புதன், 3 ஏப்ரல், 2024

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே..

லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்...

பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால் அவர்களது விமர்சனம்..

வாசகர்களை ஈர்க்கும் கதைகள் கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லும். அதிலும் டெக்ஸ் கதைகளில் டெக்ஸ் வென்று விடுவார் என்று தெரிந்தாலும், பிரதான கதையில் உள்ள கிளைக் கதைகளில் எழும் கேள்விகளுக்கு விடை தேடி செல்வதே டெக்ஸ் கதைகள் வெற்றி பெரும் இடம் என்பேன். அதிலும் வாசகனை ஏமாற்றாமல், கதையை நகர்த்தி செல்வது சிறப்பு என்று சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தில் படித்திருக்கிறேன். 


*பகைவருக்குப் பஞ்சமேது?*


கேள்வியே தலைப்பாய் அமைந்த கதைக்குள் நுழைந்தவுடன், அற்புதமான வரிகளுடன் கதை துவங்க வழக்கமான டெக்ஸ் கதை அல்ல என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஏற்கனவே கார்சனின் அறிமுகம் உள்ளது என்று வலைப்பூவில் படித்த பிறகு கார்சனின் அறிமுகம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை மாறாக கார்சன் டெக்ஸை எப்பொழுது சந்திப்பார் என்ற முதல் கேள்வி எழுந்தது.


ரேஞ்சர்கள் டெக்ஸ் பக்கம் நிற்க நடக்கும் விவாதத்தில் அனல் பறந்தாலும் முடிவில் அனைவரும் டெக்ஸுக்கு உதவுவது என்று முடிவு எடுத்த உடன்  டெக்ஸ் எப்பொழுது ரேஞ்சராக மாறுவார்? என்ற இரண்டாவது கேள்வியுடன் பயணத்தை தொடர்ந்தேன்.


திருமணம் எனும் பந்தத்தில் டெக்ஸுக்கு இருக்கும் தயக்கம் கதை ஓட்டத்தில் காணப்பட்டாலும், பூர்வ குடி பெண்களை மணக்க எந்த வித ஆட்செபனையும் டெக்ஸுக்கு இல்லை என்பதை இந்த கதை நிறுவுகிறது. அதுவே லிலித் திருமணத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு கேள்விக்கு விடை தந்து செல்கிறது. 


டெக்ஸுடன் கார்சன் இல்லாத குறையை ஜிம்மி ஜோன்ஸ் தீர்த்து வைத்தாலும் ஜிம்மி ஜோன்ஸுடன் கடைசி வரை பயணிக்க முடியாது என்று டெக்ஸ் எடுத்த முடிவு வருத்தத்தை கொடுத்தாலும் கதை நெடுக ஜிம்மி கலக்க, ஜிம்மி எப்பொழுது பிரிவார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே சமாதானமடைந்து விடுகிறது. நகைச்சுவையாக கதையை நகர்த்திக் கொண்டு சென்ற வசனங்கள் நச் ரகம்.



சோலிடட் டெக்ஸ் மீது கொள்ளும் காதல் எப்படி முடிவுக்கு வரும் என்ற நான்காவது கேள்வி இந்த கதையை ரொமான்ஸ் பக்கமும் கொண்டு செல்கிறது. 


வழக்கம் போலவே அதிகாரிகள் திருடர்களின் கள்ளக் கூட்டணி இந்த டெக்ஸ் கதையிலும், இப்படி ஒரு கட்டத்தில் முதல் அத்தியாயம் முடிய இரண்டாவது அத்தியாயத்திலாவது விட கிடைக்குமா என்று நான் தொடர,



தான் நிரபராதி என்று நிரூபிக்க டெக்ஸ் காபினை தேட காபின் டெக்ஸ் கையில் எப்பொழுது கிடைப்பான் என்று ஐந்தாவது கேள்வி இணைந்துக் கொள்ள, 


இளம் டெக்ஸ் எப்படி முதிர்ந்தார் என்பதற்கு சாடசியாக ராணுவ அதிகாரிகளின் துரோக செயல் அம்பலமாக ஆஹா கதை சூடு பிடித்து விட்டது என்று நான் துள்ளி குதித்து பக்கங்களை புரட்ட சோலிடட்டின் அம்மா மொராலெஸ் தன் வீரத்தை காட்ட, ஜிம்மி சில பல தகிடு தத்தங்கள் செய்து பரபரப்பை கூட்ட, காஃபின் குறித்து லாரியிடம் டெக்ஸ் விசாரணை தொடங்க, ஆயுத கடத்தல் குறித்து ஆய்வு செய்ய ரேஞ்சர்கள் நுழைய, அந்த ஆயுத கடத்தலின் பழி டெக்ஸ் மீது விழுந்து அவரை தேடி ஒரு ஷெரிப் கூட்டம் தேடுதலை தொடங்க...


வேட்டையும் ஓட்டமும் தொடர்கிறது என்று கதையை நிறுத்தி விட்டு அடுத்த மாத கோட்டாவில் டெக்ஸ் இல்லையே என்று பாயை பிராண்டிக் கொண்டிருக்கிறேன். 


எடிட்டர் சார் இந்த பாகுபலியிலாவது கட்டப்பா ஏன் கொன்னான்னு ஒரே கேள்வியோடு விட்டாங்க, இங்க இத்தனை கேள்விகளை அனாதையாக விட்டு வைத்தால் பௌன்சர் புக்கை படிக்க மனசே வரலே சார்.


கதை 9.5/10


ஓவியம் 10/10


மேக்கிங் 8/10 (ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்ணில் பட்டது.)

அடுத்தடுத்த வெளியீடுகள் குறித்த விளம்பரம்..





விரைவில் எனது அலசலும் தொடரும்.. நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...