Saturday, 9 May 2015

கொஞ்சம் தண்ணீர் கொடுங்க பாஸ்!

வணக்கங்க!
அடிக்கிற கடும் வெயிலுக்குத் தப்பிக்க வழியே இல்லிங்க! வெயிலுக்கு எங்காவது ஒதுங்கலாம்னா மெட்ரோ ரெயில் பாலத்துக்குக் கீழதான்ங்க ஒதுங்கணும். மழைக் காலத்துல நாம ஆளுக்கு ஒரு மரம் வெச்சி இருந்தா அது இப்போ ரொம்ப பிரயோஜனமா இருக்குமில்லிங்களா? கொஞ்சம் யோசிங்க! மரங்களை வைப்பவங்க மாமனிதர்தானுங்க!
கோடை மழை கொஞ்சம் பூமிய நனைக்காதான்னு வானத்தை உத்து உத்துப் பாக்குறதுல என்னங்க இருக்கு. பூமில மரம் வந்தா வானத்துல நீர்கட்டுமுங்க. அது மழையா பெய்ய மரங்க வேணுமுங்க. இருக்குற மரத்தை வெட்ட மனம் இருக்குறவங்க புதுசா ஒரு கன்றை நட ஏனுங்க தயங்குறிங்க?
தண்ணீ தண்ணீ னு நம்ம தாகத்துல தவிக்குற இந்த காலத்துலயாவது கொஞ்சம் சிந்திங்க பாஸ்! ஆண்ராய்டு அப்பிளிகேஷன் ஏதும் இதுக்கு இல்லிங்க! உங்க மனம்தான் பாஸு அப்பிளிக்கேசனு!
அங்கங்க தண்ணீருக்காக குடம் குடமா பிளாஸ்டிக்குகளை வெச்சிக்கிட்டு அவதிப்படற நம்ம தாய்க்குலங்களை கொஞ்சம் மனசுல வெய்யிங்க. இவங்க படற அவஸ்தையில நமக்கும் ஒரு பங்கிருக்கு பாஸ்.
வசதிப்படறவங்க வெயிலுக்கு இளநீ, தர்பூஸ் னு வாங்கி சாப்பிட்டு தங்க தாகத்தை தணிக்கிறாங்க. வசதிப்படாத மக்க ஒரு வாயி தண்ணி எடுத்து தொண்டையை நனைச்சாதானுங்களே மறு வேலையப் பாக்க முடியும். அதும் பஞ்சம்னா என்னங்க பண்றது பாஸ்.
அடுத்த மாநிலம் தண்ணி தர்றது இருக்கட்டும் இருக்க தண்ணிய எப்படி காக்கிறதுன்னு சிந்திங்க பாஸ். அதுக்கும் மரங்களா பார்த்து நட்டு வெச்சி மட்டும்தானுங்க நம்ம மனுசப்பய புள்ளங்க பிழைக்க முடியும். சரிதானுங்களே?
ஒரு பக்கம் அக்கினி தகிக்க, மறுபக்கம் நாம தாகத்துல தவிக்க இருக்கிற மரங்களையும் பலி போடறது – மரங்களே இல்லா மகத்துவமான கான்கிரீட் காடா நம்ம ஊர மாத்துறது. நாம சிட்டி பயலுக அப்படின்னு தம்பட்டம் அடிக்க மட்டும்தான் உதவுது பாஸு!
இப்படிப்பட்ட ஒரு சூழல்ல இந்த குறுங்கதைய கொடுத்து உங்க துன்பத்த குறைச்சி சிந்தனையைத் தூண்டிவிட நம்ம நண்பர் ரமேஷ் கொடுத்த காமிக்ஸின் ஒரு சின்னஞ்சிறு பகுதி இங்கன உங்க பார்வைக்குப் பந்தி வெக்கிறேனுங்க!
படிச்சிட்டு ஒரு வாய் தண்ணி எடுத்துக் குடிங்க மக்கா! தண்ணி தாகம் ரொம்ப கவனமா கவனிக்க வேண்டியதுங்க. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆசுபத்திரிக்கு போனேனுங்க. அங்க கிட்னிய ஸ்கான் பண்ணி (ஹி ஹி நமக்கே ஸ்கானா?) ஒரு குட்டிக் கல்லு இருக்கறதா சொல்லிபுட்டாங்க. ஆத்தாடி! கதை முடிஞ்சதான்னு நொந்து போனேனுங்க. அப்போதான் பெரிய்ய டாக்டரு வந்து இது மூணு மில்லி (?) மீட்டருதான். நூறு பேருக்கு ஸ்கான் பண்ணாலும் தொண்ணத்தாறு பேருக்கு இந்த பிரச்சினை இருக்குமாம். அப்பப்போ உங்க டேங்கை காலி பண்ணிடனுமுங்கன்னு சொன்னாருங்க. நல்லா தண்ணி குடிக்கணுமுங்க. கவனிங்க விலை ஒசந்த எளனி குடிக்க சொல்லல, ஆனா தண்ணி குடிக்க சொல்றாருங்க. தண்ணி குடிக்குறது ரொம்ப முக்கியமுங்க. நம்ம உடம்புல பெரும்பகுதி தண்ணியால ஆனது. உலகத்துல நிலத்த விட நீருதாங்க அதிகமா இருக்குது. நீரின்றி அமையாது உலகுன்னு ஒரு முது மொழிய பெரியவங்க சொல்லி வெச்சி போனத நெனச்சிப் பாருங்க.
இப்போ கதைக்கு போலாமுங்க.
எங்கியோ ஒரு தண்ணியில்லாக் காட்டுக்குள்ள நம்ம அண்ணாச்சி வண்டிய விட்டுர்றாருங்க. அண்ணாச்சி வண்டி நெறைய குண்டு வெச்சி இருக்காருங்க ஆனா ஒரு பாட்டல் தண்ணி இல்லிங்க!
இந்தக் கொடுமைல ஒரு ரோபோவ தண்ணி எடுத்துட்டு வர சொல்றாருங்க நம்ம அண்ணாச்சி!
அதுவும் சின்சியரா கிளம்பிப் போகுது. அதுக்கென்ன வெயிலா மழையா அதும்பாட்டு கிளம்பிட்டுது. அப்புறம்???

