செவ்வாய், 18 மே, 2021

நீ வரும் பாதை_ஜானி சின்னப்பன்

 


அன்பே,
உன் காலடியோசை தொலைவில் கேட்கும்போதே இங்கே புல்பூண்டுகளும் குதூகலம் கொள்கின்றன..

உன் கொலுசின் ஓசை கேட்டு புழு  பூச்சிகளும் தலையை ஆட்டி இரசிக்கின்றன..

உன் காதில்  அசைந்தாடும்  குடை ஜிமிக்கியின் அசைவில் செடி கொடிகள் சேர்ந்தசைந்து மகிழ்கின்றன..

உன் காந்தப் பார்வையில்
புயல்மழை திரண்டு பாதையெங்கும் ஓடையாய் மாறிடுமோவென்றொரு பிரமை...

கானலாய் தொலைவில்
தெரிந்தாய்.. அடடே எப்போது 
எனைக் கடந்து
சென்று மறைந்தாய்?

உன் கொலுசொலி கடந்து போனபின் அந்தப் பாதையில் ஆயிரம்பேர் வந்தாலும் எனக்கு அது ஆளரவமற்ற சாலையே..
_ஜானி சின்னப்பன்
Pic Credit: தோழர் வீரபாண்டியன்

திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நொச்சிகுளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...