ஞாயிறு, 3 நவம்பர், 2019

கடைசி இரவுகள்_ஆனந்த விகடன் தொடர் _Suresh Chand

இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே...சிறப்பான தொலைக்காட்சி பெட்டியாக அமைந்து விட்டது நம்ம சுரேஷ் சந்த் ஜியின் பேட்டி...மாயாவி சிவாவின் வரிகளில் இதோ ...

இந்த தீபாவளி வாசகர்களுக்கான தீபாவளி என்பதில் சந்தேகமேயில்லை!

எப்படின்னா....

"எனது படக்கதையை படிக்க ஒரு கூட்டம் இருக்கா.?! அந்த பழங்காமிக்ஸ் புத்தகங்களை சேகரிக்கும் அளவிற்கு அதற்கு ஒரு மவுசு இருக்கா..?! அந்த கால காமிக்ஸ் கம்பெனி ஒன்னு மட்டும் உயிர்தப்பி இன்னும் புக் அடிச்சிகிட்டு இருக்கா.?!இதை ஹலைட் பண்ணி விகடன் குரூப் ஒரு பெரியவரை பேட்டி எடுத்து போட்டிருக்காங்கன்னா...விடப்புடாது பிடி அவரை..எடு பேட்டியை.."

என டிவி மீடியாவும் களத்தில் இறங்கி பாசமிகு அண்ணன் சுரேஷ் சந்த் அவர்களிடம் பேட்டி கண்டுவருகிறது.

அதன் முதல் பதிவாக தினமலர் டிவி எடுத்த பேட்டியில் ஒரு குட்டி பகுதியை முந்தயடிந்துக்கொண்டு முதலில் நான் தருவதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..!

காணொளிக்கான லிங்க்....

https://youtu.be/4GQGyMTgCAQ



இரு நிறுவனங்களின் மோதலால் அலைக்கழிக்கப்படும் இளம் உள்ளங்களின் காதல்

 கடைசி இரவுகள்

 ஆனந்த விகடனில் வெளிவந்த ₹30000 பரிசு பெற்ற தொடர் படக்கதை. டி ஜார்ஜ் வில்லியம் இன் மூலக்கதை. ஓவியர் ஜெயராஜின் அற்புதமான,  கவர்ச்சிகரமான முழுவண்ணப் படங்களுடன்

நாகராஜ் ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர். தொழிலில் நேர்மை. சில விஷயங்களில் குறுக்கு புத்தி..
ரத்தினவேல் நாகராஜிடம் பணியாற்றி ஊழல் செய்து போலீஸில் சிக்கி பின் வெளிவந்ததும் அதே தொழிலை தொடங்கி தரமற்ற ஆய்வாளர்களை வைத்திருந்தும் வெகு வேகமாக முன்னேற்றம்.....நாகராஜுக்கே போட்டியாகும் அளவு
செந்தில் ரத்னவேலின் மகன். அப்பனை மிஞ்சிய வில்லன்...
பிரதீபா நாகராஜின் மகள். இரக்க குணமும் ஆளுமைத் திறனும் ஒருங்கே கொண்டவள்...
சேது. திருமணமாகாத மூன்று தங்கைகளுக்கும் விதவைத் தாய்க்கும் சொந்தக்காரன். படிப்பு அதிகமானாலும் பிழைக்க வழியின்றி நாகராஜிடம் டிரைவராக வேலை பார்ப்பவன்
ரமேஷ் நாகராஜின் மகன் நிறுவனத்தில் நடக்கும் நிர்வாகம் ஆகட்டும்.. தங்கைக்கு வரும் காதலாகட்டும். எதிலுமே நிதானமாக அலசி ஆராய்ந்து நேர்மையான முடிவு எடுப்பவன்.
இந்த கதாபாத்திரங்களுக்கு நடுவே நடக்கும் நடக்க போகும் கதையை நீங்கள் யூகித்திருக்கலாம். ஆனாலும் படிப்பதற்கு விறுவிறுப்பான இந்தப் படக் கதை ஓவியர் ஜெயராஜின் தூரிகை வண்ணத்தில் தூவிய சாரல் மழையால் உங்கள் எண்ணங்களை கொள்ளை கொள்ளும். முழுக்க முழுக்க வண்ணத்தில் வெளிவந்த இந்த தொடர் படக்கதையின் பிடிஎஃப் இன்று உங்களுக்காகவே

http://bit.ly/34q6pKA


 இரு நிறுவனங்களின் மோதலால் அலைக்கழிக்கப்படும் இளம் உள்ளங்களின் காதல்

 கடைசி இரவுகள்

 ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர் படக்கதை. டி ஜார்ஜ் வில்லியம் இன் மூலக்கதை. ஓவியர் ஜெயராஜின் கவர்ச்சிகரமான முழுவண்ணப் படங்களுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...