புதன், 24 ஆகஸ்ட், 2022

நானும் ஓர் பட்சியே...ஜானி சின்னப்பன்

 


கண்ணே.. 

நீ என்ன கரண்ட் பில்லா..?

நினைத்ததும்

அதிர்ச்சி பரப்புகிறாய்

தேகமெங்கும்..


நிலவே..

நீ என்ன 

குளிரூட்டும் அறையா..

என் மனதில்

பாய்ந்து கொண்டே இருக்கிறது 

உன் நினைவின் அலைகள்

குளிர்ச்சியாய்..


ரோஜாவே..

நீ என்ன அத்தனை 

மென்மையா..?

உன்னைப் பற்றிய சிந்தனைகள்

எவரெஸ்ட் உயரம் என் மனதில் சேர்ந்தும்கூட பாரமே தெரியவில்லையே..?


அண்டரண்ட பட்சி அறிவாயோ நீ?

ஆம் அதே சிந்துபாத் கதையில்தான்..

இதைக் கேளேன்..


அன்பே நீ எட்டா உயரத்தில்

மேகமேறிப் போனாலும்..

உன் காலடி நிழலினை மோப்பம் பிடித்துத் துரத்தும்

விடாக்கண்ட பறவை நான்..

ஆம் நானும் ஓர் பட்சியே..

#கவியதிகாரம் 

#ஜானிசின்னப்பன் #விஜயாமைந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...