சனி, 15 மே, 2021

அதோ என் படகு.._ஜானி சின்னப்பன்

 


ஒற்றை மரம்.. 

ஓராயிரம் நினைவுகள்.. காலமென்னும் பெருவெளியின் மௌனம்.. 

தனிமையின் அமைதி.. 

ஓடுகின்ற தண்ணீர்..

உருண்டோடும் நாட்கள்.. 

அதோ ஒரு நிச்சலன பாறை சாட்சியாய் நிற்பதைப் போல

 வாழ்வெனும் பெருவெளி 

வேடிக்கை ஏராளம் காட்டிவிட்டு 

கனவுகளின்  நிழலாய் மறைந்து போகிறது.. 

புதிர்த் தோட்டம் ஒன்றின் 

பசுமைப் பெரும் பரப்பொன்று 

விசித்திரப் புன்னகையுடன் காத்திருக்க..

என் படகு எங்கே எனத் தேடி 

சலித்துப் போகிறது மனம்..  

விடை கிடைக்காத கேள்விகளோடு முற்றுப் பெறாக் கவிதையும் நானும்.. 

மரத்தடி நிழல் வார்த்தைப் பூக்களோடு அதோ எனக்காகக் காத்திருக்கிறது..   விடியலின் முதல் கீற்றுக்கு இன்னும் நேரமிருக்கிறது.. 

முற்றுப்பெறா முத்தங்களை வடுக்களாய்  சுமந்தபடி..

 கதைக்கக் காத்திருக்கும் கனவின் பெருமரம் கரைவதற்குள் கேட்டு விடக் கேள்விகள் ஏராளத்தை சுமந்தபடி அதோ வந்தாயிற்று என் படகு.. விடைபெறுகிறேன்.._ஜானி சின்னப்பன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...