்...பின்னர் இது போல சிக்கிய பலரையும் முட்டி போட வைத்ததும் டியூஷன் செல்லும் மாணவர்கள் ஆளுக்கொரு குட்டு வைத்ததும் வரலாறு...இத்தனைக்கும் அன்றைக்கு சிக்கியது சித்திரக்கதை கூட இல்லை. யாரோ ஒருவரது வாழ்க்கை வரலாறு அல்லது சுவர்க்கோழி கதையாக அது இருந்திருக்கக் கூடும்.. விதி அந்த புத்தகத்தை கொண்டு வந்து சேர்த்து குட்டு விழ வைத்தது என்றுதான் நினைக்கிறேன்...
சரி கதைக்கு வருவோம்.. நினைத்த மாத்திரத்தில் உருவத்தை சுருக்கவும், பெருக்கவும் கைவசம் கருவி வைத்துள்ள விஞ்ஞானியிடம் உலகம் சிக்கித் தடுமாறுவதை இந்த கதையில் நாம் கண்டு ரசிக்கலாம். இப்போதைய தலைமுறைக்கு ஆண்ட் மேன் போன்ற விசுவல் அட்டகாசங்களை அள்ளிக் கொடுத்து விட்டது ஹாலிவுட். சித்திரக்கதைகளில் சின்னஞ்சிறு மனிதர்கள்...பிரம்மாண்ட வடிவம் கொள்ளும் தவளைகள், பல்லிகள் என்பது அந்த கால சிறுவர்களாக உலவிய எங்களுக்கு மலைப்பூட்டும் விஷயம். என் கற்பனைகளுக்கு சிறகு கொடுத்தது அந்த கால கதைகளே...எக்கச்சக்கமான கற்பனை பாத்திரங்களை வியப்பூட்டும் விதத்தில் கிராமங்கள் வரை அனுப்பி வைத்தது ராணி காமிக்ஸ்.. மறக்கவியலா நாட்கள் அவை..

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக