Friday, 10 April 2015

வாழ்ந்தது போதுமா? _016_1972_veera kesari Magazine from Sri Lanka

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே! 
ஈழத்துத்தமிழ் மணக்க எழுத்தப்பட்ட இந்த சந்ரா அவர்களது சித்திரக்கதை மிக அபூர்வமான ஒன்று. இதனை தமிழ் மண்ணில் இத்தனை காலம் பாதுகாத்து வைத்திருந்து இன்று நம்முடன் பகிர்ந்து கொண்ட தமிழ் காமிக்ஸ் ரசிகர் திரு. அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்கள் போலவே இன்னும் அரிய சித்திரக்கதைகளை பாதுகாத்து புதையலாக எண்ணி வைத்து வரும் அரிய நபர்களை இந்த வலைப்பூதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. இன்று வாழ்ந்தது போதுமா? தனது பதினாறாவது அத்தியாயத்தினை எட்டிப் பிடிக்கும் வேளைதனில் உங்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேர் இது போன்ற அரிய தொடர்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளீர்கள்? 
நிற்க. இந்த வாழ்ந்து போதுமா கதையமைப்பு உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா? இல்லை....நீங்கள் இரசித்துப் படித்து விட்டு கருத்தேதும் பதியாமல் செல்லும் எண்ணம் கொண்டவரா? ஏன் என்று கேட்டால் இடையே சிறிது தினங்கள் தொடர்ச்சி விட்டு விட்டு காத்திருந்தேன். எவருமே இந்த தொடரினைக் குறித்து இங்கு கதைக்கலை. என்ன நண்பர்களே? சரிதானா? அது குறித்து விவாதிக்கப் போவதுமில்லை இங்கே. எனக்கு நேரம் இருக்கும்போது, இதன் அத்தனைப் பாகங்களும் அரங்கேறும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

இதுவரை_கடத்தல் தொழிலுக்கு சிறையில் உள்ள கைதியாகத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தப்ப வைத்து பயன்படுத்தும் கும்பலின் பிடியில் சிக்கும் சிங்காரம் சிங்காரமாக மாறி கடத்தல் தொழிலைத் தொடர்கிறான். அவனுக்கு உத்தரவிடும் அம்மணி ஜெயஸ்ரீ. உடன் கடத்தல் தோழன் தாஸ் எனப் பயணம் தொடர்கிறது. தாஸ் கொஞ்சம் அதிகமாக ஜெயஸ்ரீயை நெருங்கிட எண்ணுகிறான். அவளது சுய ரூபம் தெரிந்து அதிர்கிறான். பின்னர்....  

அப்புறம், வேளச்சேரி உதவி ஆய்வாளர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவரது ஒரு கருத்து மிக முக்கியமெனப் பட்டதால் இங்கு பகிர்கிறேன். வேலை நிமித்தம் வெளியே செல்லுமிடங்களில் சிற்றுண்டிகளுடன் வைக்கப்படும் சட்னிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதே சமயம் அவற்றுடன் பரிமாறப்படும் சாம்பார் எடுத்துக் கொள்ளுங்கள். என்றார். ஏன் என்று கேட்டதற்கு சாம்பார் சுடவைக்கப்பட்டு பரிமாறப்படும் ஒரு சங்கதி என்பதால் அதில் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால் சட்னி வகைகள் அப்படி இல்லை. அரைத்து கெட்டியாக வைத்துக் கொண்டு தேவைப்படும்போது சாதாரணமாக என்ன நீர் என்று நாம் கண்டுகொள்ள முடியாத பகுதியில் பக்கெட்டில் இருக்கும் நீரை எடுத்து ஊற்றுகிறார்கள். அதுவும் சூடான பொருளல்லாததால் நம்மைத் தற்காப்பு செய்து கொள்ள நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். எனவே சட்னி வகைகளைத் தவிர்ப்பது நமது வயிற்றில் பன்ச்சர் ஆகாமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்றார். கவனித்துக் குறித்துக் கொள்ள வேண்டிய சங்கதியாகப் பட்டதால் பகிர்ந்து கொண்டேன். கவனம் மக்கா!
மிகப் பெரும் உணவகம் அது. அதன் பணியாளர் பயன்படுத்தும் கழிப்பறையை எட்டிப் பார்த்தால் ....அய்யகோ! இவர்களா நமக்குப் பரிமாறுகிறவர்கள் என்கிற அதிர்ச்சிக்குள்ளானவன் என்கிற வகையில் அதனையும் இங்கு பதிவு செய்கிறேன்.
என்றும் அதே அன்புடன்_நட்புடன்_பாசமுடன்_ஜானி_உங்கள் இனிய நண்பன்...
டொக்!    

No comments:

Post a Comment

ரத்னபாலா -1988-Aug_karur Guna

https://www.mediafire.com/file/ue7rhg7x6p4bjlo/