திங்கள், 4 மே, 2015

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--001

வணக்கம் தோழமை உள்ளங்களே! 
இந்த மாத இறுதியில் உதவி ஆய்வாளருக்கான தேர்வினை எதிர்கொள்ள இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். உங்களில் துறை ரீதியிலான தேர்வினை எதிர்கொள்வோருக்காக இந்த கேள்வி -பதில் தொகுப்பினை பதிவிட்டுள்ளேன். அடுத்தடுத்து நேரம் வாகாக அமைந்தால் இன்னும் கொஞ்சம் பதிவிடுகிறேன். இந்த கேள்வி-பதில்கள் திரு.S.R.ஜாங்கிட் I.P.S. அவர்கள் சென்னை புறநகர் காவல் ஆணையாளராக இருந்தபோது அவரது முயற்சியால் தொகுக்கப்பட்டன. அவருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
நல்லாப் படிங்க பாஸ்!!!

1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume) உள்ளது?
-மூன்று தொகுதிகளாக.
2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?
-856 ஆணைகள்
3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?
-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.
4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?
- காவல் நிலை ஆணை எண்  262
5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets) யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?
-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி
6. காவல் நிலை ஆணை எண் 295 பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.
-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)
7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)() பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.
-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.
8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?
- காவல் நிலை ஆணை எண் 566
9. வழக்கு நாட்குறிப்பு (case dairy) குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
- காவல் நிலை ஆணை எண் 567
10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி
-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.
11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?
-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.
12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
- காவல் நிலை ஆணை எண் 574
13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?
- காவல் நிலை ஆணை எண் 576
14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண் 578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....
-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.
15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?
- காவல் நிலை ஆணை எண் 622
16. காவல் நிலை ஆணை எண் 706 எதைப்பற்றிக் கூறுகிறது?
-பொது நாட்குறிப்பு (general dairy)
17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?
- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.
18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?
-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.
19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?
-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.
20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?
- மூன்றாவது கட்டத்தில்
21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.
-படிவம் எண் 103
22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?
-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.
23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...
-716
24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?
-அலுவல் பட்டியல் (Duty Roaster)
25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

-மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகம்.
அப்புறம் நண்பர்களே நடப்பு நிகழ்வுகளை மாதாமாதம் நீங்கள் படித்தறிய வசதியாக கீழ்க்கண்ட தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். டோண்ட் மிஸ் இட்! வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

http://www.tnpscportal.in/2014/06/tnpsc-current-affairs-in-tamil-june-2014.html

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

3 கருத்துகள்:

  1. Prepare your exams with question cloud by clearing our mock test series question cloud is an online educational platform with millions of questions syllabus wise. use our platform and well prepare for exams

    please click on the below link for more information : https://www.questioncloud.in/

    பதிலளிநீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...