Sunday, 26 April 2015

உழைப்பாளர்களுக்கு சல்யூட்!

வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே!
மே ஒன்றாம் தேதி பிரதி வருடம் உழைப்பாளர் தினமாகக் கடந்து செல்கிறது. அவர்களது வியர்வையும், இரத்தமும், தேசங்களைக் கட்டி எழுப்புகின்றன. அவர்களுக்கு கொஞ்சம் அட்வான்சாக நன்றி தெரிவித்துக் கொண்டாடும் விதமாக இந்தப் பதிவை அர்ப்பணிக்கின்றேன். 
நாம் இன்று அனுபவித்து வரும் அனைத்து வசதிகளும், முன்னர் யாரோ சிந்தித்து அதனை செயல்படுத்தி அதன் பலனையே அனுபவித்து வருகிறோம் அல்லவா. ஒரு சிலரைத் தவிர அந்த உழைப்பாளிகள் முறைப்படி கவுரவிக்கப்படுவதோ, சரித்திர ஏடுகளில் நினைவு கூறப்படுவதோ இல்லை. ஆனால் அவர்களது கடின உழைப்பும், பொறுமை நிறைந்த பணியும் காலம் கடந்தும் நம்மை சகல வசதிகளுடனும் வாழ்விக்கிறது. அப்படி ஒரு உழைப்பாளர்களின் திரள்தான் இரயில்வே துறையின் கட்டுமானப் பணியாளர்கள். இந்தியா 1853 ஆம் வருடம் மும்பையில் இருந்து தானே வரையிலான இரயில் என்ஜினை இயக்கியது சரித்திரம்.  

சென்னை டு ஆற்காடு வரையிலான இரயில் தடம் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து 1856ல் துவங்கியது. முதல் இரயில் இராயபுரம் முதல் ஆற்காடு வரை இயக்கப்பட்டது. (அரக்கோணம் என்று வரலாறு பாடப் புத்தகம் சொல்கிறது) ஆற்காடு நவாபுடன் ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த நட்பின் அடிப்படையில் பார்த்தால் முன்னது மிக சரியாகவே தோன்றுகிறது. 
இந்திய இரயில்வே பக்கம் :

இன்றைக்கும் நினைத்துப் பார்க்கையில் இந்திய இரயில் பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளதல்லவா. விமானங்கள்-கட்டணம் உயர்வு, பேருந்துப் பயணமோ ஓரளவுக்கு மேல் சகிப்பது கடினம். ஆனால் இரயில் பயணம் குறித்து நினைத்துப்பார்த்தால் என்னவொரு சுகானுபவம்? நான் டெல்லியில் பணியில் இருந்த போது தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் என்னை சுமந்து செல்லும் ஒவ்வொரு தருணமுமே சுகானுபவமே. பர்த்தில் ஏறிக் காலை நீட்டிப் படுத்து ஒரு காமிக்ஸை கையில் எடுத்து வாசித்தால்....அலாதி அனுபவம்தான் போங்கள்.
இந்த கட்டுரை எனது இரயில் பயணங்களைக் குறித்தது அல்ல. நம்ம இரயில் கட்டுமான ஊழியர்களை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கவுரவிக்கும் விதமாக ஒரு சித்திரக்கதை விளக்கக் கட்டுரை ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆஹா அருமை. இதை ஏன் தமிழ்ப் பேசிட செய்யக் கூடாது என்கிற ஆர்வமிகுதியால் ஏதோ பண்ணி இருக்கேன். பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்???
உலகெங்கிலும் தங்கள் இன்னுயிரையும், இரத்தத்தினையும், வியர்வைத் துளிகளையும் நமக்காக, நம் நல்வாழ்வுக்காக சிந்திடும் உழைப்பாள சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கட்டுரை அர்ப்பணம்.

வாசிக்க:

நண்பர் ராஜ் முத்துக் குமார் அவர்களது மின்னும் மரணம் ரெவ்யூ: 

8 comments:

 1. செம!


  அட்டகாஷ்!!!

  ReplyDelete
 2. அருமையான பதிவு நண்பா

  ReplyDelete
 3. கலக்கல்பதிவு ஸார் !

  ReplyDelete
 4. அருமை. நன்றி ஜி

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பர்களே! இது போன்று மிக அவசியமான தகவல்கள் கிடைத்தால் உடனே மொழிபெயர்க்க முயல்கிறேன்!

  ReplyDelete

RC 312- உயிர் காக்கும் முத்திரை..முகமூடி வீரர் மாயாவி..

இந்த சித்திரக்கதையை தரவிறக்கம் செய்து வாசிக்க... உயிர் காக்கும் முத்திரை இந்த சித்திரக்கதையை கொண்டுவருவதில் ஆர்வமாக உத...