வாசிங்க.

இந்தக் கதைக்கு சொந்தக் காரங்க Zhang Xiaoyu, ankama editions & Krakenஆகியோருக்கு நன்றிங்க. (credits)
அந்த ரோபோவுக்கு ஒரு சொம்பு தண்ணிய கொடுத்து அனுப்புங்க மக்கா! என்ன நான் சொல்றது? அனுப்புனவன் பாவம்தானே?(ஆனா அவன் கருவாடாகி இருப்பாங்கறது வேற விசயம் ஹி ஹி ஹி ) 

என்னிக்கும் அதேமாரி அன்போட ஒங்களோட நண்பேன் –ஜானி என்கிற ஜான் சைமன்      

4 comments:

  1. எதிர்கால உலகு குறித்து நல்ல பதிவு சார்,

    மனிதர் அழிவும் ஆபத்தும் தம் காலின் கீழே வரும்வரை திருந்த மாட்டார்கள்

    ReplyDelete
  2. உண்மை நண்பரே! உலகத்தின் தேவைகள் என்று இப்போது கருதப்படுவது என்ன என்ற வினாவை உலக மானுடர்கள் ஒரு முறை எழுப்பிப் பார்க்க வேண்டும் என்பதே zhang xiaoyuவின் எண்ணமாக இருந்திருக்க கூடும்!

    ReplyDelete

RC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... இந்த ராணி காமிக்ஸ் அபாய நகரம் உருவாக்கத்தில் உதவிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்... ...