திங்கள், 9 செப்டம்பர், 2013

மிரட்டும் மில்லேனியம் ஸ்பெஷல்!!!! -Part III

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தோழர்களே! 
கொழுக்கட்டை பிடிச்சா? எனக்கு ஒரு பார்சல்.....
அப்புறம்! வீட்ல இருக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் விநாயகரின் கதையை சொல்லிக் கொடுங்கள்! அன்னையின் மானம் காக்கத் தன் தலையை ஈந்த வரலாற்றினை, தாய், தந்தையே தனது இனிமையான உலகம் என சுற்றி வந்ததை என அனைத்தினையும் நமது பாரம்பரிய பெருமை மிக்க கதைகளையும் சொல்லிக் கொடுங்கள்! 
முகநூலில் நிறைய பகிர்ந்து அங்கிருக்கும் காமிக்ஸ் உலக தோழர்களோடு ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு காமிக்ஸின் பல கோணங்களையும் அலசி ஆராய்ந்து உடனே நண்பர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு அதற்கு உடனடியாக பதில் கொடுத்து என முக நூல் தனி ஒரு உலகம் நண்பர்களே! ஆனால் ஒரு பதிவினை பதிவாக பார்க்காமல் பகிர்வாகவே அங்கே பார்க்க இயலும்! எனவேதான் வலைப் பூ வாழ்ந்துகொண்டு இருக்கிறது! என்பது எனது தனிப் பட்ட கருத்து! முகநூலில் சந்தித்த நல்ல பல உள்ளங்கள் நிறைய விதங்களில் உதவி செய்துள்ளார்கள். அதில் காமிக்ஸ் உலக நண்பர்கள் ப்பா சான்சே இல்லை! அன்பை கொட்டித் தீர்த்து விட்டனர். தவிர காமிக்ஸ்களையும்! அந்த அன்பான உள்ளங்களுக்கு என்றும் என் நன்றிகள்! 
இந்த விளம்பரம் பழமையின் ஒட்டு மொத்த உருவத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது! ஆனால்; இப்போது இருக்கும் தலைமுறைகளை கிழிந்த அழுக்கு காகிதங்கள் அவ்வளவாக ஈர்ப்பதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிற உண்மை.

அவர்களின்ஆர்வத்தினை தூண்டி இனி வரும் காமிக்ஸ் உலகுக்கு கொண்டுவர வைக்க இந்த மாதிரி நல்ல நிலைக்கு தயார் செய்த புத்தகங்கள் வழி வகுக்கும் என்பதே என் நம்பிக்கை! ஒரே ஒரு தாள் கிடைத்தாலும் அது மிகவும் முக்கியமான வரலாற்றினை தாங்கி நிற்கிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை! எனவே பக்கங்கள் மட்டுமே தங்கள் வசம் இருந்தாலும் பாதுகாத்து வாருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!  

 இந்த மில்லேனியம் சிறப்பிதழில் மாயாவி கதை வெளியாகி உள்ளது. படித்து மகிழுங்கள்! லயன் புது புத்தகங்களை வாங்கி விட்டீர்களா?
 ஆதலால் அதகளம் செய்வீர் --லார்கோ விஞ்ச் பட்டையை கிளப்பும் சாகசம். நரகத்தின் எல்லையில்;பற்றி எரியும் பாலைவனம் கேப்டன் பிரின்ஸ் சாகசம் don't Miss It!!





































see you then!! 

2 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...