ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

மர்ம கிரகத்தின் மாய மனிதன்_ரங் லீ காமிக்ஸ்.

 

வணக்கம் தோழமை உள்ளங்களே... 
இந்த மர்ம கிரகத்தின் மாய மனிதன்.. இந்த சித்திரக்கதை மூலமாக ஹாலிவுட் திரைப்படமாக வந்த ஒரு வெற்றி பெற்ற கதையை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது ரங் லீ காமிக்ஸ். குழந்தைகளை மிகவும் கவரும் விதமாக உருவாகியிருக்கும் திரைப்பட காமிக்ஸ் இது. வேற்று கிரக வாசிகளின் படையெடுப்பு என்கிற அடிப்படையில் உருவாகும் கதைகள் எப்போதுமே பலத்த வரவேற்பினை பெற்று இரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பது நாம் அறிந்ததே.. சமீபத்தைய உதாரணம் PREY. ஒரு வேற்று கிரகம் எங்கிருந்தோ மாய விண்வெளியின் எந்த மூலையில் இருந்தோ பூமியின் சுற்றுப் பாதைக்கு அருகில் வருகிறது. அது அழிந்து கொண்டிருக்கும் ஒன்று என்பதால் அதன் மக்கள் பூமியில் குடியேற விரும்பி தங்கள் உளவாளி ஒருவனை அனுப்பி வைக்கிறார்கள். அதனை மனித இனம் எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறது.சுயநலம் பிடித்த மனிதர்கள் வசம் அந்நிய கிரகத்தை சேர்ந்த மனிதன் கிடைத்தால் என்ன நடக்கும் என்று கதை துவங்கியது முதலே பரபரக்கிறது கதை.. இதன் திரை வடிவம் யூ டியூபில் சிறிது கிடைக்கிறது. தி மேன் பிரம் பிளானட் எக்ஸ் என்கிற இதன் லிங்க் ஏற்கனவே நமது தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து காமிக்ஸ் வாசகராகவே நீடிப்பவராக இருப்பின்   ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்.. 

இந்த நூலினை மொழிபெயர்க்க பெயர்க்க அந்த ஏலியன் ஓடத்தில் நானும் சிக்கிக் கொண்ட மாதிரி அனுபவம் கூட ஏற்பட்டது,. மொழிபெயர்ப்பில் உள்ள சுகம் இதுதான். இந்த வாய்ப்பினை நல்கிய நண்பர் திரு.ஸ்ரீராம் ரங்கராஜன் அவர்களுக்கும் எப்போதுமே ரங் லீ காமிக்ஸ்களை முன்னிறுத்தி நல்ல காமிக்ஸ் வாசிப்பு அனுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்று எண்ணி செயல்படும் திரு.கே.வி.கணேஷ் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.. 

ரங் லீ காமிக்ஸ் இனி சந்தா ஏற்கும் என்கிற அறிவிப்பு வெளியாகி இருப்பதால் நண்பர்கள் சந்தா கட்டுவதை ஒரு விருப்பமாகக் கொள்ளலாம். கடும் மழை நேரத்திலும் காமிக்ஸ்களை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சித்த காலக்கட்டங்களை நாம் நினைவில் வைத்திருப்போம் அல்லவா?  வாருங்கள் தமிழின் சித்திரக்கதைகளை தொடர்ந்து ஆதரிப்போம்.. 


திரு.மணி அவர்களது விமர்சனம்

ரங்லீ காமிக்ஸ் 2 புத்தகம் ! 33 பக்கம் வைட்,பிளாக் Rs 100/- 58 பக்கம் கலர் அதே Rs 100/- இதுவே மர்மமாய் இருக்கு!😄😄 , முதலில் மர்ம கிரகத்தின் மாய மனிதன்! தலை ஜானியின் மொழி பெயர்ப்பு! அட்டை அப்பு சார்! தங்க்: ( அப்பிடீன்னா என்னன்னு நம்ம வீரபாண்டி சார் கிட்ட கேட்கனும்) கதை: 1951 ல் வந்த ஹாலிவுட் சினிமா : கொஞ்சம் போனா சினிமா எடுக்குற காலத்துக்கும் முன்னாடி உள்ள கதையெல்லாம் மொழி பெயர்க்க போறாங்க! 🥰🥰 விண்வெளி மனுசன பாடா படுத்தி, நல்ல மனுசன அடிச்சே கொண்டு போட்டு, கடைசில அவன் கலத்தோட வெடி வச்சு கைலாசம் அனுப்புறாங்க! அவன பாத்தாலே சிரிப்பா வருது! பாவமா இருக்கு, கதானாயகன், பேராசிரியர், கணித வல்லுனர், இன்னும் சில அதிகாரி கள், அனைவரும் வில்லன்கள்! படிங்க மக்களே! புது முயற்சிக்கு ஆதரவு அளியுங்க!

நன்றி சார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...