இனியதோர் நாளிலே தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே! அது 1992, மணலூர்ப்பேட்டை, அம்சார் அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள என் புத்தம் புது "ஜானி இல்லத்தில்" அனைவரும் புது மனை புகுவிழாவில் மகிழ்ச்சிபொங்க சுற்றி சுழன்றுகொண்டு இருக்க, நானும் நண்பன் குணசேகரன் எ குன்சுவும் திகிலோடு காத்துக் கொண்டு இருந்தோம்! அவன் வரவுக்கு எங்கள் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. விழாவில் ஒவ்வொரு நிகழ்வாக அரங்கேறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது அங்கே தலை நீட்டுவதும் ரோட்டுக்கு ஓடுவதுமாக அவன் வருவானா வரமாட்டானா என்கிற அச்சம் மனதில் தைக்க காத்துக் கொண்டு இருந்தோம்! விழா முடிந்து அனைவருக்கும் ரோட்டில் வைத்து அந்த கால கலாச்சாரப்படி வீடியோ படம் சத்தியராஜின் பங்காளி(http://en.wikipedia.org/wiki/Pangali) என்று நினைவு; ஓடிக்கொண்டு இருக்க நாங்களோ மிகவும் திகிலோடு அவனுக்கு என்ன ஆச்சோ என்று புலம்பித் தவித்துக் கொண்டு இருந்தோம்! ஒரு வழியாக வந்து சேர்ந்தான்! யாசின் அஹமது என்கிற எங்கள் நண்பன்! விஷயம் இதுதான். திருவண்ணமலையில் முகல் புறா என்கிற தெரு இன்றும் உண்டு! அந்த தெருவுக்கு ஒரு வாரம் முன்னதாக அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சென்று டீல் பேசி காமிக்ஸ் எல்லாம் வேண்டும் என்ற அக்ரிமன்ட் போட்டு திரும்பி இருந்தோம்! திட்டப்படி யாசினை காலை பத்து மணி வாக்கில் பஸ் ஏற்றி அனுப்பி இருந்தோம். பயல் வெகு சாவகாசமாக இரவு ஒன்பதரை வாக்கில் வந்து சேர்ந்தால் என்ன செய்யலாம்? நாலு பலத்த அடி வாங்கினான்! பின்னர் அவன் பையை பிடுங்கி பிரித்தால் அத்தனையும் காமிக்ஸ், காமிக்ஸ், காமிக்ஸ் காமிக்ஸ்தவிர வேறில்லை! தலை மட்டும். செவ்வாய் கிரகத்து வைரமனிதன் மற்றும் பல லயன் பதிப்பக புத்தகங்கள்! மறக்க முடியா நண்பன் அவன்! இன்று பல களங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தாலும் நம்ம காமிக்ஸ் உலகை அவ்வப்போது விசாரிக்க தவறவில்லை! அவனது பெயருக்கு மாதம் ஒரு வாசகர் அனுப்பி இருந்தேன்! நீங்கள் வைத்து உள்ள ஒரு புத்தகத்தில் அவன் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறான். கிடைத்த நபர்கள் எனக்கு அனுப்பி வையுங்களேன்? மீண்டும் சந்திக்கிறேன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
As usually present sir
பதிலளிநீக்குwelcome ji!
பதிலளிநீக்குwow!!!!!!!!!
பதிலளிநீக்குsuperb!
Johny JI. Phantom story Super and other stories also. Please post more stories. We dont have this stories.
பதிலளிநீக்கு